சாட்ஜிபிடி கடந்த ஆண்டு இறுதியில் அதாவது 2022 ஆம் ஆண்டில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இதன் வருகைக்குப் பிறகு டெக் உலகில் பெரும் புரட்சியே ஏற்பட்டுள்ளது. பல வேலைகளை நொடியில் முடித்துக் கொடுக்கும் இந்த தொழில்நுட்பத்துக்கு நாளுக்கு நாள் யூசர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர். கூகுள் நிறுவனமே ஓபன் ஏஐ நிறுவனம் வெளியிட்ட சாட்ஜிபிடிக்கு கிடைத்த வரவேற்பை கண்டு ஆடிப்போய் இருக்கிறது. மேலும் அதற்கு போட்டியாக கூகுள் பார்டை மிகவும் உயர்ந்த தொழில்நுட்பங்களை கொண்டு வடிவமைத்துக் கொண்டிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க ஓபன் ஏஐ நிறுவனத்தில் சாட்ஜிபிடி உருவாக்கத்தில் பங்கு வகித்த எலான் மஸ்க், அது குறித்து இப்போது பல இடங்களில் விமர்சனங்களை வைத்து வருகிறார்.
எலான் மஸ்க் விமர்சனம்
ஏஐ தொழில்நுட்பம் மிகவும் கொடியதாக இருக்கும் என நினைக்கிறேன். அதனுடைய எல்லையை என்னால் யூகிக்கவே முடியவில்லை என சில பேட்டிகளில் தெரிவித்திருந்தார். மேலும், பழமைவாதிகளின் கையில் கிடைத்தபிறகு இந்த தொழில்நுட்பம் ஏற்படுத்தப்போகும் பாதிப்பு குறித்தும் கவலை தெரிவித்திருந்தார். அவரின் இந்த விமர்சனங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தின. எலான் மஸ்க் 2018 ஆம் ஆண்டு வரை ஓபன் ஏஐ நிறுவனத்தில் இருந்தார். அன்பின்பு அதில் இருந்து வெளியேறினார்.
மேலும் படிக்க | எலான் மஸ்க் சொல்வதில் நியாயம் இருக்கு: சாட்ஜிபிடி இணை நிறுவனர் ஒப்புதல்
ஓபன்ஏஐ இணை நிறுவனர் பதில்
எலான் மஸ்க் விமர்சனங்களுக்கு முதன்முறையாக ஓபன் ஏஐ இணை நிறுவனர் கிரேக் ப்ரோக்மேன் பதில் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள அந்த பதிலில் எலான் மஸ்க் வைத்திருக்கும் விமர்சனங்களை மதிக்கிறோம். சாட்ஜிபிடி மற்றும் ஏஐ தொழில்நுட்பம் குறித்து எங்களை நோக்கி வைக்கப்படும் விமர்சனங்களுக்கு நாங்கள் பதில் அளிக்க காத்திருக்கிறோம். அதேநேரத்தில் நாங்கள் உருவாக்கிய அந்த தொழில்நுட்பம், செயல்படுத்திய அமைப்பு ஆகியவை விரும்பிய மதிப்புகளை அளிக்கவில்லை. நாங்கள் நிவர்த்தி செய்யும் வேகத்திலும் அது இப்போது இல்லை என தெரிவித்துள்ளார். அதாவது சாட்ஜிபிடி மற்றும் ஏஐ தொழில்நுட்பங்களின் பயன்பாட்டின் வேகம் செல்வது குறித்தும், அதன் பயன்படுத்தும் முறை குறித்தும் இவ்வாறு கூறியுள்ளார்.
லாபநோகமற்ற தொழில்நுட்பம்
ஓபன் ஏஐ நிறுவனத்தில் இருந்து வெளியேறியதற்கான காரணம் குறித்து மஸ்க் பேசும்போது, நாங்கள் ஓபன் ஏஐ தொழில்நுட்பத்தை லாப நோக்கமற்றதாக இருக்க வேண்டும் என உருவாக்கினோம். அதற்காகவே அதற்கு ஓபன் ஏஐ என பெயரிட்டோம். ஆனால் அது இப்போது அப்படியானதாக இருக்கவில்லை. கூகுளுக்கு போட்டியானதாக இருக்க வேண்டும் என நினைத்த நிலையில், மைக்ரோசாப்ட் வசம் ஓபன் ஏஐ சென்றுவிட்டது என தன்னுடைய ஏமாற்றத்தை தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க | CHATGPT: அடுத்த வாரம் அறிமுகமாகும் GPT-4..! வீடியோ துறை ஆட்டம் காணப்போகிறது...!
மேலும் படிக்க | ChatGPT: ஆப்பிள் வாட்சில் சாட்ஜிபிடி..! வாட்ஸ்அப் முதல் வாய்ஸ் கால் வரை செய்யலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ