Cholesterol Control Tips: கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளதா? சில ஆரோக்கியமான உணவுகளின் மூலம் இதை சரி செய்யலாம். அந்த உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Cholesterol Control Tips: உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால் அதனால் பல உபாதைகளை நாம் சந்திக்க நேரிடலாம். மாரடைப்பு, பக்கவாதம், இதய செயலிழப்பு, மூளை பக்கவாதம் ஆகியவை இதனால் ஏற்படக்கூடும் முக்கிய பிரச்சனைகள் ஆகும். கொலஸ்ட்ரால் அளவை எப்போதும் கட்டுக்குள் வைக்க வேண்டியது மிக அவசியம். இதற்கு நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் வாழ்க்கை முறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
மக்களை வாட்டி வதைக்கும் வாழ்கை முறை நோய்களில் உயர் கொலஸ்ட்ரால் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது. இந்த காலத்தில் பலர் இந்த பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள்.
உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால், அது மாரடைப்பு, பக்கவாதம், இதய கோளாறுகள் போன்ற பல வித பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆகையால் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க வேண்டியது மிக அவசியமாகும்.
கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சில ஆரோக்கியமான உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சமச்சீர் உணவு: கொழுப்பைக் குறைக்க சமச்சீர் உணவு மிகவும் முக்கியம். பச்சை இலைக் காய்கறிகளில் டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் குறைவாக உள்ளன. இந்த உணவுகளை தினமும் சாப்பிட மறக்காதீர்கள். இவை கொழுப்பை குறைத்து உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
நெல்லிக்காய்: நெல்லிக்காய் பல வித ஆரோக்கிய நன்மைகள் அடங்கிய ஒரு பொக்கிஷமாக பார்க்கப்படுகின்றது. இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும், கெட்ட கொழுப்பை குறைக்க நெல்லிக்காய் சாறு குடிப்பதும் நன்மை பயக்கும்.
இஞ்சி: கொலஸ்ட்ரால் நோயாளிகள் தங்கள் உணவில் அடிக்கடை இஞ்சியை சேர்த்துக்கொள்ளலாம். இஞ்சி நமது உடலில் செரிமானத்தை சீராக்குகிறது. எடை இழப்பிலும் இஞ்சி உதவும். இது நரம்புகளில் படிந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது.
பூண்டு: கொழுப்பை குறைக்கும் உணவுகளில் பூண்டுக்கு முக்கிய இடம் உள்ளது. தினமும் 2-3 பூண்டு பற்களை உட்கொள்வது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இது செரிமானத்தை சரி செய்து வாயுத்தொல்லையையும் போக்குகிறது. பூண்டு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.