சீறிப்பாயும் காளைகள்! உற்சாகத்துடன் தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 14, 2021, 09:00 AM IST
சீறிப்பாயும் காளைகள்! உற்சாகத்துடன் தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!  title=

பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது பொங்கல் பண்டிகையான இன்று அவனியாபுரத்தில் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு கொரோனா (Coronavirus) காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன், அரசு வகுத்து தந்துள்ள விதிகளின்படி ஜல்லிக்கட்டு (Jallikattu) போட்டிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. 

ALSO READ | தமிழகத்தில் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு #COVID19 பரிசோதனை

இன்று காலை 8 மணிக்கு உறுதிமொழி வாசிக்கப்பட்டு போட்டி தொடங்கியது. அமைச்சர் செல்லூர் ராஜூ (Sellur K. Raju) கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்தார். அவனியாபுரத்தில் (Avaniyapuram) முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதன்பின் மற்ற காளைகள் ஒவ்வொன்றாக களத்தில் இறக்கப்பட்டன. 

 

 

வாடிவாசல் வழியாக சீறிப்பாயும் காளைகளின் திமிலை மாடுபிடி வீரர்கள் பிடித்து காளைகளை அடக்க முயன்று வருகின்றனர். இந்த காட்சிகள் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கின்றன. அங்கு இருக்கும் பார்வையாளர்கள் வீரர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

 

 

முன்னதாக இந்த போட்டியில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்கள், மாடுகளின் உரிமையாளர்கள் அனைவருக்கும் கொரோனா (Corona Test) பரிசோதனை செய்யப்பட்டு, இன்றைய ஜல்லிக்கட்டு போட்டியில் 788 காளைகள் களமிறக்கப்படுகின்றன. 430 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர்.

ALSO READ | ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி; கட்டுபாடுகள் என்னென்ன?

ஜல்லிக்கட்டு போட்டியை காண ஏராளமான பார்வையாளர்கள் வந்துள்ளனர். மேலும் மாடுபிடி வீரர்களுக்கு களத்தில் காயம் ஏற்படக் கூடாது என்பதற்காக தரையில் வைக்கோல்கள் பரப்பப்பட்டுள்ளன. இருபுறமும் மரக்கட்டைகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மாலை 4 மணி வரை போட்டி நடைபெறுகிறது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News