இந்த கடைகளில் தக்காளி, வெங்காயம் பாதி விலையில் விற்பனை - அரசு நடவடிக்கை

Tomato, Onion Price Tamilnadu : தமிழக அரசின் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி, வெங்காயம் எல்லாம் மிக குறைவாக கிடைக்கிறது.

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 9, 2024, 10:04 AM IST
  • பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் அலைமோதும் கூட்டம்
  • தக்காளி, வெங்காயம் குறைந்த விலையில் விற்பனை
  • சென்னையில் பல்வேறு இடங்களில் இந்த கடை அமைக்கப்பட்டுள்ளது
இந்த கடைகளில் தக்காளி, வெங்காயம் பாதி விலையில் விற்பனை - அரசு நடவடிக்கை title=

Tamilnadu Vegetables Price News Tamil : வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதால் சென்னைக்கு வரும் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. குறிப்பாக, வெங்காயம், தக்காளி விலை எல்லாம் ஜெட் வேகத்தில் எகிறிக் கொண்டிருக்கிறது. மார்க்கெட்டில் நாள் ஒரு விலைக்கு தக்காளி, வெங்காயம் எல்லாம் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இது பொதுமக்களுக்கு பெரும் சிரமமாகவும் மாறியுள்ளது. காய்கறிகளின் விலை உயர்வை தமிழக அரசு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக அரசே தக்காளி, வெங்காயம் விற்பனையிலும் இறங்கியுள்ளது. அரசு விற்பனை செய்யும் கடைகளில் தக்காளி, வெங்காயம் எல்லாம் மார்க்கெட்டை விட மிக குறைவான விலைக்கு விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. 

தக்காளி, வெங்காயம் விற்பனை

தமிழக அரசின் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் வழியாகவே விலை குறைவாக தக்காளி, வெங்காயம் எல்லாம் விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கடைகளில் வெங்காயம் கிலோ 40 ரூபாய், தக்காளி 60 ரூபாய் மட்டுமே. வெளி மார்க்கெட்டுகளை ஒப்பிடும்போது, இந்த கடைகளில் காய்கறி விலை என்பது குறைந்தபட்சம் மக்கள் வாங்கும் விலையில் இருப்பதாக இருக்கிறது.  தமிழ்நாடு அரசு நேரடியாக மகாராஷ்டிராவில் இருந்து காய்கறிகளை இறக்குமதி செய்து பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளுக்கு விநியோகம் செய்கிறது. மார்க்கெட்டைப் பொறுத்தவரை வெங்காயம் கிலோ 55 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

மேலும் படிக்க | தமிழக அரசு சூப்பர் பிளான்.. 3 நாள் தொடர் விடுமுறை.. www.tnstc.in

பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் அமைந்துள்ள இடங்கள்

ஆனால் பண்ணை பசுமை கடையில் ஒருவருக்கு அதிகபட்சம் 2 கிலோ மட்டுமே வாங்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் குறைந்த விலையில் வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. சென்னையில் பல்வேறு இடங்களில் பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறிகள் கடை அமைக்கப்பட்டிருக்கிறது. தேனாம்பேட்டை, மைலாப்பூர், திருவல்லிக்கேணி மற்றும் அண்ணாநகர் ஆகிய இடங்களில் தமிழக அரசின் இந்த கடைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

விலை ஏற்றத்துக்கு என்ன காரணம்?

தமிழ்நாட்டில் காய்கறிகள் விலை ஏற்றத்துக்கு ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழையே காரணம். குறிப்பாக ஆந்திராவில் பல்வேறு இடங்களில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. கர்நாடகாவில் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த காய்கறிகள் எல்லாம் சேதமடைந்திருக்கின்றன. இவற்றால் தமிழ்நாட்டுக்கு காய்கறிகளின் வரத்து குறைந்துவிட்டது. இதனால், மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை ஏற்றத்தையும் சந்தித்திருக்கிறது.  இன்னும் வரும் நாட்களிலும் தக்காளி விலை ஏறுவதற்கே வாய்ப்பு இருக்கிறது. 

காய்கறிகள் விலை ;

தக்காளி அதிகபட்ச விலை 82 ரூபாபய், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 25 ரூபாய், நவீன் தக்காளி 190 ரூபாய், பெங்களூர் தக்காளி குறைந்தபட்ச விலை 62 ரூபாய், அதிகபட்ச விலை 72 ரூபாய். சாம்பார் வெங்காயம் குறைந்தபட்சம் 30 ரூபாய், அதிகபட்சம் 70 ரூபாய். பெரிய வங்காயம் குறைந்தபட்ச விலை 32 ரூபாய், அதிகபட்ச விலை 55 ரூபாய். ஊர்களுக்கு ஏற்றார்போல் விலையும் மாறும். சென்னையில் விற்பனையாகும் காய்கறிகளின் விலை இது.

மேலும் படிக்க | உதயநிதி டி ஷர்ட் அணிவது அவரது அரை வேக்காடுத்தனத்தை காட்டுகிறது - ஜெயக்குமார்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News