தமிழக பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை ஐ‌ஏ‌எஸ் படித்தாரா? கேள்வி எழுப்பிய அமைச்சர்

திருவிளையாடல் படத்தில் வரும் புலவர்கள் உரையாடல் போல பிரிக்க முடியாதது எதுவென்று கேட்டால், அது திமுகவும் (DMK) ஊழலும் தான் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவேத் தெரியும் என்றார் அமைச்சர் கடம்பூர் ராஜு (Kadambur Raju).

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 22, 2020, 09:38 PM IST
  • ஆறாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் வழங்கும் கொள்கலனை திறந்து வைத்தார் அமைச்சர்.
  • பிரிக்க முடியாதது திமுகவும் ஊழலும் தான் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவேத் தெரியும்: அமைச்சர்.
  • யாரும் சொந்த பணத்தை கொடுக்கவில்லை. மக்கள் பணத்தை மக்களுக்கு கொடுக்கிறோம்.
தமிழக பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை ஐ‌ஏ‌எஸ் படித்தாரா? கேள்வி எழுப்பிய அமைச்சர் title=

தூத்துக்குடி: தென் மாவட்டமான தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆறாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் வழங்கும் கொள்கலன் நிறுவப்பட்டுள்ளது. இதை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு (Kadambur Raju) இன்று திறந்து வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை ஆகியோரின் குற்றச்சாட்டை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

அதாவது தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் (MK Stalin), தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து அதிமுக கட்சி தலைமையின் மீது 97 பக்க ஊழல் பட்டியலை அளிப்பது என்பது ஒருநாள் செய்தியாக தான் இருக்கும். அதில் ஒரு அளவுக்கு கூட உண்மை இருக்காது என்றார். மேலும் திருவிளையாடல் படத்தில் வரும் புலவர்கள் உரையாடல் போல பிரிக்க முடியாதது எதுவென்று கேட்டால், அது திமுகவும் ஊழலும் தான் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவேத் தெரியும் என்றார்.

அதேபோல தமிழக பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை (BJP Annamalai), இரண்டாயிரம் ரூபாய் நம்பி ஏமாறாதீர்கள் என்று சொல்வது, அவர் ஐ‌ஏ‌எஸ் (IAS) படித்தாரா என்பது தெரியவில்லை. யாரும் சொந்த பணத்தை கொடுக்கவில்லை. மக்கள் பணத்தை மக்களுக்கு கொடுக்கிறோம். மக்களின் வரிப்பணத்தை மக்களுக்கு கொடுப்பதை வரவேற்க வேண்டுமே தவிர, அதில் குற்றம் குறைகள் கூறுபவர்களை அறியாதவர்கள் என எண்ணுவதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார். மேலும் பொங்கல் பரிசு என்பது மக்களுக்கு வருடா வருடம் கொடுப்பது வழக்கம். இது நடைமுறையில் இருப்பது தான். கொரோனா தொற்று காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதால், இந்தமுறை பொங்கல் பரிசு அதிகமாக வழங்கப்படுகிறது எனவும் விளக்கக்ம் அளித்தார். 

ALSO READ |  விரைவில் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படும்: அமைச்சர் கடம்பூர் ராஜு

முன்னதாக, இன்று காலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை (Banwarilal Purohit) சந்தித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், 97 பக்கங்கள் கொண்ட ஊழல் புகார் பட்டியலை அளித்தனர். அதில் தமிழ முதல்வர், துணை முதல்வர் உட்பட எட்டு அமைச்சர்கள் மீது ஊழல் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

ஆளுநரை சந்திக்க சென்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன், கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு, துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா உள்ளிட்டோர் உடன் சென்றனர். 

ALSO READ |  Tamil Nadu Election: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் எப்போது நடைபெறும் தெரியுமா?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News