டிராகன் vs NEEK - முதல் நாள் வசூல் எவ்வளவு...? இளைஞர்களை கவர்ந்தது எந்த படம்...?

Dragon vs NEEK Day 1 Collection: உலகம் முழுவதும் நேற்று (பிப். 21) வெளியான டிராகன் மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய இரண்டு திரைப்படங்களின் முதல் நாள் வசூல் விவரத்தை இங்கு காணலாம்.

டிராகன் (Dragon) மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் (NEEK) ஆகிய இரண்டு திரைப்படங்களும் இளைஞர்கள், மாணவர்களை சுற்றி இளம் நடிகர்களை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களாகும். ஓ மை கடவுளே பட புகழ் அஸ்வத் மாரிமுத்து (Director Aswath Marimuthu) டிராகன் திரைப்படத்தை இயக்கி உள்ளார். நடிகர் தனுஷ் (Actor Dhanush) நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தை இயக்கி உள்ளார்.

1 /8

கடந்த 2024ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு அவ்வளவு சிறப்பான ஒரு ஆண்டாக அமையவில்லை. 200 படங்களுக்கு மேல் கடந்தாண்டு வெளியானாலும் அதில் சுமார் 20 படங்கள் மட்டுமே லாபம் பார்த்ததாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது.

2 /8

அந்த வகையில், 2025ஆம் ஆண்டை தமிழ் சினிமா மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்த்தாலும், ஜனவரியிலேயே சில ஏமாற்றங்களும் வந்தன. முதலில், விடாமுயற்சி திரைப்படம் (Vidaamuyarchi) பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகாதது பெரியளவில் பாதகமாக அமைந்தது.

3 /8

இருப்பினும், மதகத ராஜா, குடும்பஸ்தன், காதலிக்க நேரமில்லை ஆகிய திரைப்படங்கள் ஜனவரியில் ரீலிஸாகி ஓரளவுக்கு வசூலித்துள்ளன. பிப்ரவரி தொடக்கத்தில் ரிலீஸான விடாமுயற்சி எதிர்பார்த்த அளவிற்கு வசூலிக்கவில்லை என்றாலும், தமிழில் இதுவரை 2025இல் வெளியான திரைப்படங்களில் அதிகம் வசூலித்த திரைப்படம் அதுதான்.   

4 /8

இந்நிலையில், நேற்று திரையரங்குகளில் வெளியான டிராகன் மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் (NEEK) ஆகிய திரைப்படங்கள் மீதும் பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்தன. இந்த 2 திரைப்படங்களும் இளைஞர்களை குறிவைத்து களமிறங்கியதால் எது வசூலில் முந்தப்போகிறது என பலரும் எதிர்பார்த்திருந்தனர். அந்த வகையில், தற்போது இரண்டு திரைப்படங்களின் முதல் நாள் வசூல் விவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதனை இங்கு காணலாம்.

5 /8

தனுஷ் இயக்கத்தில், மேத்யூஸ் தாமஸ், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், புதுமுக நடிகராக அறிமுகமாகி உள்ள தனுஷின் சகோதரியின் மகனான பவிஷ் நாராயணன் என பெரிய இளைஞர் பட்டாளமே நடித்துள்ள திரைப்படம் தான் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். (Nilavukku Enmel Ennadi Kobam)

6 /8

இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை முதல் நாளில் பெற்றது எனலாம். மாணவர்கள், இளைஞர்கள் இடையேயே கலவையான விமர்சனங்களே உள்ளன. முதல் நாளில் NEEK திரைப்படம் ரூ.1.15 கோடியையே (NEEK Day 1 Collection) வசூலித்துள்ளது.

7 /8

அதேபோல், 'ஓ மை கடவுளே' பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan), அனுபாமா பரமேஸ்வரன், கடாயு லோஹர் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் தான் டிராகன் (Dragon)

8 /8

இந்த திரைப்படத்திற்கு நேற்றில் இருந்து சிறப்பான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இளைஞர்கள், மாணவர்கள் மட்டுமின்றி குடும்பமாகவும் இத்திரைப்படத்தை தைரியமாக பார்க்கலாம் என கூறுகின்றனர். குடும்ப சென்டிமன்ட் படத்தில் சிறப்பாக வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். டிராகன் திரைப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.6 கோடியை வசூலித்திருப்பதாக (Dragon Day 1 Collection) தகவல்கள் வெளியாகி உள்ளன.