எச்சரிக்கை... பிரிட்ஜில் வைக்கக் கூடாத சில உணவுகள்... சுவை சத்து இரண்டும் காலியாகும்

இன்றைய பிஸியான வாழ்க்கையில், நேரத்தை மிச்சப்படுத்தப்படும் வேறு காரணங்களுக்காகவும் பல வகையான உணவுகளை ஃபிரிட்ஜில் வைத்துப் பாதுகாக்கிறோம்.

சில பொருட்களை பிரிட்ஜில் வைப்பதால், அதன் சுவை, ஊட்டச்சத்து ஆகிய இரண்டும் காலியாகி விடும் என எச்சரிக்கின்றனர். இந்நிலையில், பிரிட்ஜில் வைக்கக் கூடாத உணவு பொருட்கள் எவை என்பதை அறிந்து கொள்ளலாம்.

1 /9

பிரிட்ஜில் என்னும் ரெஃரெஜிரேட்டர் இல்லாத வீடுகளை காண்பது அரிது. அதில் சில பொருட்களை வைப்பதால், அதிக நாள் கெட்டுப் போகாமல் இருக்கும் என்றாலும், சில உணவுகளை ஃபிரிட்ஜில் வைப்பதால்,  அவற்றில் சுவை பாதிக்கப்படுவதோடு, ஊட்டச்சத்துக்களும் அழிந்து விடும்.

2 /9

தக்காளியை ஃப்ரிட்ஜில் வைப்பதால், அதன் உள் சவ்வு உடைந்து, சீக்கிரம் கெட்டுவிடும். இது தவிர, தக்காளி நன்கு  பழுக்கும் போது எத்திலீன் வாயுவை வெளியிடும். ஆனால், குளிர்சாதன பெட்டியின் குளிர்ச்சி எத்திலீன் உற்பத்தியை நிறுத்திவிடும். இது தக்காளியின் சுவையை மாற்றி விடும்.

3 /9

வெள்ளரிக்காயை குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது. இதனால், வெள்ளரிக்காயின் நீர் சத்து நீங்கி, கசப்ப்பு தன்மையும் ஏற்படும். இது தவிர வெள்ளரிக்காயில் உள்ள சத்துக்களும் அழிந்துவிடும்.  

4 /9

மசாலாப் பொருட்கள்:  தூளாக்காமல் முழுமையாக இருக்கும் மசாலாப் பொருட்களை பிரிட்ஜில் வைத்தால்,  சுவை மணம் இரண்டும் பாதிக்கப்படலாம் என்கின்றனர் நிபுணர்கள். அவை ஈரப்பதத்தை இழுத்துக் கொள்வதே இதற்கு காரணம்.

5 /9

உலர் பழங்கள்:  பொதுவாக பலர் உலர் பழங்களை பிரிட்ஜில் வைப்பார்கள். எனினும் இதனை பிரிட்ஜில் வைக்க கூடாது என்கின்றனர் நிபுணர்கள். குளிர்ச்சி மற்றும் ஈரப்பதம் இரண்டும் உலர் பழங்களின் சுவையை பாதிக்கும்.

6 /9

ப்ரெட்: பிரெட் போன்ற பேக்கரி வகை உணவுகள் எதையுமே ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது.  இதன் சுவையும் மிருதுவான தன்மையும் நீடிக்க இது அவசியம். பிரிட்ஜில் வைத்தால் சுவை பாதிக்கப்படுவதோடு,  மிருதுதன்மை நீங்கி விடும்.

7 /9

முட்டை: முட்டையை பிரிட்ஜில் வைப்பதால் அதன் சுவை கெட்டு விடும் என்பதோடு, அதனை, பிரிட்ஜில் வைத்து வெளியில் எடுத்தால்,  சீக்கிரம் கெடத் தொடங்கும். அதிலும் சமைத்த முட்டையை வைக்கவே கூடாது.

8 /9

சுத்தமான தேன் இயற்கையிலேயே ஆயிரம் ஆண்டுகளுக்கு கெட்டுப் போகாது. தேனை சாதாரண தட்பவெப்பநிலையில் இறுக மூடி வைத்தாலே போதும். ஆனால், ஃபிரிட்ஜில் வைத்தால், அதன், சுவை, மணம், குணம்  என அனைத்தும் கெட்டுப் போய் உபயோகிக்க முடியாத அளவுக்கு மாறிவிடும்.  

9 /9

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.