ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த கொள்ளு ரமணா (32) என்ற இளைஞர் நேற்று காலை தற்கொலை செய்து கொண்டார். 1 மாதத்திற்கு முன்பு யோகா நிகழ்ச்சிக்காக யோகா மையம் வந்த அவர் தனிப்பட்ட காரணமாக நேற்று காலை தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய கடைசி கடிதத்தில் தனது தனிப்பட்ட காரணத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக இந்த முடிவை தான் மேற்கொண்டதாகவும் கூறி உள்ளார். தன்னுடைய தற்கொலைக்கு வேறு யாரும் காரணம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொள்ளு ரமணா தற்கொலை செய்து கொண்ட செய்தியை ஈஷா மையத்தினர் காவல்துறைக்கு தெரிவித்ததும், போலீசார் அவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நடந்தது என்ன?
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணத்தைச் சேர்ந்தவர் கொள்ளு ரமணா. இவருக்கு வயது 32. இவர் மன அழுத்தம் காரணமாக கோவையில் உள்ள ஈஷா யோக மையத்தில் ஆறு மாத யோகா பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார்.
மேலும் படிக்க | பல கோடி ரூபாய் மதிப்புள்ள 1200 ஆண்டுகள் பழமையான நடராஜர் சிலை மீட்பு
இந்த நிலையில் அவர் திடீரென்று ஈஷா மையத்தில் உள்ள அவரது அறையில் கடிதம் எழுதி வைத்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்த தற்கொலை கடிதத்தில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொள்வதாக எழுதப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.
இதனிடையே ஈஷா மையம் அவரது தற்கொலை தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் அளித்தது. போலீசார் தற்கொலை செய்து கொண்ட நபர் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருவதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | பெண் குழந்தைகளை ஆசிரியர்கள் கவனமுடன் கையாள வேண்டும் - தமிழிசை சௌந்தரராஜன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ