கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் விருதாம்பிகை பாலாம்பிகை உடனுறை விருதகிரிஸ்வரர் திருக்கோயிலில், கடலூர் பாராளுமன்ற தொகுதியின் பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் சாமி தரிசனம் செய்துவிட்டு, தனக்கு வாக்களித்த மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி நன்றிகள் தெரிவித்தார். பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியதாவது.
சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு 38 இடங்களை வென்று கொடுத்தார்கள். அவர்கள் 38 இடங்களை வென்று அவர்கள் செய்த சாதனை என்ன என கேள்வி எழுப்பினார். மேலும் அதே கூட்டணியில் தற்போது 40க்கு 40 வெற்றியை மக்கள் கொடுத்துள்ளார்கள். அவர்கள் சாதிக்கப் போவது என்ன எனவும், திமுக கூட்டணியில் சென்ற முறை தேர்தலில் நின்றவர்களில், 75% பேர் மீண்டும் இந்த தேர்தலில் நின்று வென்றுள்ளார்கள். ஆனால் அவர்கள் ஒரு தடவை கூட மக்களை சந்தித்தது இல்லை, அவர்கள் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, அந்த தொகுதிக்கு செலவு செய்தது இல்லை, அவர்கள் மக்களின் மீது சின்னத்தை திணிக்கிறார்கள், திமுக என்றால் உதயசூரியன், அதிமுக என்றால் இரட்டை இலை என்று குற்றம் சாட்டினார்.
மேலும் படிக்க | பாஜக கூட்டணி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெறும் என வானதி சீனிவாசன் நம்பிக்கை
பொதுமக்கள் தேர்தலில் நிற்கக்கூடிய ஆட்கள் சரியான ஆட்களா? என்று பார்த்து வாக்களிப்பது இல்லை, ஒவ்வொரு சின்னத்திற்கு பின்னால் நேர்மையற்றவர்கள் ஒளிந்துள்ளார்கள், கடலூர் தொகுதியில் தோற்ற நான், மக்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆனால் கடலூர் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவரை எங்கு சென்று பார்ப்பீர்கள்? அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியுமா? உங்களுக்கு அவர்கள் உங்களுக்கு உதவ போகிறார்களா? என கேள்வி எழுப்பினார். மேலும் இது என்னுடைய மண், என்னுடைய மக்கள் என்னுடைய நிலம் , நான் இங்கேதான் கிடப்பேன், நான் கலையிலும், அரசியலும் இரண்டிலும் சேர்ந்து பயணப்பட போகிறேன்.
இங்கு உள்ள செம்மண் பூமியில் விளையக்கூடிய பலா, முந்திரிக்கு சரியான விலை போகவில்லை. ஆனால் இதே வளத்தை வைத்து வேறு இடங்களில் வைத்துக்கொண்டு கோடீஸ்வரர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். எனவே இதனுடைய வீழ்ச்சியை, எந்த அரசாக இருந்தாலும் சரி செய்ய வேண்டும். ஆனால் இந்த அரசு அதனை சரி செய்யவில்லை என குற்றம் சாட்டினார்.
பிற மாநிலங்களில் இதனை மதிப்பு கூட்டு பொருளாக மாற்றுகிறார்கள், பலாவிலிருந்து சார்பு பொருட்களை உற்பத்தி செய்கிறார்கள், அதனை தமிழக அரசு செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்நிகழ்வில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் சிங்காரவேல், மாவட்ட அமைப்பு செயலாளர் ராஜ், நகர செயலாளர்கள் மணிமாறன் மற்றும் முருகன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
மேலும் படிக்க | சீரூடையில் இருந்த பெண் காவலர்... சராமாரியாக அரிவாளால் வெட்டிய கணவர் - கொடூரம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ