கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட சானமாவு,நொகனூர்,தேன்கனிக்கோட்டை,ஜவளகிரி ஆகிய காப்புக்காடுகளில் 200க்கும் அதிகமான காட்டுயானைகள் உள்ளன. அவை பல்வேறு குழுக்களாக பிரிந்து இடம் பெயர்ந்து சென்று கொண்டிருக்கின்றன. நேற்றிரவு தேன்கனிக்கோட்டை வனப்பகுதியிலிருந்து 30-க்கும் அதிகமான காட்டுயானைகள் கொண்ட குழு அகலக்கோட்டை என்னும் கிராமத்தின் வழியாக சென்றுள்ளன.
அப்போது, அவை அங்கிருந்த விளைநிலங்களை சேதப்படுத்திவிட்டு, அடர் வனப்பகுதியான ஜவளகிரி காட்டிற்குள் இடம் பெயர்ந்து சென்றுள்ளன. இது அங்கிருந்த விவசாயிகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் விற்பனைக்கு தயாராக இருந்த ரோஜா செடிகளை காட்டு யானைக் கூட்டம் முற்றிலுமாக சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளது.
மேலும் படிக்க | பைரவருக்கு இவ்வளவு பெரிய சிலையா? அப்படி என்ன சிறப்பு?
யானைகள் சேதப்படுத்திய ரோஜா செடிகளின் மதிப்பு பல லட்சம் ரூபாய் என விவசாயிகள் தெரிவித்துள்ளன்னர். காட்டு யானைகளின் இந்த செயலால் வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் தங்களுக்கு அரசு இழப்பீடு தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், யானைகள் இடம்பெயரும் இந்த நேரத்தில் வனத்துறையினர் உரிய கண்காணிப்பில் ஈடுபட்டு காட்டு யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற வனத்துறையினரும், கிராம பகுதிகளையொட்டியிருக்கும் வனப்பகுதியில் இருக்கும் காட்டு யானைகளை கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க | தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ