ராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று பாஜக கூட்டணியில் சுயேசையாக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய வேட்பு மனுவை மாவட்ட தேர்தல் அலுவலர் விஷ்ணு சந்திரனிடம் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து மதுரை மேளக்கிழார் பட்டி பகுதியைச் சேர்ந்த ஒச்சா தேவர் என்பவரது மகன் பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் புதிதாக மூன்று ஓபிஎஸ் என்று சொல்லக்கூடிய ஓ பன்னீர்செல்வம் என்ற பெயருடைய சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். அதில் ராமநாதபுரம் மாவட்டம் தெற்கு காட்டூர் பகுதியைச் சேர்ந்த ஒய்யாரம் என்பவரின் மகன் பன்னீர்செல்வம், மதுரை வாகைக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒச்சாத்தேவர் என்பவரின் மகன் பன்னீர்செல்வம் மதுரை சோலை அழகுபுரம் பகுதியைச் சேர்ந்த ஒய்யாத்தேவர் என்பவரது மகன் பன்னீர்செல்வம் என இன்று ஒரே நாளில் மட்டும் மூன்று ஓ பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்தனர்.
மேலும் படிக்க | சின்னம் பார்த்து வாக்களிக்காதீர்கள் - பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் வேண்டுகோள்!
மேலும் நேற்று மனு தாக்கல் செய்த மேல்பட்டி ஒச்சா தேவர் மகன் பன்னீர்செல்வம் இன்றும் வருகை தந்திருந்த நிலையில், 'ப்ளீஸ் என்னை வீடியோ எடுக்காதீங்க, 'வீட்டுல நிறைய பிரச்சனை ஆயிடுச்சு' என, செய்தியாளர்களை கெஞ்ச அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த செய்தியாளர்களிடம் திரு திருவென விழித்தவாறே பதில் சொல்ல முடியாமல் திகைத்து நின்றார். முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சூழ்ச்சியாக போட்டியிட மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து அவருக்கு போட்டியாக குழப்பம் வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக தொடர்ந்து ஓ பன்னீர் செல்வங்கள் வந்த வண்ணம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஓ பன்னீர்செல்வம் பேட்டி
இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி விஷ்ணு சந்திரனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியின் போது ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் தன்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் பல்வேறு பிரிவுகளையும் இருக்கக்கூடிய கழகத் தொண்டர்களும் நிர்வாகிகளும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். என்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்பதை தேர்தல் முடிவுகள் நிரூபிக்கும். கழகத்தின் பல்வேறு பிரிவுகளிலும் இருக்கும் தொண்டர்களும் நிர்வாகிகளும் ஆயிரக்கணக்கானோர் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுவதை பலவீனமாக நினைக்கிறீர்களா என்று கேட்டதற்கு சின்னத்தை விட பூட்டி எடுப்பவரின் அரசியல் அனுபவம் தகுதி போன்றவற்றை பார்த்து மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று கூறினார் இந்த தொகுதிக்கான வாக்குறுதி என்ன என்று கேட்டதற்கு, ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் வாழும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும், கடந்த காலத்தில் செயல்படுத்தாமல் விட்ட திட்டங்களை செயல்படுத்தவும் லட்சத்தீவு உள்ளிட்ட பிரச்சனைகளை பிரதமரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவும் மீனவர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவும், மூன்றாவது முறையாக பொறுப்பு ஏற்கும் நரேந்திர மோடி அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என்று கூறினார். நீங்கள் மத்திய அமைச்சராவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டதற்கு அது பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் எண்ணத்தில் உதயமாக வேண்டும் என்று கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ