Rohit Sharma Records: ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணி, 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. முதல் போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 49 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நாட்டிங்ஹாமில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், ரோகித் சர்மா கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைக்க காத்திருக்கிறார். அதுவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்யும் வாய்ப்பு ரோகித் சர்மாவுக்கு கிடைத்துள்ளது.
மேலும் படிக்க | இதுவரை யாரும் செய்திராத சரித்திர சாதனை புரிந்த ரோஹித் சர்மா!
ரோகித் சாதனை
இந்திய அணியின் அனைத்து வடிவிலான கிரிக்கெட் அணிகளுக்கும் ரோகித் சர்மா தலைமையேற்ற பிறகு, இந்திய அணி இதுவரை ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை. அவரது தலைமையின் கீழ் இந்திய அணி விளையாடிய 19 போட்டிகளிலும் வெற்றியைப் பெற்றுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தொடர்ச்சியாக 20 வெற்றிகளை பெற்றுள்ளார். இப்போது அவருக்கு அடுத்த இடத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இருக்கிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும்பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஒரு கேப்டனாக தொடர்ச்சியாக 20 வெற்றிகளை பெற்ற பாண்டிங்கின் சாதனையை சமன்செய்வார்.
தொடர்ச்சியாக அதிக சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற கேப்டன்கள்
20 - ரிக்கி பாண்டிங் (2003)
19 - ரோஹித் சர்மா (2019/22)*
16 - ரிக்கி பாண்டிங் (2006/07)
முதல் சர்வதேச கேப்டன்
கேப்டன் ரோஹித் சர்மா சமீபத்தில் தனது பெயரில் மற்றொரு வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்ற உடனேயே தொடர்ந்து 13 டி20 சர்வதேசப் போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார். இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், தொடர்ந்து 14 டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற கேப்டனாகவும் மாறியுள்ளார்.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, வங்கதேசம் (2 போட்டிகள்), நியூசிலாந்து (4 போட்டிகள்), மேற்கிந்திய தீவுகள் (3 போட்டிகள்), இலங்கை (3 போட்டிகள்), இங்கிலாந்து (2) ஆகிய அணிகளை தோற்கடித்துள்ளது.
மேலும் படிக்க | ஹர்திக்கின் அதிரடியில் இங்கிலாந்தை துவம்சம் செய்த இந்திய அணி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR