ஐபிஎல் 2025 தொடர் வரும் மார்ச் 22 ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விளையாடுகிறது. இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மூன்றாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல்லில் அனைவராலும் விரும்பப்படும் ஒரு அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது, இதுவரை ஐபிஎல்-ல் ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளனர். இந்த ஆண்டு ஆறாவது முறையாக கோப்பையை வெல்ல தயாராகி வருகின்றனர். நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் பல இளம் வீரர்களை அணியில் எடுத்துள்ளது சிஎஸ்கே.
மேலும் படிக்க | IND vs NZ: ரோகித் சர்மா வெளியே? அவருக்கு பதில் யார்? பிளேயிங் 11 இங்கே!
பயிற்சியை தொடங்கிய சென்னை அணி
ஐபிஎல் 2025 போட்டிகளுக்கான பயிற்சிகளை ஒவ்வொரு அணி நிர்வாகமும் தொடங்கியுள்ளது. ஆனால் பிசிசிஐ-யின் புதிய உத்தரவால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு பெரிய தடை ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகளுக்கு முன்னர் இந்திய கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) சில புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது. அதன்படி ஐபிஎல் அணிகள் தங்களது சொந்த மைதானத்தை போட்டிகளுக்கு முன்பு பயிற்சிகளுக்காக பயன்படுத்த முடியாது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால், சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தை ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு பயன்படுத்த அனுமதி இல்லை. ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு அனைத்து மாநில வாரியங்களுக்கும் உள்ளூர் தொடர்களை நடத்த மட்டுமே மைதானத்தை பயன்படுத்த வேண்டும்.
பிசிசிஐ எடுத்த முடிவு
சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில் இந்த உத்தரவு வந்தது. பிசிசிஐயின் இந்த உத்தரவால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது மொத்த திட்டத்தையும் மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் சென்னை அணியை தோற்கடிப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும். இந்த முறை பயிற்சிகளுக்கு அனுமதி இல்லை என்பதால் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. "ஐபிஎல் போட்டிகளுக்கு முன்னதாக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை தவிர வேறு எந்த போட்டிகளையும் நடத்த மாநில சங்கங்களுக்கு அனுமதி இல்லை" என்று பிசிசிஐ தெளிவாக தெரிவித்துள்ளது. மைதானத்தின் தரத்தை மேம்படுத்தவும், பாதுகாப்பாக வைக்கவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சேப்பாக்கம் இல்லையென்றால் எங்கு பயிற்சி?
பிசிசிஐ-யின் உத்தரவால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது பயிற்சியை வேறு இடத்திற்கு மாற்றி உள்ளது. தற்போது அனைத்து வீரர்களும் சென்னையில் உள்ள சிஎஸ்கே அகாடமியில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக இந்த மைதானத்தில் அகாடமியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தது. சென்னையை போலவே மும்பை, ஹைதராபாத், பெங்களூரு போன்ற மைதானங்களும் அந்தந்த அணிகளுக்கு பயன்படுத்த அனுமதி இல்லை.
சென்னையில் தோனி மற்றும் ருதுராஜ்
பிசிசிஐ-யின் புதிய விதிமுறைகளால் ஒவ்வொரு ஐபிஎல் அணிகளும் பயிற்சிகளுக்கு புதிய இடங்களை தேர்வு செய்து வருகின்றனர். தற்போது ஐபிஎல் தொடருக்கான பயிற்சிகளுக்காக தோனி, ருதுராஜ் போன்ற சென்னை அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பல வீரர்கள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.
மேலும் படிக்க | துணை கேப்டனுக்கும் உடல் நலம் சரியில்லை? வலைப்பயிற்சியில் ஈடுபடாத ரோகித், கில்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ