Good Bad Ugly Movie House : அஜித் குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் வெளியாக இருக்கிறது. இதற்கு அப்டேட் கொடுக்கும் வகையில் வெளியான ஒரு வீடியோவில், வீடு ஒன்று இடம் பெற்றுள்ளது. அந்த வீட்டிற்கு பின்னால் ஒரு ஸ்பெஷல் விஷயம் அடங்கியிருக்கிறது. அது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
குட் பேட் அக்லி:
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் முதன் முதலாக நடக்கும் படம், குட் பேட் அக்லி. மார்க் ஆண்டனி படத்தை இயக்கி பிரபலமான ஆதிக், இயக்குனர் என்பதை தாண்டி அஜித்தின் பெரிய ரசிகர். விடாமுயற்சி படத்தின் நடித்துக் கொண்டிருக்கும் போது இந்த படத்தில் கமிட்டான அஜித், இரவு பகல் பாராமல் வெகு சீக்கிரமாக ஷூட்டிங் முடிக்க வேண்டும் என்பதற்காக இதில் நடித்துக் கொடுத்துவிட்டார்.
இந்த படத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஒருவர் நல்லவர், ஒருவர் கெட்டவர், இன்னொருவர் ரொம்ப கெட்டவர் போன்ற ரோல்கள் தான் இதை என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டீசர் குடித்த அப்டேட் நேற்று சிறு வீடியோவாக வெளியானது.
அப்டேட் வீடியோ:
குட் பேட் அட்லி படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது குறித்து அதிகாரப்பூர்வ அப்டேட் நேற்று வெளியானது. 21 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில், அஜித் குமார் தூரத்தில் இருந்து நடந்து வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல ஆரம்பக் காட்சியிலேயே ஒரு வீடும் காண்பிக்கப்பட்டிருந்தது. இந்த வீட்டிற்கு பின்னால் இருக்கும் கதை என்ன தெரியுமா?
#GoodBadUglyTeaser on February 28th #AjithKumar sir @MythriOfficial @SureshChandraa sir #GoodBadUgly from April 10th pic.twitter.com/0IFdpWCxFM
— Adhik Ravichandran (@Adhikravi) February 25, 2025
அது என்ன வீடு?
குட் பேட் அக்லி திரைப்படம் ஹைதராபாத் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட இடங்களில் உருவானது என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்தப் படப்பிடிப்பு ஸ்பெயினில் இருக்கும் ஒரு வீட்டில் படமாக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு ஏதோ பேய் பங்களா போல இருக்கும் இந்த வீடு ஒரு பிரபலமான ஸ்பானிஷ் மொழி தொடர் படமாக்கப்பட்ட இடமாகும்.
இந்தியாவில் Money Heist என்ற தொடர் மிகவும் பிரபலம். இது ஒரு heist தொடராகும். இதில் குழுவாக செயல்படுபவர்கள் அனைவரும், வீட்டில் அடிக்கடி மீட்டிங் போடுவர். தற்போது குட் பேட் அக்லி படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் இதுவும் ஒரு Heist Thriller-ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எப்போது ரிலீஸ்?
துணிவு படத்திற்கு பிறகு அஜித் நடித்த விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்கள் ரிலீசிற்கு ரெடியாக இருந்தன. இதனால் பல வருடங்களுக்கு பிறகு ஒரே ஆண்டு அடுத்தடுத்து அஜித்தின் படம் வெளியாவது இதுவே முதல் முறையாக பார்க்கப்படுகிறது. இதில் முதலாவதாக பிப்., 6ஆம் தேதி வெளியான விடாமுயற்சி படம், பெரிதாக ரசிகர்களின் வரவேற்பை பெறவில்லை. இதை அடுத்து குட் பேட் அக்லி மீது ரசிகர்கள் அனைத்து நம்பிக்கைகளும் வைத்துள்ளனர். படம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குட் பேட் அக்லி படத்தில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | குட் பேட் அக்லி படத்தில் நடித்த ஷாலினி? வைரலாகும் போட்டோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ