மூத்த குடிமக்களுக்கு மாஸ் திட்டம்: மாதம் ரூ.20,500 வருமானம், அரசின் உத்தரவாதம்

Senior Citizen Saving Scheme: மூத்த குடிமக்களின் தேவையை கருத்தில் கொண்டு அரசாங்கம் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மூத்த குடிமக்கள் சேமிப்புத்  திட்டம் மிக முக்கியமான ஒரு திட்டமாக உள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 27, 2025, 04:52 PM IST
  • மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்.
  • அதிகபட்ச முதலீடு என்ன?
  • ஒரே கணக்கில் ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்தால் கிடைக்கும் லாபம் என்ன?
மூத்த குடிமக்களுக்கு மாஸ் திட்டம்: மாதம் ரூ.20,500 வருமானம், அரசின் உத்தரவாதம் title=

Senior Citizen Saving Scheme: நம் அனைவருக்கும் பணத்திற்கான தேவை உள்ளது. பணத்தை ஈட்டுவது போல, சேமித்து வைப்பதும் மிக அவசியமாகும். குறிப்பாக முதுமையில் வழக்கமான முறையில் பணத்தை சேர்க்க முடியாது என்பதால், இளமையிலேயே அதற்காக திட்டமிடுவது மிக நல்லது.

மூத்த குடிமக்கள் சேமிப்புத்  திட்டம்

மூத்த குடிமக்களின் இந்த தேவையை கருத்தில் கொண்டு அரசாங்கம் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மூத்த குடிமக்கள் சேமிப்புத்  திட்டம் மிக முக்கியமான ஒரு திட்டமாக உள்ளது. ஓய்வுக்குப் பிறகு பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்தை உறுதி செய்வதற்கான மிகவும் சாதகமான முதலீட்டு திட்டங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) ஓய்வு பெற்றவர்களுக்கு நிலையான வருமானத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் மூத்த குடிமக்கள், வழக்கமான ஆபத்துகள் எதுவும் இல்லாமல் பாதுகாப்பான வழியில் முதலீடு செய்யலாம். அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் இந்தத் திட்டம், சிறு சேமிப்புத் திட்டங்களில் மிக உயர்ந்த வட்டி விகிதங்களை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தகது. 

Senior Citizens: மூத்த குடிமக்களின் சேமிப்பை மேம்படுத்தும் திட்டம்

இந்த திட்டம் தங்கள் சேமிப்பை மேம்படுத்த விரும்பும் மூத்த குடிமக்களுக்கு ஒரு கவர்ச்சிகரமான தேர்வாக அமைகிறது. SCSS இல் முதலீடு செய்யும் நபர்கள் ஆண்டுக்கு 8.2 சதவீத வட்டி விகிதத்தைப் பெறுகிறார்கள். இந்தத் திட்டம் மூத்த குடிமக்கள் தங்கள் ஓய்வூதிய நிதியைப் பாதுகாக்க உதவுவது மட்டுமல்லாமல், நிலையான வருமானத்தையும் உறுதி செய்கிறது. இதில் தனியாகவோ, அல்லது வாழ்க்கைத் துணையுடன் இணைந்து கூட்டாகவோ கணக்குகளை திறக்கலாம்.

Maximum Deposit: அதிகபட்ச முதலீடு

SCSS கணக்குகளில் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் முதலீடு செட்ட அனுமதிக்கப்படுகிறது. குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000 ஆகும். ரொக்க வைப்புத்தொகை ரூ.1 லட்சம் வரை அனுமதிக்கப்படுகிறது. இந்த வரம்பை மீறும் தொகைகள் காசோலை மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஓய்வு பெற்ற தம்பதிகள் தனித்தனி SCSS கணக்குகளைத் திறந்து தங்கள் நிதி நன்மைகளை அதிகரிக்க முடியும். இது அவர்களின் முதலீட்டு உச்சவரம்பை ரூ.60 லட்சமாக திறம்பட அதிகரிக்கிறது.

இதன் மூலம் காலாண்டு வட்டியாக ரூ.1,20,300 பெற முடியும். அதாவது இதன் மூலம் ஆண்டு வட்டி வருமானம் ரூ.4,81,200 ஆக இருக்கும். ஐந்து வருட காலத்தில், முதிர்ச்சியின் போது திரட்டப்படும் மொத்த வட்டி ரூ.24,06,000 ஆக இருக்கும். 

அதாவது, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில், இரண்டு கணக்குகளில் ரூ.60 லட்சத்தை முதலீடு செய்து, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வட்டியாக மட்டும் ரூ.24 லட்சத்தை பெற முடியும்.

ஒரே கணக்கில் ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்தால் கிடைக்கும் லாபம் என்ன?

- காலாண்டு வட்டி - ரூ.60,150

- ஆண்டு வட்டி - ரூ.2,40,600

- ஐந்து ஆண்டுகளில் மொத்த வட்டி - ரூ.12,03,000

- மொத்த முதிர்வு தொகை - ரூ.42,03,000.

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ தளங்களை காணவும். எந்தவொரு பரிவர்த்தனைகளையும் செய்வதற்கு முன் உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க பரிந்துரைக்கப்படுகின்றது. 

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: ஊதிய உயர்வு, பதவி உயர்வு விதிகளில் மாற்றம்... ஊழியர்களுக்கு லாபம்

மேலும் படிக்க | மாநில அரசு ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்: கூடுதல் ஓய்வூதியம்... அரசு கொடுத்த இன்ப அதிர்ச்சி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News