நாட்டு மக்கள் அனைவருக்கும் பென்ஷன்: மத்திய அரசு அதிரடி, புதிய ஓய்வூதியத் திட்டம்

Universal Pension Scheme: புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஓய்வூதியப் பலன் கிடைக்கும் என கூறப்படுகின்றது. அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த திட்டத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Universal Pension Scheme:இந்தத் திட்டம் அனைவருக்குமான திட்டமாக இருக்கும் என்றும், இது எந்த வித வேலை, தொழில் அல்லது பணிகளுடனும் இணைக்கப்பட்டிருக்காது என்றும் கூறப்படுகின்றது. அதாவது, சுயதொழில் செய்பவர்கள், அமைப்புசாரா துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் உட்பட யார் வேண்டுமானாலும் தங்கள் ஓய்வூதியத்திற்கு பங்களித்து அதை கட்டமைக்கவும் முடியும்.

1 /11

புத்தம் புதிய ஓய்வூதியத் திட்டம் ஒன்றை மத்திய அரசு அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக சில நாட்களாக அறிக்கைகள் வந்துகொண்டிருக்கின்றன.இது மக்கள் தாமாக முன்வந்து பங்களிக்கவும், ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியப் பலன்களைப் பெறவும் அனுமதிக்கும் ஒரு உலகளாவிய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

2 /11

 இந்தத் திட்டம் பாரம்பரிய வேலைவாய்ப்புக்கு அப்பால் சமூகப் பாதுகாப்பை விரிவுபடுத்துவதையும், சமூகத்தின் ஒரு பெரிய பிரிவினருக்கு ஒரு கட்டமைக்கப்பட்ட ஓய்வூதிய முறையை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கும். தற்போது முன்மொழியப்பட்டுள்ள ஓய்வூதியத் திட்டத்திற்கான பணிகளில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. இது ஏற்கனவே உள்ள ஓய்வூதியத் திட்டங்களை ஒரே கட்டமைப்பின் கீழ் கொண்டு ந்வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3 /11

இந்தத் திட்டம் அனைவருக்குமான திட்டமாக இருக்கும் என்றும், இது எந்த வித வேலை, தொழில் அல்லது பணிகளுடனும் இணைக்கப்பட்டிருக்காது என்றும் கூறப்படுகின்றது. அதாவது, சுயதொழில் செய்பவர்கள், அமைப்புசாரா துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் உட்பட யார் வேண்டுமானாலும் தங்கள் ஓய்வூதியத்திற்கு பங்களித்து அதை கட்டமைக்கவும் முடியும்.

4 /11

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இந்தத் திட்டத்தை உருவாக்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கான கட்டமைப்பு இறுதி செய்யப்பட்டவுடன், இது சீராக செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய பங்குதாரர்களுடன் ஆலோசனைகள் நடத்தப்படும்.

5 /11

இந்தத் திட்டம் பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் (PM-SYM) மற்றும் வர்த்தகர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கான தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS-வர்த்தகர்கள்) போன்ற தற்போதைய ஓய்வூதியத் திட்டங்களை ஒருங்கிணைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு திட்டங்களும் தற்போது ஓய்வுக்குப் பிறகு மாதத்திற்கு ரூ.3,000 ஓய்வூதியத்தை வழங்குகின்றன. இதன் பங்களிப்புகள் ரூ.55 முதல் ரூ.200 வரை இருக்கும். திட்டத்தின் பயனாளிகள் பங்களிக்கும் அதே அளவு தொகையை அரசாங்கமும் பங்களிக்கும்.

6 /11

அடல் ஓய்வூதிய திட்டமும் புதிய திட்டத்தில் சேர்க்கப்படலாம் என கூறப்படுகின்றது. இது தற்போது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) நிர்வகிக்கப்படுகின்றது. கட்டுமானத் துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க கட்டிடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்கள் (BoCW) சட்டத்தின் கீழ் வசூலிக்கப்படும் செஸ் வரியைப் பயன்படுத்துவது குறித்தும் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

7 /11

புதிய ஓய்வூதியத் திட்டமான யுனிவர்சல் ஓய்வூதியத் திட்டம், அமைப்புசாரா துறை தொழிலாளர்கள், வர்த்தகர்கள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் 60 வயதுக்குப் பிறகு ஓய்வூதியப் பலன்களைப் பெற விரும்பும் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குடிமக்கள் உட்பட பலதரப்பட்ட மக்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

8 /11

ஓய்வூதிய கொடுப்பனவுகளை அதிகரிக்கவும் போலி பயனாளிகளிம் பதிவைத் தவிர்க்கவும் இந்த புதிய முயற்சியுடன் தங்கள் ஓய்வூதியத் திட்டங்களை இணைக்க மாநில அரசுகளை அரசாங்கம் ஊக்குவிக்கலாம்.

9 /11

அமெரிக்கா, கனடா, ரஷ்யா, சீனா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் உட்பட பல வளர்ந்த நாடுகள் ஏற்கனவே ஓய்வூதியங்கள், சுகாதாரப் பராமரிப்பு மற்றும் வேலையின்மை சலுகைகளை உள்ளடக்கிய கட்டமைக்கப்பட்ட சமூகப் பாதுகாப்பு அமைப்புகளைக் கொண்டுள்ளன. டென்மார்க், ஸ்வீடன், நார்வே, நெதர்லாந்து மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகள் தங்கள் மூத்த குடிமக்களுக்கு நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உலகளாவிய ஓய்வூதியத் திட்டங்களை வழங்கி வருகின்றன.

10 /11

தற்போது, ​​இந்தியாவின் சமூகப் பாதுகாப்பு அமைப்பு பெரும்பாலும் வருங்கால வைப்பு நிதி முறையை சார்ந்துள்ளது. தற்போது முன்மொழியப்பட்டுள்ள உலகளாவிய ஓய்வூதியத் திட்டம், கவரேஜை விரிவுபடுத்துவதையும், நாட்டின் பணியாளர்களை உள்ளடக்கிய மற்றும் நிலையான ஓய்வூதிய முறையை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கும்.

11 /11

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.