சிம்பு வெளியிட்ட பாலாஜி முருகதாஸின் ‘ரன்னர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

Silambarasan TR Released First Look Of Runner : சிலம்பரசன் TR வெளியிட்ட பாலாஜி முருகதாஸின்  ‘ரன்னர் ’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் - மகாசிவராத்திரி சிறப்பு தினத்தில் ரசிகர்களுக்கு பரிசு  

Written by - Yuvashree | Last Updated : Feb 26, 2025, 06:43 PM IST
  • சிம்பு வெளியிட்ட ரன்னர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
  • பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக நடிக்கும் படம்..
  • இதற்கு முன்னர் ஃபயர் படத்தில் நடித்திருந்தார்
சிம்பு வெளியிட்ட பாலாஜி முருகதாஸின் ‘ரன்னர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்! title=

Silambarasan TR Released First Look Of Runner : நடிகர் பாலாஜி முருகதாஸ் தனது திறமையான நடிப்பின் மூலம் திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி வருகிறார். குறிப்பாக சமீபத்தில் வெளியான 'ஃபயர்’ திரைப்படத்தில் எவ்வித தயக்கமும் இல்லாமல் எதிர்மறையான காசி கதாபாத்திரத்தில் நடித்து பலரின் பாராட்டுகளைப் பெற்றார். தற்போது தனது புதிய திரைப்படமான ‘ரன்னர்’ மூலம் ரசிகர்களை ஈர்க்கத் தயாராகி வருகிறார்..

விளையாட்டை அடிப்படையாகக் கொண்ட (Sports Drama) கதைக்களத்தில் உருவாகிவரும் இப்படத்தை சிதம்பரம் A அன்பழகன் இயக்க, ரைனோஸ் ராம்பேஜ் பிலிம்ஸ் சார்பில் காலெப் மற்றும் கெல்வின் தயாரிக்கின்றனர். இதற்கு முன்பு இத்தயாரிப்பு நிறுவனம் உருவாக்கிய ‘ பாக்சர்’ மற்றும் ‘கொட்டேஷன் கேங்’ போன்ற திரைப்படங்கள் திரையுலகில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

மகாசிவராத்திரி நாளை முன்னிட்டு, மாஸ் நடிகர் சிலம்பரசன் TR, ' ரன்னர் ' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பை வெளியிடவிருக்கிறார்.

உலக அளவில் உள்ள பல்வேறு ஸ்பிரிண்டர்களின் (வேக ஓட்ட வீரர்கள்) (Sprinters) உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக படமாக்கப்படவுள்ளது.

இயக்குநர் சிதம்பரம் A அன்பழகன் இப்படம் குறித்துக் கூறும்போது:
"எனக்கு பல ஆண்டுகளாக பாலாஜி முருகதாஸை தெரியும் . அவரது கடின உழைப்பும், ஒழுக்கமான வாழ்க்கை முறையும் எப்போதும் எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். குறிப்பாக, இத்திரைப்படத்துக்காக கடந்த 6 மாதங்களாக அவர் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான பயிற்சியாளர்களிடமிருந்து தீவிரமாக வேக ஓட்டப் பயிற்சி பெற்று வருகிறார். இரவு 3 மணிக்கு உடற்பயிற்சி செய்துவிட்டு, காலை 5.30 மணிக்கு தடகள பயிற்சியில் இறங்குவது அவரது தினந்தோறுமான அட்டவணையாக உள்ளது. அவரது பொறுப்பும், கடின உழைப்பும் திரையில் கண்டிப்பாக பிரதிபலிக்கும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது."

தயாரிப்பாளர்கள் காலெப் மற்றும் கல்வின் கூறும்போது:
"நடிகர் சிலம்பரசன் TR, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பை வெளியிட்டது எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையும், மகிழ்ச்சியும் உருவாக்கியிருக்கிறது . அவரது ஆதரவால் இப்படத்துக்கு கூடுதல் கவனம் கிடைத்துள்ளது. இளைஞர்களை உற்சாகப்படுத்தும்  தனித்துவமான கதையை உலகத்துடன் பகிர்ந்து கொள்வதில் எங்களின் முழு முயற்சியையும் சிறப்பையும் கொடுத்திருக்கிறோம். படத்தின் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்."

மேலும் படிக்க | வெற்றி பெற்ற ஃபயர் படம்! பாலாஜிக்கு தங்க செயின் பரிசு..

மேலும் படிக்க | ஃபயர் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News