பால்குண அமாவாசை 2025: சந்திரப் பெயர்ச்சியால் உச்சத்துக்கு போகும் இந்த 4 ராசிகள்!

Moon Tranist: பால்குண அமாவாசையான இன்று சந்திர பகவான் கும்ப ராசியில் பெயர்ச்சி ஆகிறார். இதனால், இந்த 4 ராசிகளுக்கு சிறப்பான நன்மைகள் வந்துசேரும்.

Moon Tranist In Aquarius February 2025: அமாவாசை மாதம் ஒரு முறை நிகழும். அந்த வகையில், இன்று பால்குண அமாவாசையாகும். இதனால், பயனடையப்போகும் ராசிகள் குறித்து இங்கு காணலாம்.

 

1 /8

ஒவ்வொரு மாதமும் கிருஷ்ணா பட்சம் காலகட்டத்தில் சதுர்தசி திதிக்கு அடுத்த நாள் அமாவாசையாகும். அந்த வகையில், இந்தாண்டில் பால்குண அமாவாசை (Falgun Amavasya 2025) இன்று (பிப். 27) வந்துள்ளது.

2 /8

இந்த பால்குண அமாவாசையில் சந்திர பகவான் மகர ராசியில் (Moon Tranist In Aquarius) இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

3 /8

சந்திர பகவானின் இந்த ராசி மாற்றம் என்பது இந்த 4 ராசிகளுக்கு (4 Zodiac Signs) சுபமான காலகட்டமாகும். இதனால், இன்று முதல் பயனடையும் 4 ராசிகளை இங்கு காணலாம். 

4 /8

ரிஷபம் (Taurus): சந்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்கு பெரியளவில் நன்மை கிடைக்கும். இந்த ராசிக்கு உகந்த கிரகம், செவ்வாய் ஆகும். இந்த ராசிக்கு சூரிய பகவானின் அருளும் கிடைக்கும் என்பதால் பணியில் வெற்றி கிடைக்கும், வருமானமும் அதிகரிக்கும். நீங்கள் அரைகுறையாக விட்ட பணிகள் சிறப்பாக நடந்துமுடியும். திருமண உறவில் இணக்கம் உண்டாகும். சிறப்பான வேலையை செய்து முடிப்பீர்கள் இதனால் நீங்கள் அதிகம் மகிழ்ச்சி அடைவீர்கள். இது முதலீடு செய்வதற்கு உகந்த நேரமாகும்.

5 /8

கடகம் (Cancer): இந்த சந்திர பெயர்ச்சியால் கடக ராசிக்கும் நன்மைகள் காத்திருக்கின்றன. வீட்டிற்கு உறவினர்கள் வருகை தருவார்கள், அரைகுறை பணிகள் நிறைவடையும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல செய்தி வந்துசேரும். சந்திர பகவானின் அருளால் மன அழுத்தம், பதற்றம் ஆகியவை பறந்துபோகும். இந்த காலகட்டத்தில் நல்ல செய்தி வந்துசேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். பொருளாதாரமும் பலப்படும்.

6 /8

சிம்மம் (Leo): சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திர பெயர்ச்சியால் சுபமான முடிவுகள் வந்து சேரும். இந்த காலகட்டத்தில் வணிகத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வோடு, நல்ல செய்தியும் வந்து சேரும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இறுக்கும். வணிகத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். ஆன்மீகத்திலும் நாட்டம் அதிகரிக்கும்.

7 /8

கும்பம் (Aquarius): கும்பத்தில் சந்திர பெயர்ச்சி நடப்பது அவர்களுக்கே சுபமான ஒன்றுதான். பண வரவு அதிகரிக்கும், நீண்ட நாளாக வராமல் இருந்த பணம் வந்து சேரும். புதிய வாய்ப்புகளை பெற்று பணியில் முன்னேறலாம். மனைவியிடம் உங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். நிலம் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வணிகத்தில் ஈடுபடுவோர் தொழிலை விரிவாக்கம் செய்யலாம். பொருளாதார சூழலை வலுவாக்கும்.

8 /8

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் கணிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.