EPFO Interest Rate: தனியார் துறையில் பணிபுரியும் கோடிக்கணக்கான மக்களுக்கு ஒரு முக்கிய அப்டேட் உள்ளது. நாளை அவர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி கிடைக்கக்கூடும். இது இபிஎஃப்ஓ வட்டி விகிதம் தொடர்பானது. இபிஎஃப் உறுப்பினர்களுக்கு காத்திருக்குக்கும் ஏமாற்றம் என்ன? இபிஎஃப் வட்டியில் என்ன மாற்றம் வரும்? முழுமையான விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
Central Board of Trustees: மத்திய அறங்காவலர் குழு
2025 நிதியாண்டிற்கான பிஎஃப் வட்டி விகிதத்தை முடிவு செய்ய இபிஎஃப்ஓ -வின் மத்திய அறங்காவலர் குழு வெள்ளிக்கிழமை கூடும். இபிஎஃப் உறுப்பினர்கள் வட்டி விகித அதிகரிப்புக்கான செய்தியை எதிர்நோக்கி காத்திருக்கும் இந்த வேளையில் இபிஎஃப்-க்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்படலாம் என்ற அதிர்ச்சி செய்தி இப்போது பல ஊடக அறிக்கைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
பங்குச் சந்தை மற்றும் பத்திர வருமானம் மூலம் EPFO-வின் வருவாய் குறைந்துள்ளதாகவும் அதுவே வட்டி விகித குறைப்புக்கு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகின்றது. இது மட்டுமின்றி வழக்கத்தை விட அதிகமான க்ளெய்ம்கள் இந்த முறை செட்டில் செய்யப்பட்டுள்ளன. இதுவும் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகின்றது.
EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கான வட்டி
முந்தைய நிதியாண்டில் (2023-24), EPFO வட்டி விகிதம் 8.25% ஆக அதிகரிக்கப்பட்டது. அதற்கு முன்னர், 2022-23 நிதியாண்டில், வட்டி விகிதம் 8.15% ஆகவும், 2021-22 நிதியாண்டில் 8.10% ஆகவும் இருந்தது. EPFO வாரியத்தின் முதலீட்டு குழு கடந்த வாரம் கூடியது. இதில், EPFO -வின் வருமானம் மற்றும் செலவு விவரக்குறிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த விவாதங்கள் மற்றும் பிற தரவுகளின் அடிப்படையில் EPF வட்டி விகிதங்களை வாரியம் பரிந்துரைக்கும். இந்த ஆண்டு வட்டி விகிதம் கடந்த ஆண்டை விடக் குறைவாக இருக்கலாம் என்று வாரியத்தில் சேர்க்கப்பட்டுள்ள ஊழியர்களின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார். சமீபத்திய மாதங்களில் பாண்ட் ஈல்ட் குறைந்துள்ளதாகவும், இதனால் அதிக வட்டி வழங்கப்பட்டால், EPFO-விடம் எந்த வித உபரி இருப்பும் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
EPFO Interest Rate: இபிஎஃப்ஓ வட்டி விகிதம்
தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, அவர்களின் அடிப்படை சம்பளத்தில் மாதா மாதம் 12% இபிஎஃப் கணக்கில் (EPF Account) பங்களிக்க கழிக்கப்படுகிறது. நிறுவனமும் அதே அளவு தொகையை ஊழியரின் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறது. EPFO-வில் சுமார் ஏழு கோடி சந்தாதாரர்கள் உள்ளனர்.
அரசாங்க தரவுகளின்படி, EPFO 2024-25 ஆம் ஆண்டில் 5.08 கோடிக்கும் அதிகமான க்ளெய்ம்களை செட்டில் செய்தது. இந்தக் க்ளெய்ம்களின் மொத்தத் தொகை ரூ.2.05 லட்சம் கோடியாகும். 2023-24 ஆம் ஆண்டில் 4.45 மில்லியன் கோரிக்கைகள் தீர்க்கப்பட்டன. இதன் மொத்த மதிப்பு ரூ.1.82 லட்சம் கோடி. அதாவது, இந்த ஆண்டு மக்கள் தங்கள் பிஎஃப் கணக்குகளில் இருந்து அதிக பணத்தை எடுத்துள்ளனர். மேலும், பங்குச் சந்தை மற்றும் பத்திரங்களிலிருந்து EPFO குறைவாகவே சம்பாதித்துள்ளது.
EPF Subscribers: இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு எப்போது அதிக வட்டி கிடைத்தது?
1952-53ல் EPFO வட்டி விகிதம் 3% ஆக இருந்தது. படிப்படியாக இது 1989-90 -இல் 12% ஆக அதிகரித்தது. அதுவே இதுவரை இல்லாத அதிகபட்ச வட்டி விகிதமாகும். இந்த வட்டி விகிதம் 2000-01 ஆம் ஆண்டு வரை அப்படியே இருந்தது. அதன் பிறகு 2001-02 ஆம் ஆண்டில் அது 9.5% ஆகக் குறைந்தது. 2005-06 ஆம் ஆண்டில் இது மேலும் 8.5% ஆகக் குறைந்தது. பின்னர் 2010-11 ஆம் ஆண்டில் வட்டி விகிதம் 9.50% ஆக உயர்த்தப்பட்டது. ஆனால் 2011-12 ஆம் ஆண்டில் அது மீண்டும் 8.25% ஆகக் குறைக்கப்பட்டது. இது 2021-22 ஆம் ஆண்டில் 8.10% ஆக மிகக் குறைந்த அளவை எட்டியது.
தற்போது நாளை நடக்கும் CBT கூட்டத்திற்காக அனைவரும் காத்திருக்கிறார்கள். வட்டி விகிதம் 0.1% அடிகரிக்கும் என சிலரும், எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே தொடரப்படும் என சிலரும் கூறிவந்த நிலையில், அது குறையக்கூடும் என தற்போது வந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | லட்சங்களை கோடிகளாக்கும் SIP... ஓய்வில் போது கையில் ரூ.5 கோடி இருக்கும்
மேலும் படிக்க | நாட்டு மக்கள் அனைவருக்கும் பென்ஷன்: மத்திய அரசு அதிரடி, புதிய ஓய்வூதியத் திட்டம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ