20:57 11-12-2019
20 ஓவர் முடிவில் இந்திய அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற 241 ரன்கள் தேவை.
ரோஹித் சர்மா 71(34)
லோகேஷ் ராகுல்க் 91(56)
ரிஷப் பந்த் 0(2)
விராட் கோஹ்லி* 70(29)
20:30 11-12-2019
இரண்டு விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை கடந்த இந்திய அணி. தற்போது கேப்டன் கோலி மற்றும் தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் விளையாடி வருகின்றனர்.
19:44 11-12-2019
இந்திய அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் அரைசதம் அடுத்துள்ளனர். ரோஹித் சர்மா 23 பந்தில் 50 ரன்களை எடுத்தார். அதேவேளையில் 29 பந்தில் லோகேஷ் ராகுல் 50 ரன்களை எடுத்துள்ளார்.
Another 50 for @klrahul11 in T20Is.#TeamIndia 108/0 after 9.1 overs. pic.twitter.com/15Toax9o96
— BCCI (@BCCI) December 11, 2019
19:39 11-12-2019
இந்திய அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சை நான்கு பக்கங்களிலும் விளாசி வருகின்றனர். ரோஹித் சர்மா 23 பந்தில் 50 ரன்களை எடுத்தார். அதேவேளையில் இந்திய அணி வெறும் 8 ஓவரில் 100 ரன்களை கடந்தது.
FIFTY!
Rohit Sharma brings up his 19th T20I half-century with a maximum #INDvWI pic.twitter.com/xzr09ZHtL1
— BCCI (@BCCI) December 11, 2019
19:21 11-12-2019
இந்திய அணி ஐந்து ஓவர் முடிவில் ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித்* 34(17)மற்றும் ராகுல்* 23(13)ரன்கள் எடுத்துள்ளனர்.
மும்பை: இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் (India vs West Indies) அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி 20 போட்டி (Mumbai T20) இன்று புதன்கிழமை (டிசம்பர் 11) வான்கடே மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி டாஸ் வென்று முதலில் பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து இன்னும் சற்று நேரத்தில் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளது. இதனால் இன்றைய போட்டி தொடர் வெற்றியாளரை தீர்மானிக்க உள்ளது. முதல் போட்டியில் இந்தியா ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியை எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் (West Indies) வென்றதன் மூலம் தொடர் சமநிலையையில் உள்ளது.
West Indies have won the toss and will bowl first in the third and final T20I against #TeamIndia.#INDvWI pic.twitter.com/EyOKQn8Poa
— BCCI (@BCCI) December 11, 2019
இரண்டாவது போட்டியில் இந்தியாவின் பீல்டிங் மோசமாக இருந்தது. இரண்டு போட்டிகளிலும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பல கேட்சுகளை தவற விட்டனர். இதுபோன்ற சூழ்நிலையில், கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரின் கவனம் நிச்சயமாக இந்த போட்டியில் அணியின் பீல்டிங் மீது அதிக கவனம் செலுத்தப்படும் என்பதாக இருக்கும்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 டி-20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் மூன்றாவது டி 20 போட்டி இன்று (புதன்கிழமை) மும்பையின் வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இரண்டு போட்டிகளுக்குப் பிறகு, மூன்றாவது போட்டியின் (Mumbai T20) மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு சில அழுத்தங்கள் உள்ளாகியுள்ளது. சொந்த மண்ணில் தொடரை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்திய அணியின் வடிவம் குறித்து பேசுகையில், பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் நல்ல பார்மில் உள்ளனர். கேப்டன் விராட் கோலி, கே.எல்.ராகுல், சிவம் போன்றவர்கள். வெஸ்ட் இண்டீஸ் பற்றி பேசுகையில், அவரது வீரர்களும் நல்ல பார்மில் காணப்பட்டுள்ளனர். ஆனால் இரு அணிகளிலும் பந்து வீச்சாளர்கள் போராடுவதைக் காணலாம்.
மூன்றாவது போட்டியில், இந்திய கேப்டனின் கவலை பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் தான் அதிக கவனம் இருக்கும் எனத் தெரிகிறது. இந்த போட்டியில் அவர்கள் விளையாடும் பதினொரு போரில் முகமது ஷமி இருக்கலாம் எனத் தகவல்.
வெஸ்ட் இண்டீஸ் பற்றி பேசுகையில், லென்ட்ல் சிம்மன்ஸ், நிக்கோலஸ் பூரன், எவின் லூயிஸ் நன்றாக விளையாடி வருகின்றனர். அவரது சுழற்பந்து வீச்சாளர் கைரி பியரும் ஈர்க்கப்பட்டார். வான்கடே ஸ்டேடியம் சாதனையும் மேற்கிந்திய தீவுகளுக்கு ஆதரவாக உள்ளது. அவர் இங்கு இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டையும் வென்றுள்ளனர்.
அதேசமயம், இங்கு விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே இந்தியா வென்றுள்ளது. அதனால் விராட் கோலி தலைமையிலான அணி சரியான வியூகம் வகுத்து வெற்றியை தனதாக்கிக் கொள்ளும். மறுபுறம், விண்டீஸ் வான்கடே ஸ்டேடியத்தில் தங்கள் சாதனையைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கும்.
இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, சஞ்சு சாம்சன், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷாப் பந்த், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், தீபக் முகமது ஷமி, புவனேஸ்வர் குமார்.
மேற்கிந்திய தீவுகள்: கீரோன் பொல்லார்ட் (கேப்டன்), ஃபேபியன் ஆலன், ஷெல்டன் கோட்ரெல், ஷிம்ரான் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர், கீமோ பால், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், கைரி பியர், நிக்கோலஸ் பூரன், தினேஷ் ராம்தீன், ஷெரிஃபன் ரதர்ஃபோர்ட், லெண்டல் சிம்மன்ஸ், கெஸ்ரிக் வில்லியம்ஸ், ஹேடன் வால்ஸ்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.