ஐபிஎல் 2022 போட்டியில் சென்னை அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா செயல்படுவார் அணி நிர்வாகம் அணிவித்தது. ஐபிஎல் போட்டிகள் ஆரம்பித்ததில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி செயல்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே தோனி அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற போகிறார் என்ற பேச்சு எழுந்தது. கடந்த ஆண்டு இது குறித்து தோனியிடம் கேட்கப்பட்ட போது, கண்டிப்பாக அடுத்த ஆண்டு விளையாடுவேன் என்று தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இந்த ஆண்டு யாரும் எதிர்பார்க்காத விதமாக தோனி ஜடேஜாவிடம் கேப்டன் பதவியை ஒப்படைத்தார்.
மேலும் படிக்க | IPL 2022 CSK vs MI: ஜடேஜாவிற்கு மாற்று வீரர் யார்?
கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி இந்த ஆண்டு தொடர் தோல்விகளை சந்தித்தது. கிட்டத்தட்ட பிளே ஆப் வாய்ப்பை நழுவ விட்ட சென்னை அணி புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் இருந்தது. கேப்டனாக இருப்பதால் தனது பேட்டிங்கில் கவனம் செலுத்த முடியவில்லை என்று ஜடேஜா மீண்டும் கேப்டன் பதவியை தோனியிடம் ஒப்படைத்தார். மீண்டும் சென்னை அணியின் கேப்டன் ஆனா தோனி தொடர் வெற்றிகளை பதிவு செய்தார். கடந்த போட்டியில் பீல்டிங் செய்த போது ஜடேஜாவிற்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாட வில்லை.
தற்போது இந்த தொடர் முழுவதில் இருந்தும் ஜடேஜா வெளியேறியுள்ளார் என்று தகவல் வெளியானது. மேலும், சிஎஸ்கே அணியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக விலகி உள்ளார் என்றும், சிஎஸ்கே அணியின் சமூக வலைதள பக்கத்தை அன்பாலோ செய்து விட்டார் என்று செய்திகள் பரவ ஆரம்பித்தது. இந்நிலையில், சென்னை அணியின் சிஇஓ இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் பரவும் எதுவும் உண்மை இல்லை, ஜடேஜா காயம் காரணமாக வெளியேறி உள்ளாரே தவிர, மற்ற எந்த பிரச்சனையும் இல்லை. அடுத்த ஆண்டு சென்னை அணியில் மீண்டும் விளையாடுவார் என்று தெரிவித்துள்ளார். இதனால் தற்போது சென்னை ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
மேலும் படிக்க | ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் ரவீந்திர ஜடேஜா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR