Mars Transit in Pisces: ஜோதிட சாஸ்திரத்தின் படி, நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ராசிகளை மாற்றுகின்றன. இதனால், ஒவ்வொரு ராசிக்காரர்களின் வாழ்க்கையையும் ஏதோ ஒரு வகையில் பாதிப்பு உண்டாகும். கிரகங்களின் மாற்றங்கள் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டு வந்து தரும் அதே வேளையில், சில ராசிக்காரர்கள், இதனால் தங்கள் வாழ்க்கையில் உடல் ஆரோக்கிய பாதிப்பு, மனக் கஷ்டம் உள்பட பல சவால்களை சந்திக்க வேண்டியிருக்கலாம்.
நவகிரகங்களில் ஒன்றான செவ்வாய், கிரகங்களின் தளபதியாக கருதப்படுகிறது. மற்ற கிரகங்களை போலவே, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு செவ்வாய் தனது ராசியை மாற்றுகிறது. ஜோதிட சாஸ்திரப்படி செவ்வாய் ஏப்ரல் 23ம் தேதி காலை 8.19 மணிக்கு குருவின் ராசியான மீன ராசிக்குள் நுழைகிறார். இதனால், சில ராசிக்காரர்கள் நன்மையடைவார்கள். எனினும், சிலர் மிக கவனமாக இருக்க வேண்டும். செவ்வாய் கிரகம் மீன ராசியில் நுழையும் போது எந்தெந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை தெரிந்து கொள்வோம்.
செவ்வாய் கிரகம் வலுவிழந்தாலோ அல்லது செவ்வாயின் நிலை சாதகமாக இல்லை என்றாலோ, தன்னம்பிக்கை குறைவு, தைரியமின்மை ஆகியவை ஏற்படும். மன உறுதி, ஆற்றல் மற்றும் வீரம் ஆகியவை குறைகிறது. இந்நிலையில், செவ்வாய் மீனத்தில் நுழையும் போது, 3 ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான ஏற்படும் என ஜோதிடர்கள் எச்சரித்துள்ளனர்.
சிம்ம ராசி: செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்
செவ்வாய் பெயர்ச்சி காரணமாக ரிஷபம் ராசிக்காரர்கள் குடும்பம், சமூகம் மற்றும் வியாபார விஷயங்களில் பிரச்சனைகளையும் சவால்களையும் சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் மனம் திறந்து பேசுவதன் மூலம், உறவை நல்ல முறையில் பராமரிக்கலாம். சஞ்சலமான விஷயங்களை தவிர்ப்பது நல்லது. நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். சொத்து தொடர்பான பிரச்சனைகளில் பொறுமையை கையாளவும். உடல் ரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மிகவும் சோர்வாக உணர்வீர்கள். உடல் ஆரோக்கியம் பாதிப்பதால், வேலையில் 100 சதவிகிதம் திறனை கொடுக்க முடியாது. இதனால் வேலையில், தொழிலில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலதிகாரிகளும் உங்கள் மீது அதிருப்தி கொள்ளலாம். அனுசரித்துச் செல்வதன் மூலம் பகைமையை தவிர்க்கலாம்.
மேலும் படிக்க | சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்
கன்னி ராசி: செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்
செவ்வாய் கிரகத்தின் இந்த சஞ்சாரத்தின் போது, கன்னி ராசிக்காரர்கள் சற்று குழப்பத்துடன் இருக்கலாம். மேலதிகாரிகள் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். இந்த காலகட்டத்தில் எதிர்மறை எண்ணங்கள் உங்களை ஆட்கொள்ளும். எனவே யோகா தியானத்தின் உதவியை நாடுவது பலன் தரும். உங்கள் திருமண வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். மூன்றாம் நபரின் குறுக்கீடு காரணமாக, குடும்ப வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். முதுகு வலி, மூட்டு வலி, செரிமான பிரச்சனை, போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். இருப்பினும், இந்த நேரத்தில், எச்சரிக்கையாக இருந்தால், பல உபாதைகளை தவிர்க்கலாம்.
மகர ராசி: செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்
மகர ராசிக்காரர்களுக்கு, செவ்வாய் பெயர்ச்சி காரணமாக சில உறவுகளுடன் சண்டைகள் சச்சரவுகள் அதிகரிக்கலாம். ஆனால், இந்த நேரத்தில் கொஞ்சம் கவனமாக வேலை செய்ய வேண்டும். உங்கள் வாழ்க்கை துணையுடன் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். கல்வியில் சில தடைகளை தரலாம். மேலும், உங்கள் உடல்நிலை சரியில்லாததால், நீங்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட முடியாமல் போகலாம். கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். தங்கள் தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு இடையே சமநிலையை பேண கடினமாக உழைக்க வேண்டும். குறிக்கோளை நிறைவேற்ற இடர்களை சந்திக்க நேரிடலாம். மனம் அமைதியான சூழலைப் பெற ஏங்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | குரு பெயர்ச்சி மே 1: இந்த ராசிகளுக்கு அரச வாழ்க்கை, பணம், புகழ், அதிர்ஷ்டம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ