சென்னை : பயணிகள் பாதுகாப்புக்காக ரயில் நிலையங்களில் வரப்போகும் புது ரூலஸ்..!

Railway | பயணிகள், குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் விரைவில் புதிய விதிமுறைகள் அமலுக்கு வர உள்ளன.

Railway Rules | ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாட்டில் விரைவில் புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

1 /9

அண்மைக்காலமாக தமிழ்நாட்டில் ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் நடைபெறும் குற்றச்சம்பவங்கள் காவல்துறை மீது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இதனால், குழந்தைகள், பெண்கள் மற்றும் ஒட்டுமொத்த ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழக டிஜிபி மற்றும் ரயில்வே டிஜிபி இருவரும் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

2 /9

இதில் ரயில் பயணத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது, பெண் காவலர்களின் பாதுகாப்பு செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ரயில் பயணத்தின்போது நடக்கும் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் ரயிலில் காவலர்களின் நடமாட்டத்தை அதிகரிப்பது மட்டும் பயணத்தில் இருக்கும்போதே ஆன்லைன் மூலம் குற்றச்சம்பவங்கள் குறித்து புகார் அளிப்பது எப்படி? என விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் வரக்கூடிய புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. 

3 /9

பணியில் இருக்கும் காவலர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் கோரிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்திய இரண்டு டிஜிபிக்களும், ரயில் நிலையங்களில் நடக்கும் குற்றச் சம்பவங்களை தடுப்பது குறித்தும் ஆலோசனை நடத்தியிருக்கின்றனர். 

4 /9

ரயில் நிலையங்களின் முறையாக கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளுதல், ரயில் நிலையங்களுக்குள் வந்து செல்லும் மக்களை முழுமையாக கண்காணிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தியிருக்கின்றனர்.

5 /9

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் லட்சக்கணக்கான பயணிகள் தினமும் வந்து செல்வதால் அங்கு வருபவர்களின் உடமைகளை முழுமையாக பரிசோதிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. 

6 /9

இதுதவிர சென்னையில் இருக்கும் புற நகர் ரயில் நிலையங்களில் கண்காணிப்பை அதிகரிப்பது, எந்தெந்த ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் உள்ளன என்பது குறித்து விரிவான ஆலோசனை இந்த சந்திப்பில் நடத்தப்பட்டிருக்கிறது. 

7 /9

இனி வரும் காலங்களில் ரயில் நிலையங்களில் திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் தொந்தரவு ஆகியவற்றை பெருமளவு குறைக்கும் வகையில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது என தமிழ்நாடு சட்ட ஒழங்கு டிஜிபி மற்றும் ரயில்வே டிஜிபி இருவரும் விரிவான ஆலோசனை நடத்தியிருக்கின்றனர்.

8 /9

இந்த சந்திப்புக்குப் பிறகு காவல்துறையினர் மற்றும் பயணிகளுக்கான விதிமுறைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் காவல்துறையினர் எப்படி செயல்பட வேண்டும், பயணிகள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய என்ன செய்ய வேண்டும் என்ற வதிமுறைகள் இருக்கும்.

9 /9

இதுதவிர மதுபோதையில் ரயில் நிலையங்களில் வருபவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடனடி புகார்களுக்கு ரயில்வே போலீஸ் ஹெல்ப்லைன் 1512 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இதில் அவசர உதவி தேவைப்படுபவர்களுக்கு ரயில்வே சார்பில் உதவி கிடைக்கும்.