பாம்பை பல்வேறு வண்ணங்களில் பார்த்திருந்தாலும், ரெயின்போ கலரில் இதற்கு முன் நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை. சமூக வலைதளங்களில் நாள்தோறும் அயிரக்கணக்கான விலங்குகள் வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒரு சில வீடியோக்கள் மட்டுமே அதிகமானோரின் கவனத்தை ஈர்க்கிறது. அந்தவகையில் பல மாதங்களுக்கு முன்பாக போடப்பட்ட ஒரு வீடியோ தற்போது ட்ரெண்டாகியுள்ளது. அப்படி அந்த வீடியோ திடீரென ட்ரெண்டாக காரணம் என்ன? என நீங்கள் கேட்கலாம். ஏற்கனவே கூறியதுபோல் ரெயின்போ கலரில் இருக்கும் பாம்பு தான் காரணம்.
மேலும் படிக்க | வாசம் மூக்கைத் துளைக்குது! அடங்க மறுக்கும் நாய்க்குட்டியின் அடக்க முடியாத துள்ளல்
அமெரிக்காவின் கலிஃபோர்னியா பகுதியில் ஜே ப்ரூ என்பவர் ஒரு ஊர்வன விலங்குகள் உயிரியல் பூங்கா ஒன்றை நிர்வாகித்து வருகிறார். அவர் அவ்வப்போது அங்கு இருக்கும் வித்தியாசமான வகை ஊர்வனைகளை வைத்து வீடியோ எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் கடந்த மே மாதம் தன்னுடைய பூங்காவில் உள்ள ஒரு ரெயின்போ நிற பாம்பு ஒன்று தொடர்பாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ அப்போது ஒரளவிற்கு நல்ல வியூஸ் மற்றும் லைக்ஸ் பெற்றுள்ளது. எனினும் சமீபத்தில் இந்த வீடியோவின் ஒரு பகுதியை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ரீல்ஸில் வைத்துள்ளார். அதைப் பார்த்த பலரும் அந்த பழைய வீடியோவை சென்று முழுமையாக பார்த்துள்ளனர்.
இதனால் தற்போது அந்த வீடியோவை 20 மில்லியன் பேருக்கு மேல் பார்த்து ரசித்துள்ளனர். அத்துடன் 1 மில்லியன் பேர் லைக் செய்துள்ளனர். அத்துடன் பலரும் ஆச்சரியத்துடன் இந்தப் பதிவில் தங்களது கருத்துகளை பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோவை பலரும் ரசித்து உள்ளனர். சமீபத்தில் இந்தியாவில் ஒரு சிறுவன் தன்னுடைய கோழிகளை அழைத்து செல்வதை தடுக்க முயன்ற வீடியோ மிகவும் வைரலானது. அந்த வகையில் உலகளவில் இந்த விலங்கு வீடியோ மிகவும் வைரலாக தொடங்கியுள்ளது. குறிப்பாக பல மாதங்களுக்கு முன்பாக பதிவிடப்பட்ட அந்த வீடியோ தற்போது ட்ரெண்டாக அந்த இன்ஸ்டா ரீல்ஸ்தான் காரணமாக கருதப்படுகிறது.
மேலும் படிக்க | ஓனம் ஸ்பெஷல்: கோழிக்கறி சர்ச்சையில் சிக்கிய போலீஸ் போட்ட ஓனம் டான்ஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ