Senior Citizens Latest News: பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அவற்றில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மூத்த குடிமக்களுக்கான குறிப்பிடத்தக்க புதுப்பிப்பை வெளியிட்டார். வரவிருக்கும் நிதியாண்டில் முதியோருக்கான வட்டி வருமானத்தில் TDS விலக்கு அதிகரிக்கப்படும் என்று அவர் கூறினார். இதனால் பல வித நன்மைகள் கிடைக்கவுள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Saving Schemes: இனி சேமிப்பு திட்டங்களில் அதிக நன்மைகள்
இந்த மாற்றம் நிலையான வைப்புத்தொகை (Fixed Deposit) மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizen Savings Scheme) போன்ற முதலீட்டு திட்டங்களின் மூலம் மூத்த குடிமக்களுக்கு அதிக நன்மைகள் கிடைப்பதை உறுதி செய்கிறது. FD கணக்கில் பணத்தை முதலீடு செய்யும் நோக்கம் உங்களுக்கு இருந்தால், அதை புதிய நிதியாண்டிலிருந்து ஒரு மூத்த குடும்ப உறுப்பினரின் பெயரில் செய்வது ஒரு சிறந்த யோசனையாக இருக்கும். ஏனெனில் இது அதிக வருவாய்க்கு வழிவகுக்கும். இது எப்படி நடக்கும்? இதற்கான கணக்கீடு என்ன? முழு விவரத்தையும் இங்கே காணலாம்.
Senior Citizens: மூத்த குடிமக்களுக்கு FD முதலீட்டில் இனி அதிக நன்மைகள்
நாட்டில் உள்ள பெரும்பாலான முதியவர்கள் நிலையான வைப்புத்தொகையை ஒரு பாதுகாப்பான முதலீட்டுத் தேர்வாகக் கருதுகின்றனர். தங்களது ஓய்வூதிய சேமிப்பில் எந்த வித ரிஸ்கும் எடுக்க அவர்கள் விரும்புவதில்லை. இதன் விளைவாக, அவர்கள் பெரும்பாலும் தங்கள் நிதியைப் பாதுகாக்க FD-களைத் தேர்வு செய்கிறார்கள். இதை உணர்ந்து, அரசாங்கம் FD -களுக்கான வரி விலக்கு வரம்புகளை விரிவுபடுத்தியுள்ளது.
TDS Limits: தற்போதைய TDS வரம்புகள் என்ன?
முன்னர், மூத்த குடிமக்களின் FD வட்டி மூலம் பெறப்படும் ஆண்டு வருமானம் ரூ.50,000 ஐத் தாண்டினால், TDS விதிக்கப்படும். இருப்பினும், புதிய நிதியாண்டு முதல், இந்த வரம்பு ரூ.1,00,000 ஆக உயரும். அதாவது, FD வைப்புகள் அல்லது SCSS போன்ற திட்டங்களில் மூத்த குடிமக்கள் ரூ.1,00,000 வரை ஈட்டும் வட்டியில் எந்த TDS-ம் கழிக்கப்படாது.
TDS Exemption: மூத்த குடிமக்களுக்கான நன்மைகளால் நீங்கள் எவ்வாறு பயனடையலாம்?
மூத்த குடிமக்களுக்கான TDS விலக்கு வரம்பு அதிகரிக்கப்பட்டாலும், மற்றவர்களுக்கான வரம்பு ரூ.40,000 ஆகவே உள்ளது. ஆகையால், புதிய நிதியாண்டில் FD -இல் பணம் டெபாசிட் செய்ய விரும்பினால். உங்கள் சொந்த பெயருக்குப் பதிலாக வீட்டில் உள்ள வயதான குடும்ப உறுப்பினரின் பெயரில் FD-ஐத் திறந்தால், நீங்கள் ஈட்டும் வட்டிக்கு கூடுதல் விலக்கு பெறலாம்.
ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம்
ஒருவர் தனது பெயரில் 7% வட்டி விகிதத்தில் 3 வருட FD -இல் ரூ.3,00,000 முதலீடு செய்கிறார் என வைத்துக்கொள்வோம். இதன் மூலம் ரூ.69,432 வட்டி கிடைக்கும். வழக்கமான தனிநபர்களுக்கான TDS வரம்பு ரூ.40,000 என்பதால், மொத்த வட்டியில் இருந்து TDS கழிக்கப்படும். மாறாக, நீங்கள் ஒரு மூத்த குடிமகனின் பெயரில் அதே தொகையை முதலீடு செய்தால், அந்த கழிப்பைத் தவிர்க்கலாம்.
- இதுவரை, மூத்த குடிமக்களின் நிலையான வைப்புத்தொகை கணக்கில், வட்டி மூலம் ஆண்டுக்கு ரூ.50,000 க்கு மேல் சம்பாதித்திருந்தால், TDS கழிகப்படும்.
- ஆனால் புதிய நிதியாண்டிலிருந்து, அந்த வரம்பு ரூ.1,00,000 ஆக உயர்கிறது.
- அதாவது, TDS கழிக்கப்படாமல் நிலையான வைப்புத்தொகை மற்றும் SCSS போன்றவற்றிலிருந்து ரூ.1,00,000 வரை வட்டியைப் பெறலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ