நயன்தாராவுடன் சண்டை..பிரச்சனைக்கு பின்னர் தனுஷ் நக்கலாக போட்ட பதிவு!!

Dhanush First Post After Dispute With Nayanthara : நடிகர் தனுஷ்-நயன்தாராவிற்கு இடையேயான பிரச்சனை குறித்து, சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதங்கள் எழுந்துள்ளது. இந்த பிரச்சனைக்கு பிறகு முதன்முறையாக தனுஷ் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.   

Written by - Yuvashree | Last Updated : Nov 25, 2024, 11:41 AM IST
  • தனுஷ்-நயன்தாரா பிரச்சனை!
  • முதன்முதலாக போஸ்ட் போட்ட தனுஷ்
  • என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?
நயன்தாராவுடன் சண்டை..பிரச்சனைக்கு பின்னர் தனுஷ் நக்கலாக போட்ட பதிவு!! title=

Dhanush First Post After Dispute With Nayanthara : 2024ஆம் ஆண்டு அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் ஆண்டாக அமைந்து விட்டது. நயன்தாராவிற்கும் தனுஷிற்கும் பிரச்சனை இருப்பது அனைவருக்கும் தெரிந்தாலும், அது குறித்து யாரும் வெளியில் பேசாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு நயன்தாரா வெளியிட்டிருந்த ஒரு பதிவு, பெரும் புயலை கிளப்பியது. 

தனுஷ்-நயன் பிரச்சனை:

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக விளங்குபவர், நயன்தாரா. இவர் போலவே, முக்கிய நாயகராக வலம் வந்து கொண்டிருப்பவர், தனுஷ். ஒரு காலத்தில், இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்தனர். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்களின் நட்பில் விரிசல் ஏற்பட்டது. இதற்கு இடையில், நயன் காதல்-திருமணம்-குழந்தைகள் என செட்டில் ஆகிவிட, தனுஷ் விவாகர்தத்து-தொடர்ந்து படங்களில் கமிட்மெண்ட் என வேறு டிராக்கில் பயணம் செய்ய தொடங்கினார். 

சில நாட்களுக்கு முன்பு நயன்தாரா, 3 பக்க கடிதம் ஒன்றை வெளியிட்டார். அதில், தனது திருமண ஆவணப்படத்தை வெளியிட தடையின்மை சான்றிதழை கொடுக்க, நடிகர் தனுஷ் 2 வருடங்களாக அலைக்கழித்ததாகவும், மனதில் வன்மம் வைத்துக்கொண்டு அவர் இதை செய்ததாகவும் கூறியிருந்தார். மேலும், நானும் ரெளடி தான் படத்தின் BTS காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி கேட்டு தனுஷ் அனுப்பியிருந்த வக்கீல் நோட்டிஸ் குறித்தும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். 

இசை வெளியீட்டு விழாக்களில் பஞ்ச் வசனங்களை பேசி, ரசிகர்களை ஏமாற்றுவதில் பாதி கூட உண்மையில் நீங்கள் இல்லை என்று கூறிய அவர், பிறர் மகிழ்ச்சியில் இருந்து சந்தோஷமடைய கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தனுஷிற்கு அறிவுறுத்தியிருந்தார். நயன்தாராவின் இந்த போஸ்ட், பலரையும் நிலைகுலைய செய்தது. 

நன்றி தெரிவித்த நயன்தாரா:

நெட்ஃப்ளிக்ஸில் நயன்தாரா-பியான்ட் தி ஃபேரி டேல் படம் வெளியானதை அடுத்து, தனக்கு தடையின்மை சான்றிதழ் வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து, நயன்தாரா ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் கோலிவுட், டோலிவுட் என பல்வேறு திரை பிரபலங்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. தனுஷின் பெயர் மட்டும் இடம் பெறவே இல்லை, 

மேலும் படிக்க | தனுஷ் vs நயன்தாரா: இருவரையும் வைத்து செய்யும் நெட்டிசன்கள்! வைரலாகும் மீம்ஸ்..

தனுஷ் போட்ட முதல் பதிவு!

நடிகை நயன்தாரா, இவ்வளவு பேசிய பிறகு தனுஷ் தரப்பில் இருந்து ஏதேனும் பதில் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த பிரச்சனை நடந்த சமயத்தில் தனுஷ், வெளியூரில் படப்பிடிப்பிற்காக சென்றிருந்ததாகவும், இதனால் அவர் இது குறித்து எதுவும் கூறவில்லை என்றும் கூறப்படுகிறது. தற்போது, அனைத்தும் ஓய்ந்திருக்கும் நிலையில், தனுஷ் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார். 

பிரபல டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால், நேற்றுடன் தனது போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இது குறித்து பதிவிட்டிருக்கும் தனுஷ், “நன்றி ரஃபா..டென்னிஸ் இனி முன்பு போல இருக்காது” என்று குறிப்பிட்டிருக்கிறார். இவ்வளவு பெரிய பிரச்சனை நடந்த சமயத்தில், அது குறித்து எதுவும் பேசாமல், இப்படிப்பட்ட பதிவை தனுஷ் வெளியிட்டிருப்பது, நக்கலாக இருப்பதாக ரசிகர்கள் சிலர் இணையத்தில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 

கஸ்தூரி ராஜா பேச்சு:

தனுஷின் தந்தையும், இயக்குநருமான கஸ்தூரி ராஜா, சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது நயன்தாரா கூறுவது போல தடையின்மை சான்றிதழை பெறுவதற்கு அவர்கள் 2 வருடங்கள் காத்திருந்ததாக கூறுவது உண்மையல்ல என்று கூறியிருக்கிறார். இது குறித்து பேசுவதற்கும் விருப்பமில்லை என்றும் தெரிவித்தார். 

மேலும் படிக்க | நயன்தாரா-தனுஷ் விவகாரம்: நயனுக்கு ஆதரவு கொடுத்த தனுஷ் பட நடிகை! யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News