அனுராக் காஷ்யப் வழங்க, சைஜு ஸ்ரீதரனின் "ஃபுட்டேஜ்" டிரெய்லர் வெளியீடு

அனுராக் காஷ்யப் வழங்க, சைஜு ஸ்ரீதரனின் "ஃபுட்டேஜ்" டிரெய்லர் வெளியாகியுள்ளது.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 14, 2024, 11:05 AM IST
  • மஞ்சு வாரியர் முதன்மைப் பாத்திரத்தில் அட்டகாச நடிப்பை வழங்கியுள்ளார்.
  • அற்புதமான விஷுவல்கள் மற்றும் அழுத்தமான கதை என மிகச்சிறப்பான அனுபவம் தருகிறது.
அனுராக் காஷ்யப் வழங்க, சைஜு ஸ்ரீதரனின் "ஃபுட்டேஜ்" டிரெய்லர் வெளியீடு title=

தனித்துவமான கதைசொல்லல் மற்றும் புதுமையான தோலைநோக்கு படைப்புகளுக்காக பெயர் பெற்ற எடிட்டர் சைஜு ஸ்ரீதரன் "ஃபுட்டேஜ்" படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரான அனுராக் காஷ்யப் வழங்க, "ஃபுட்டேஜ்" டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இது சினிமா ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

“ஃபுட்டேஜ்” படத்தின் டிரெய்லர் தனித்துவமான அழகியல் மற்றும் அழுத்தமான கதைசொல்லலுடன் படம் பற்றிய ஒரு பார்வையை நமக்கு வழங்குகிறது. அற்புதமான விஷுவல்கள் மற்றும் அழுத்தமான கதை என மிகச்சிறப்பான அனுபவம் தருகிறது.

மேலும் படிக்க | வசீகரிக்கும் அழகு.. தங்கம் போல மிளிரும் நயன்தாரா உடன் விக்னேஷ் சிவன்

மஞ்சு வாரியருடன் நாயர் விசாக் மற்றும் காயத்ரி அசோக் ஆகியோர் இணைந்து அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளனர். மூவி பக்கெட், பேல் ப்ளூ டாட் பிலிம்ஸ் மற்றும் காஸ்ட் என் கோ என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் கீழ் பினீஷ் சந்திரன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இணை தயாரிப்பாளர்களான ராகுல் ராஜீவ் மற்றும் சூரஜ் மேனன் ஆகியோருடன், லைன் புரொடியூசர் அனீஷ் சி சலீம் ஆகியோர் இந்த மாறுபட்ட திரைப்படத்தை உயிர்ப்பிப்பதில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர்.

ஷப்னா முகமது மற்றும் சைஜு ஸ்ரீதரன் ஆகியோரின் கூட்டு முயற்சியின் மூலம் வடிவமைக்கப்பட்ட திரைக்கதை மற்றும் வசனங்களில் இப்படம் ஒரு அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ளது. சந்தீப் நாராயண் வடிவமைத்த இத்திரைப்படத்தில் அஸ்வெகீப்சர்ச்சிங் இசைக்குழுவின் பாடல்களும், சுஷின் ஷியாமின் பின்னணி இசையும் அற்புதமாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் ஷினோஸ் வினோதமான மற்றும் அழுத்தமான காட்சிகளை ஃபவுண்ட் ஃபுட்டேஜ் வகையில் படம்பிடித்துள்ளார், அதே நேரத்தில் கலை இயக்குனர் அப்புண்ணி சாஜன் இந்த பரபரப்பான சவாரிக்கு சரியான கலை இயக்கத்தை அமைத்துள்ளார். அஸோஷியேட் இயக்குநர் பிரினிஷ் அழுத்தமான படைப்பை வழங்குவதற்காக உறுதுணையாக இருந்துள்ளார்.

நிக்சன் ஜார்ஜின் ஒலி வடிவமைப்பு, இர்ஃபான் அமீரின் ஆக்‌ஷன் கோரியோகிராஃபி மற்றும் மைண்ட்ஸ்டீன் ஸ்டுடியோஸ் அற்புத VFX ஆகியோரின் உழைப்பில், இப்படம் ஒரு புதிய அனுபவமாக அமைந்துள்ளது. ரோனெக்ஸ் சேவியரின் ஒப்பனை மற்றும் சமீரா சனீஷின் ஆடைகள் கதாபாத்திரங்களுக்கு வலு சேர்த்துள்ளது. அழகியல் குஞ்சம்மாவால் வடிவமைக்கப்பட்ட போஸ்டர்கள் வரவேற்பை பெற்றுள்ளது. மார்க்கெட்டிங் பணிகளை ஹிட்ஸ் நிறுவனம் கையாளுகிறார்கள்.

மேலும் படிக்க | இந்தியன் 2 படத்தில் நடிக்க நடிகர் சித்தார்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News