தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் மாற்றுத்திறனாளி ஒருவரை கோவிலுக்கு அழைத்து வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது கோவிலில் சௌந்தரபாண்டி அன்னபோஸ்ட்டாக தன்னை தேர்வு செய்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்க சண்முகத்தை பார்த்த உடன்குடி இந்த விஷயத்தை சொல்கிறான். உடனே கோவிலுக்குள் வரும் ஷண்முகம் சௌந்தரபாண்டி ஏற்பாடு செய்து வைத்திருந்த பத்திரத்தை கிழித்து போட்டு நான் இந்த தேர்தலில் நிற்கிறேன் என்று ஷாக் கொடுக்கிறான்.
சௌந்தரபாண்டி நீ தான் நிக்க மாட்டேன்னு சொல்லிட்டியேலே என்று கேட்க அது என் பொண்டாட்டியை சந்தோஷப்படுத்துவதற்காக சொன்னது, நான் எலெக்ஷன்ல நிற்கிறேன் என்று சொல்ல அதற்கான டைம் முடிந்து போச்சு என்று சௌந்தரபாண்டி சொல்கிறார். ஆனால் ஷண்முகம் அது எப்படி முடியும்? இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கல, நாமினேஷன் நடக்கல. அப்படியிருக்கும் போது உங்கள எப்படி அன்னபோஸ்ட்டாக தேர்வு செய்ய முடியும் என செக்மேட் வைக்கிறான்.
மேலும் படிக்க | குய்கோ to பார்பி: ஓடிடியில் இந்த வாரம் பார்க்க வேண்டிய முக்கிய படங்கள்!
அதனை தொடர்ந்து நான் இந்த தேர்தலில் நிற்கிறேன், முடிந்தால் போட்டி போட்டு ஜெயித்து காட்டுங்க என்று ஷண்முகம் கிளம்பி செல்ல வீட்டிற்கு வந்த சௌந்தரபாண்டி புலம்பி கொண்டிருக்க முத்துப்பாண்டி சண்முகத்தின் மீது ஒரு பொய் கேஸ் போட்டு ஜெயிலுக்கு அனுப்பிட்டா ப்ரெசிடெண்ட் பதவியும் போய்டும், இந்த தர்மகத்தா தேர்தலிலும் நிற்க முடியாது என்று சொல்ல சௌந்தரபாண்டி அப்படியே செய்திடலாம்.
நான் எல்லா ஏற்பாடுகளையும் செய்யறேன், நீ பொய் கேஸ் போட்டு உள்ள தள்ளு என்று சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
மேலும் படிக்க | சலார் படத்தில் பிரபாஸ் வாங்கிய சம்பளம் மட்டும் இவ்வளவா..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ