பகவந்த் கேசரி படத்தில் அப்படி என்ன இருக்கு? விஜய் 5 முறை பார்க்க காரணம் என்ன?

Actor Vijay Saw Bhagavanth Kesari Movie 5 Times : நடிகர் விஜய், தற்போது தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்க வேண்டுமென அவர் வேறு ஒரு இயக்குநரை கேட்டதாக கூறப்படுகிறது.   

Written by - Yuvashree | Last Updated : Jan 12, 2025, 01:37 PM IST
  • விஜய்யின் தளபதி 69 தெலுங்கு ரீ-மேக்கா?
  • பகவந்த் கேசரி படத்தை 5 முறை பார்த்த விஜய்..
  • அப்படி அந்த படத்தில் என்ன இருக்கு?
பகவந்த் கேசரி படத்தில் அப்படி என்ன இருக்கு? விஜய் 5 முறை பார்க்க காரணம் என்ன? title=

​Actor Vijay Saw Bhagavanth Kesari Movie 5 Times : தமிழ் திரையுலகில் மிகப்பெரிய நடிகராக விளங்கும் விஜய், தனது 69வது படத்துடன் திரைப்பயணத்தை முடித்துக்கொள்ள இருக்கிறார். இந்த நேரத்தில், அவர் தனது கடைசி படத்தை இயக்க வேண்டுமென ஒரு இயக்குநரிடம் கோரிக்கை வைத்ததாகவும், அதற்கு அந்த இயக்குநர் மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

தளபதி 69:

நடிகர் விஜய், வெகு விரைவில் சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலுக்குள் நுழைய இருக்கும் விஜய், தனது கடைசி படமான ‘தளபதி 69’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம், வரும் அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது. இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைப்பெற்று வந்தது. பூஜா ஹெக்டே மற்றும் விஜய்க்கான பாடல் உள்ளிட்ட சில காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தில் பாபி டியோல், நரேன், மமிதா பைஜு, பிரியாமணி உள்ளிட்டாேர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாவதுண்டு. அந்த வகையிலான ஒரு தகவலைத்தான் தற்போது விடிவி கணேஷும் தெரிவித்திருக்கிறார். 

பாலைய்யா படத்தை 5 முறை பார்த்த விஜய்!!

சமீபத்தில் நடிகர் விடிவி கணேஷ் ஹைதராபாத்தில் நடந்த ஒரு பட விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், கடந்த ஆண்டு விஜய்யை நேரில் சந்தித்ததாகவும், அப்போது அவர் தன்னிடம் இயக்குநர் அனில் ரவிபுடி தனக்கு நல்ல நண்பர் என கூறியதாகவும், அவர்தான் என்னுடையை கடைசி படத்தை இயக்குவார் என கூறியதாகவும் விடிவி கணேஷ் தெரிவித்திருக்கிறார். மேலும், பால கிருஷ்ணா நடிப்பில், தெலுங்கு மொழியில் வெளியான பகவந்த் கேசரி படத்தை விஜய் 5 முறை பார்த்ததாகவும் விடிவி கணேஷ் தெரிவித்தார். 

இயக்குநரிடம் கோரிக்கை வைத்த விஜய்!

தொடர்ந்து பேசிய விடிவி கணேஷ், பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடியை தனது கடைசி படத்தை இயக்குமாறு கோரிக்கை விடுத்ததாகவும், அவர் பேசினார். தொடர்ந்து, தான் ரீ-மேக் படத்தை இயக்க மாட்டேன் என அனில் ரவிபுடி மறுத்து, விஜய்யின் கடைசி படத்தை இயக்க மறுத்ததாகவும் விடிவி கணேஷ் பேசினார். அவர் கடைசி படத்தை இயக்க 4-5 இயக்குநர்கள் லைனில் நின்ற போதும், அனில் தன் படத்தை இயக்க வேண்டும் என விஜய் விரும்பிய விஷயத்தை விடிவி கணேஷ் போட்டு உடைத்திருக்கிறார். 

பகவந்த் கேசரி படத்தில் என்ன இருக்கு?

பகவந்த் கேசரி படம், வழக்கமான டேம்ப்ளேட் நிறைந்த ஒரு அக்மார்க் தெலுங்கு படம்தான். குடும்ப பாசம், ஆக்ஷன் காட்சிகள், காதல், பாடல், போர் அடிக்காத திரைக்கதையுடன் ரசிகர்களை என்டர்டெயின் செய்த படம் இது. இந்த படம், ரூ.100 கோடியை தாண்டி வசூலித்த படமாகும். இந்த கதை விஜய்யை ஈர்த்திருக்கலாம் என்றும், இதனால் அந்த படத்தின் இயக்குநருடன் கை காேர்க்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

கதை என்ன? 

பகவந்த் கேசரி படம், ஒரு முன்னாள் கைதியை பற்றிய படமாகும். இதில் ஹீரோ, தனது நண்பன் இறப்பிற்கு பிறகு அவரது மகள் விஜிக்கு கார்டியனாக மாறுகிறார். தனது மகள் இராணுவத்தில் சேர வேண்டும் என விரும்பிய நண்பனின் ஆசையை, நிறைவேற்ற நினைக்கும் ஹீரோ, அதற்காக நண்பனின் மகளை அதற்காக தயார் செய்ய நினைக்கிறார். ஆனால் இதில் அந்த மகளுக்கு உடன்பாடில்லை.

இதனால் இருவரும் எதிரும் புதிருமாக மாறுகின்றனர். நிலைமை இப்படியிருக்க, ஒரு பெரிய தாெழிலதிபரை சிக்க வைக்கும் ஆவணங்கள், விஜியின் லேப்டாப்பில் மாட்டிக்கொள்கிறது. இதை தெரிந்த அந்த தொழிலதிபர் அவளை தீர்த்து கட்ட முயற்சிக்கிறான். இதிலிருந்து விஜியை காப்பாற்றும் ஹீரோவுக்கும், அந்த தொழிலதிபருக்கும் முன்னாலேயே பகை இருக்கிறது. அது என்ன? விஜி இராணுவத்தில் சேர்நதாரா இல்லையா என்பதுதான் மீதி படம்.

மேலும் படிக்க | தளபதி 69: விஜய்யுடன் 2ஆம் முறையாக இணைந்த 39 வயது நடிகை! அவர் யார் தெரியுமா?

மேலும் படிக்க | தளபதி 69 : விஜய்யுடன் சேர்ந்து நடிக்க மறுத்த சத்யராஜ்!! காரணம் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News