சிக்கன் vsமட்டன் எது உடலுக்குச் சிறந்தது? இதில் இந்த பகுதி சாப்பிட்டால் உடம்புக்கு நல்லதாம்!

வாரக் கடைசியில் அதிகமான வீட்டில் அசைவ உணவை எடுத்துக்கொள்வர். அதுமட்டுமல்லாமல் சிலர் சிக்கன் அதிகமாகச் சாப்பிடுவார்கள் மற்றும் மட்டன் அதிகமாகச் சாப்பிடுபவர்களும் உண்டு. அந்தவகையில் உடலுக்கு எது சிறந்தது என்று இங்குத் தெரிந்துக்கொள்ளுங்கள்.

கிராமங்கள் முதல் நகரங்கள் வரை வார இறுதியில் அசைவ உணவு சமைத்துச் சாப்பிடுவது வழக்கம். அசைவ உணவு எதற்காக வார இறுதியில் சாப்பிடுகின்றனர். சிக்கன் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் மற்றும் மட்டன் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் உள்ளன. இரண்டில் எது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று அனைத்து விவரமும் இங்குத் தெரிந்துகொள்ளுங்கள்.

1 /8

சிக்கன் மற்றும் மட்டன் இரண்டிலும் கொழுப்பு நிறைந்துள்ளன. ஆனால் இவற்றில் எது உடலுக்கு நல்லது என்று தெரிந்துகொள்ளுங்கள். 

2 /8

கொழுப்பு குறைவாக இருக்கும் கறியை ஆங்கிலத்தில் ஒயிட் மீட் என்று அழைப்பர். அதிகம் கொழுப்பு இருக்கும் கறியை ரெட் மீட் என்று அழைப்பர். 

3 /8

மட்டனில் அதிகமாக ரெட் மீட் நிறைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதில் அதிகமான கொழுப்புகள் உள்ளன. சிக்கனில் ஒயிட் மீட் நிறைந்துள்ளது.அதாவது அதன் மார்பு பகுதி ஒயிட் மீட்டை சேர்ந்தது என்று சொல்லப்படுகிறது.

4 /8

சிக்கனில் கோழிக் கால் மற்றும் தொடை இரண்டும் ரெட் மீட்டை சேர்ந்தது. இதில் கொழுப்பு அதிகமாக நிறைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.  

5 /8

மட்டன்:சிக்கனில் 100 கிராமுக்கு 14 கிராம் கொழுப்பு உள்ளது. மாறாக மட்டனில் 100 கிராமுக்கு 20 கிராம் கொழுப்பு உள்ளன. மட்டனை மாதம் ஒருமுறை உணவில் சேர்த்துச் சாப்பிட வேண்டும். அந்தவகையில் வாரந்தோறும் சாப்பிடக்கூடாது.

6 /8

சிக்கன்:சிக்கன் சாப்பிடும் பிரியர்கள் கவனத்திற்கு அதிகமாகக் கோழிக் கால் மற்றும் தொடை சாப்பிடுவதைக் குறைத்துக்கொள்ளுங்கள். மாறாக சிக்கன் மார்பு பகுதியைச் சாப்பிடுங்கள். சிக்கன் வாரம் ஒரு முறை மட்டுமே சாப்பிடுவது நல்லது. 

7 /8

நல்லது மற்றும் தீயது: சிக்கன் மற்றும் மட்டன் இரண்டிலும் பொதுவாக நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது கொழுப்பின் அளவு மற்றும் ஆரோக்கியம். உடலுக்குத் தேவையான கொழுப்பு நிறைந்த ஆரோக்கிய உணவுகளை அளவுடன் சாப்பிடுவது நல்லது. அளவுக்கு மீறி அதிகமாகச் சாப்பிட்டால் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.   

8 /8

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான மற்றும் வீட்டு வைத்தியங்கள் சார்ந்த கருத்துக்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)