Relationship Tips | வாழ்க்கை பயணம் மிகவும் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்றால் உங்களுடன் இருப்பவர்கள் அத்தகைய நபர்களாக இருக்க வேண்டும். அதனால், உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கும் வித்திடுபவர்களை அருகில் வைத்துக் கொள்ளலாம். மற்றவர்களை விலக்கி வைத்துக் கொள்வது நல்லது. அந்தவகையில் உங்கள் வாழ்க்கையில் யாரை எல்லாம் சேர்த்துக் கொள்ள வேண்டும், யாரிடம் எல்லாம் விலகி இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
நட்பு, காதல், அன்பு, உறவு, தொழில் என எதுவாக இருந்தாலும் அடிப்படையாக இருப்பது நம்பிக்கை மட்டுமே. அந்த நம்பிக்கைக்கு ஏதாவதொரு இடத்தில் இழுக்கு வரும்போது நாம் கலங்கிவிடுவோம், முற்றிலுமாக சிதைந்துவிடுவோம். அந்த துரோகத்தில் இருந்து மீண்டு வருவது சாதாரண விஷயமல்ல. காயம், வலி என நம்மை நாள்தோறும் வாட்டிவதைக்கும். ஒவ்வொரு நாள் விழிக்கும்போது, நம்முடன் இருந்து கொண்டே செய்த துரோகத்தின் வீச்சு, எண்ணத்தின் அலைகளாக ஓடிக்கொண்டே இருக்கும். பொருளாதார இழப்பு, காலவிரயம் என பல்வேறு கசப்பான அனுபவங்களையும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இப்படியான இக்கட்டான சூழலுக்கு காலம் மட்டுமே மருந்து என்பதால், இயல்பு நிலைக்கு திரும்பும் வரை பொறுமை அவசியமாகிறது. அதேநேரத்தில், தன்னை ஏமாற்றியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குவது என்பதும் நாம் பின்பற்றி வரும் இயல்பான நடைமுறை தான். அதாவது, மன்னிப்பு கொடுத்து, மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குவது. நமக்குள் ஏற்பட்டிருக்கும் வலிக்கும், காயத்துக்கும் இதுவும் ஒருவகையான மருந்து என்றால் மறுப்பதற்கில்லை. ஆனால், இந்த இடத்தில் நீங்கள் நிச்சயம் யோசிக்க வேண்டும். யாரை மீண்டும் சேர்த்துக்கொள்ளலாம்?, யாருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும்? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு சில நபர் நம்மை விட்டு விலகினாலே மன அழுத்தம், காயம், வலி மற்றும் பிரச்சனைகளில் இருந்து முழுமையாக விடுபட்டுவிடலாம். அந்த நேரத்தில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் உணர்வீர்கள்.
ஒரு சிலருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தால், ஏற்கனவே செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, தன்னை தகுதியுள்ளவர்களாகவும், நம்பகமானவர்களாவும் மாற்றிக்கொள்கிறார்கள். ஆனால், ஒரு சிலர் நம்பகமானவர்கள்போல் நடித்துக்கொண்டு, அக்கறைக்காட்டி நமக்கு மீண்டும் சேதாரத்தை ஏற்படுத்திக்கொண்டிருப்பார்கள். அவர்கள் மேலும் நம்மை படுகுழியில் தள்ளிவிடுவார்கள். இந்த இடத்தில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.
அதாவது, கடந்தகாலங்களில் அவர்களின் செயல்பாடு, நடைமுறைகள் மற்றும் அணுகுமுறைகள் மீளாய்வு செய்ய வேண்டும். தெரிந்து அல்லது தெரியாமல் ஒரே ஒருமுறை தவறு செய்பவர்கள் அல்லது சூழ்நிலை காரணமாக அந்த தவறு செய்வதற்கு தள்ளப்பட்டவர்கள், ஆனால் கடந்தகாலங்களில் மிகவும் நேர்மையாகவும், நம்பிக்கையாகவும் இருந்துள்ளார்கள் என்பது போன்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் சேர்த்து கொள்வது குறித்து பரிசீலிக்கலாம். அவரால் உங்களுக்க மன அழுத்தம், பிரச்சனைகள் வராது என்ற நம்பிக்கை உங்களுக்குள் ஏற்பட்டால் மட்டுமே அதனை நீங்கள் செய்ய வேண்டும். பாசாங்கு செய்பவர்களாக இருந்து, உங்களுக்கும் நம்பிக்கை வரவில்லை என்றால், அவர்களை மீண்டும் சேர்த்துக்கொள்வது, நீங்களே பிரச்சனைக்குள் சென்று சிக்கிக்கொள்வதற்கு சமம்.
உங்கள் மகிழ்ச்சியை பிரதானப்படுத்தி மட்டுமே முடிவு எடுங்கள். மற்றொருவரால் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என்றால் அவருடன் இணைந்து பழகலாம் இல்லையென்றால் தவிர்த்துவிடுவது நல்லது. மன அழுத்தம், சூழ்ச்சி, கவலை, சோர்வு போன்ற உணர்வுகளை கொடுக்கும் மனிதர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுக்காமல், அவர்களிடம் இருந்து விடுதலை பெற்று மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
மேலும் படிக்க | 2025-ல் தலைவர்களுக்கு தேவையான 6 திறன்கள்! என்னென்ன தெரியுமா?
மேலும் படிக்க | இரவு 7 மணிக்குள் டின்னர் சாப்பிடுவதால் ஏற்படும் 7 நன்மைகள்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ