Secrets For Women To Become Boss Lady : ஆண் பெண் பேதமின்றி அனைவருக்குமே தலைமையில் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் உலக அளவில் பெரும்பான்மையான இடங்களில் ஆண்கள் மட்டுமே தலைமையில் இருக்கின்றனர். ஆனால், அப்படி இருக்கும் பெண்களிடம் இருந்து கூட பல சமயங்களில் அதிகாரம் என்பது பிடுங்கப்படுகிறது. அப்போது என்ன செய்ய வேண்டும் என்பதே பலருக்கு தெரியவில்லை. பெண்கள், பாஸ் லேடியாக இருக்க அவர்கள் சில சீக்ரெட்டை பின்பற்ற வேண்டியிருக்கிறது. அவை என்னென்ன தெரியுமா?
1.நீங்கள் நீங்களாக இருப்பது:
தலைமைத்துவம் என்பது ஒரு நாட்களில் அல்லது இரண்டு நாட்களில் வந்து விடும் திறன் கிடையாது. இதிலும் கற்றல் முறை மற்றும் தவறு செய்யும் முறைகள் இருக்கின்றன. எனவே, முதலில் நீங்கள் நீங்களாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். யாருக்காக உண்மையாக இருக்கிறோமோ இல்லையோ நமக்கு நாம் முதலில் உண்மையாக இருக்க வேண்டும். இதனால் நமக்கு பிறரை புரிந்து கொள்ளும் திறன் அதிகரிப்பதுடன் எந்த விஷயத்தையும் மனம் திறந்து முகத்திற்கு நேராக கூறவும் உதவும். பிறரை பார்த்து நாம் இப்படி இருக்க வேண்டும் என்று எண்ணுவதை விட, நாம் நாமாகவே இருந்துவிட்டு சென்றுவிட வேண்டும்.
2. குழுவாக செயல்பட வேண்டும்..
தனித்து நிற்கும் மனிதர்களுக்கு வெற்றி என்பது எப்போதாவதுதான் கிட்டும். ஆனால் நமக்கு ஆதரவு தரும் சிலரை அருகில் வைத்துக் கொண்டால் அந்த வெற்றியை அடிக்கடி எட்டிப் பார்த்து வர முடியும். நம்முடைய நண்பர்கள், கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள், உடன் வேலை பார்ப்பவர்கள் உள்ளிட்டோரில் யாரெல்லாம் உங்களுக்கு சரியான வழியை கூறுகிறார்கள் என்பதை கண்டறிந்து, அதன் வழியே செல்ல வேண்டும். இது பல நேரங்களில் நாம் தனித்து நிற்கும் சமயங்களில் வலுவாக நம்மை மாற்றிக் கொள்ள உதவும். அது மட்டுமின்றி, நமக்கு தெரியாதவற்றையும் பிறர் தெரிந்து வைத்திருப்பர். இதனாலும் நாம் நம்பகமானவர்களுடன் உறவை வளர்த்துக் கொள்வது நல்லது.
3.தெளிவு:
எந்தவித இலக்குமின்றி தலைமையில் இருப்பது என்பது நம்மை பெரிய இடத்திற்கு கொண்டு செல்லாது. எனவே தலைமையில் இருக்க தெளிவான மனப்பான்மை அவசியம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இப்படி ஒரு இலக்கை தெளிவாக வைத்துக்கொண்டால் உங்களால் கண்டிப்பாக நீங்கள் செல்ல நினைக்கும் இடத்திற்கு சென்று விடலாம். உடன் இருக்கும் பலரையும் மோட்டிவேட் செய்து அவர்களை உங்களுடன் பயணிக்க வைக்கலாம்.
4. மன உறுதி:
எந்த இடத்தில் இருந்தாலும் நம்மை தேடி தடைகள் வருவது தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் இதை நாம் எப்படி சமாளிக்கிறோம் என்பதை பொறுத்துதான் நமது திறமை அமைகிறது. இதற்கு அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் மன உறுதியும் இருக்க வேண்டியது அவசியம். பல சமயங்களில் நீங்கள் போட்டு வைத்த திட்டம் சொதப்பலாம், நீங்கள் நினைத்தவாறு ஒரு விஷயம் போகாமல் இருக்கலாம். அப்போது டென்ஷன் ஆகாமல் சூழலுக்கு ஏற்றவாறு உங்களை நீங்கள் மாற்றிக் கொள்வது அவசியம். இப்படி இருந்தால் இந்த தடையை எதிர்கொண்டாலும் வெற்றி என்பது உங்கள் பக்கம்தான்.
5.சமநிலையுடன் இருக்க வேண்டும்:
தலைமை ஏற்கும் பெண்கள் பல விஷயங்களை ஒரே நேரத்தில் கையாள வேண்டும் என்பது கடினமான காரியம்தான். ஆனால் இப்போதும் உடல் நலனையும் மனநலனையும், கருத்தில் கொண்டு உங்கள் வேலைகளை செய்வது அவசியம். வேலை அல்லது தொழிலைத் தவிர உங்களுக்கு பிடித்த விஷயங்களை வாழ்வில் இணைத்து அதை தினமும் செய்ய வேண்டும். இது உங்களை நீங்கள் ரீசார்ஜ் செய்து கொள்ள உதவும். இதனால் மனதும் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். அப்போதுதான் நீங்கள் தலைமையிடத்திற்கு செல்வதற்கு உங்கள் மனதும் தயாராகும்.
மேலும் படிக்க | மோசமான தலைமை பண்பை கொண்டிருப்பதற்கான அறிகுறிகள் இதுதான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ