Weight Loss Tips: இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை காரணமாக மக்கள் பல வித பிரச்ச்சனைகளுக்கு ஆளாகிறார்கள். உடல்நலம் சார்ந்த பல பிரச்சனைகளை அவர்கள் எதிர்கொள்கிறார்கள். இவற்றில் உடல் பருமனும் முக்கியமான ஒன்று. சீரற்ற உணவுமுறையால், உடல் எடை வேகமாக அதிகரித்து விடுகின்றது. ஆனால் அதை குறைப்பது மிக கடினமான ஒரு பணியாக உள்ளது.
குறிப்பாக தொப்பை கொழுப்பு அதிகரித்து விட்டால், அதை குறைக்க பல முயற்சிகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. எடை அதிகரிப்பின் முதல் அறிகுறிகள் தொப்பை கொழுப்பில் தெரியும். தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க மக்கள் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். ஆனால், சில எளிய, இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம் என்பதை பலர் மறந்து விடுகிறார்கள். உடல் எடையை குறைக்க உதவும் அப்படி ஒரு எளிய வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
உடல் பருமனால் அவதியில் உள்ளவர்கள், வீட்டின் சமையலறையில் பயன்படுத்தப்படும் மசாலாக்கள் கொண்டு தயாரிக்கபடும் சில மூலிகை நீர் உட்கொண்டு தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கலாம். இந்த மூலிகை நீர் மூலம் வெறும் 7 நாட்களில் நல்ல வித்தியாசம் தெரியும். உங்கள் வழக்கமான டயட்டில் இந்த மசாலா தண்ணீரைச் சேர்த்து குடிக்கலாம்.
Herbal Water For Weight Loss: எடை இழக்க உதவும் மசாலா நீர்
வெந்தய நீர் (Fenugreek Water)
வெந்தய விதைகளின் தண்ணீரை உடலில் உள்ள நச்சுகளை நீக்கும் ஒரு பானமாக குடிக்கலாம். ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தைச் சேர்த்து இரவு முழுதும் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு காலையில் இந்த நீரை சூடாக்கி குடிக்க வேண்டும். நீங்கள் விரும்பினால், ஊற வைக்கப்பட்ட வெந்தய விதைகளையும் சாப்பிடலாம். இந்த பானம் தொப்பை கொழுப்பைக் குறைப்பது மட்டுமல்லாமல், செரிமான அமைப்பையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
சீரக நீர் (Cumin Seeds Water)
எடை இழப்புக்கு சீரக நீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த நீரைக் குடிப்பதால் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கிறது. இது செரிமானத்தை மேம்படுத்துவதோடு தொப்பை கொழுப்பையும் குறைக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் சீரக தண்ணீரைக் குடிக்கவும். சீரக நீர் தயாரிக்க, ஒரு டீஸ்பூன் சீரகத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலையில் இந்த தண்ணீரைக் குடிக்கலாம். இரவில் தூங்குவதற்கு முன்னும் சீரக நீரை குடிக்கலாம்.
தனியா தண்ணீர் (Coriander Water)
தனியா, அதாவது மல்லி விதைகள் உணவில் பல வழிகளில் சேர்க்கப்படுகின்றன. பெரும்பாலான மக்கள் இதை ஒரு மசாலாப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள், இது உணவின் சுவையை அதிகரிக்க உதவுகிறது. கொத்தமல்லி தண்ணீர் குடிப்பதும் தொப்பை கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இந்த அறிகுறிகள் இருந்தால் வைட்டமின் டி குறைபாடு உள்ளது.. உஷார் - இதை சாப்பிடுங்கள்
மேலும் படிக்க | அடிவயிறு தொப்பை அடியோடு கரைய... இந்த 3 வித்தியாசமான உணவுகள் உதவும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ