திரை பிரபலங்கள் தொடங்கி பலரும் சுற்றுலா செல்ல விரும்பும் இடமாக மாலத்தீவு இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக காதலர் தினத்தில் உங்கள் துணையுடன் நேரத்தை சிறப்பான முறையில் செலவழித்திட மாலத்தீவு சிறந்த இடமாக இருக்கும். கடல்வாழ் உயிரினங்கள், தனிமை சூழ்ந்த வெள்ளை மணல் கடற்கரைகள், வித்தியாசமான தாவரங்கள், பலவகையான விலங்குகள் சூழ்ந்த இந்தியப் பெருங்கடலின் தீவு நாடு குளிர்கால விடுமுறைக்கு மிகவும் பிரபலமானது. மாலத்தீவில் சுமார் 1,200 அற்புதமான பவளத் தீவுகள் மற்றும் இங்கு ஆடம்பரமான தங்கும் விடுதிகள் என அற்புதமான பல விஷயங்கள் உள்ளது.
சுற்றுலா விசா:
இந்தியாவில் இருந்து மாலத்தீவுக்கு செல்பவர்களுக்கு விமான நிலையத்தில் இலவச விசா கிடைக்கும், மாலத்தீவிற்கு 30 நாட்கள் வரையிலும் நீட்டிக்கக்கூடிய ஆன்-அரைவல் பயண விசா 90 நாட்கள் வரை கிடைக்கும். மாலத்தீவுக்கு வந்தவுடன் குடியேற்றத்தில் தேர்ச்சி பெற அந்த நபர் அத்தியாவசியப் பதிவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். குறைந்தபட்சம் மூன்று வெற்றுப் பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட், 35 மி.மீ அகலமும் 44 மி.மீ நீளமும் கொண்ட இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், தங்குமிடத்தின் முன்பதிவுக்கான ஆதாரம், இணைப்பு விமானம், மாலத்தீவில் தங்குவதற்கு போதுமான பணம் மற்றும் பயணியின்உடல்நலம் குறித்த சான்றிதழ் போன்ற முக்கியமான ஆவணங்கள் தேவைப்படும்.
மேலும் படிக்க: அச்சத்தில் Google! வருகிறது சர்வ வல்லமை பொருந்திய ChatGPT!
பணிக்கான விசா:
மாலத்தீவுக்கு வரும் பார்வையாளர்களுக்கு அவர்கள் வந்த 15 நாட்களுக்குள் பணி விசா வழங்கப்படும். வெளிநாட்டு சிட்டிசன் இந்த விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கு, வழங்கப்பட்ட நாளிலிருந்து குறைந்தது 90 நாட்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய மாலத்தீவுகளின் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகத்தின் பணி அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். மேலும் அவர்கள் பணி அனுமதிக்கு விண்ணப்பிக்க பயன்படுத்திய அதே பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்க வேண்டும், இந்த விசாவை பெற நீங்கள் சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
1) தொழிலாளிக்கான பாஸ்போர்ட்
2) வேலை அனுமதியின் நகல்
3) சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
4) மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட சான்று
5) மருத்துவ சுகாதார சோதனை அறிக்கை
6) பணி விசாவிற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான ரசீது (IM29)
மாணவருக்கான விசா:
மாலத்தீவில் தனது கல்வியை தொடர ஒரு வெளிநாட்டவர் மாணவர் விசாவின் உதவியுடன் தற்காலிகமாக அங்கு குடியேறலாம். மாலத்தீவில் உயர்கல்வியை தொடர் உலகம் முழுவதிலும் உள்ள பல இளங்கலை பட்டதாரிகள் விருப்பம் தெரிவிக்கின்றனர். மாணவர் விசாவானது அவர்களது கல்விக்கு உதவுவதோடு, அவர்களை சார்ந்தவர்களுக்கும் அங்கேயே இருந்து குறிப்பிட்ட காலம் வரை பணிபுரியக்கூடிய வசதியையும் வழங்குகிறது.
பிசினஸ் விசா:
பிசினஸ் விசா என்பது வெளிநாட்டு குடிமக்கள் வணிகம் அல்லது வேலைவாய்ப்பை நடத்துவதற்கான ஒரே நோக்கத்திற்காக மாலத்தீவுக்குள் நுழைய அனுமதிக்கும் ஆவணமாகும். இந்த குறுகிய கால அளவு கொண்ட விசாவுடன் மாலத்தீவிற்கு வரக்கூடிய வெளிநாட்டவர்களுக்கு அங்கு பணிபுரிய அனுமதி வழங்கப்படுவதில்லை. பிசினஸ் விசா பெற நீங்கள் என்னென்ன ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்பது பற்றி இங்கே காண்போம்.
1) படிவம் IM24 தான் பிசினஸ் விசாக்களுக்கு விண்ணப்பிக்க பயன்படுத்தப்படுகிறது.
2) PDF வடிவத்தில், விண்ணப்பதாரரின் மெஷின்-ரீடபிள் பாஸ்போர்ட் புகைப்படத்துடன் கூடிய பயோ-டேட்டா.
3) PDF வடிவத்தில் விண்ணப்பதாரருக்கான பதிவுச் சான்று.
4) JPEG வடிவத்தில் பாஸ்போர்ட் அளவு படம்.
5) PDF வடிவத்தில் அனுபவக் கடிதங்கள் அல்லது கல்விச் சான்றிதழ்கள் போன்ற ஆவணங்கள்.
6) PDF வடிவில் வெளிநாட்டவர் மருத்துவக் காப்பீட்டுக் கொள்கை அட்டவணை.
7) PDF வடிவத்தில் பார்வையாளர் தங்கியிருப்பதை உறுதிப்படுத்தும் ஹோஸ்ட் அமைப்பின் கடிதம்
8) PDF வடிவத்தில் விசா விண்ணப்பதாரர் தகவல் படிவம் (IM30).
மேலும் படிக்க | Budget 2023: பட்ஜெட்டில் நுகர்வு செலவினங்களுக்கான வரி தள்ளுபடி பலன்கள் எவ்வளவு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ