இந்தோனேஷியா முதல் ஹங்கேரி வரை... ரூபாயின் மதிப்பு அதிகம் உள்ள சில நாடுகள்

இந்திய ரூபாயின் மதிப்பு அதிகமாக இருக்கும் சில நாடுகளுக்கு செல்வது நமது பணத்தை பெருமளவு சேமிப்பதுடன், அழகிய நாடுகளுக்கு குறைந்த செலவில் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 15, 2025, 06:17 PM IST
  • இந்தோனேசியா இந்திய சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான இடமாகும்.
  • இந்திய ரூபாயின் மதிப்பு அதிகமாக இருக்கும் சில நாடுகள்.
  • அழகிய நாடுகளுக்கு குறைந்த செலவில் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
இந்தோனேஷியா முதல் ஹங்கேரி வரை... ரூபாயின் மதிப்பு அதிகம் உள்ள சில நாடுகள் title=

வெளிநாட்டிற்கு பயணம் செய்ய வேண்டும் என்று எல்லோருக்கும் கனவு இருக்கும். ஆனால் பல நேரங்களில் குறைந்த பட்ஜெட் காரணமாக வெளிநாட்டு பயணத்தை பலர் தள்ளிப்போடுகிறார்கள். டிக்கெட் முன்பதிவு முதல் ஹோட்டல் செலவு, அந்நியச் செலாவணி என அனைத்திற்கும் அதிக செலவாகும் என்பதால், ஒரு தயக்கம் இருக்கும். ஆனால், இந்திய ரூபாயின் மதிப்பு அதிகமாக இருக்கும் சில நாடுகளுக்கு செல்வது நமது பணத்தை பெருமளவு சேமிப்பதுடன், அழகிய நாடுகளுக்கு குறைந்த செலவில் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

இந்திய ரூபாயின் மதிப்பு அதிகமாக இருக்கும் சில நாடுகள்

 நீங்கள் வெளிநாடு செல்ல விரும்பினாலும் பட்ஜெட் காரணமாக அதைத் தள்ளிப் போடுகிறீர்கள் என்றால், இந்த செய்தி உங்களுக்கு உதவியாக இருக்கும். இந்திய ரூபாயின் மதிப்பு வலுவாக இருக்கும் நாடுகள் மூலம், உங்கள் செலவு மிகவும் குறைவாக இருக்கும் என்பதால், குறிப்பிட்ட சில நாடுகள் சிறந்த தேர்வாக இருக்கும்.  வெறும் ₹100 செலவில் ஒருவர் ஒரு நாளை அனுபவிக்க முடியும். அப்படிப்பட்ட சில சிறப்பு நாடுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

இந்தோனேசியா

இந்தோனேசியா இந்திய சுற்றுலா பயணிகளிடையே மிகவும் பிரபலமான இடமாகும். அங்கு அழகான கோயில்கள், கடற்கரைகள் மற்றும் அற்புதமான வனவிலங்குகளைக் காணலாம். இங்கு 1 இந்திய ரூபாயின் மதிப்பு 191.433 இந்தோனேசிய ரூபாய்க்கு (IDR) சமம். இங்கு 100 இந்திய ரூபாய் 19 ஆயிரத்திற்கு மேல் ஆகிவிடும். இதுமட்டுமின்றி, இந்தியர்களுக்கு வருகை மூலம் கிடைக்கும் விசா வசதியைப் பெறுகின்றனர்.

வியட்நாம்

நீங்கள் அழகான இயற்கை காட்சிகள், அற்புதமான சாகசங்கள் மற்றும் சுவையான உணவுகளை விரும்பினால், வியட்நாம் உங்களுக்கான சரியான இடமாகும். மலையேற்றம் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்ற பல செயல்பாடுகளை இங்கு நீங்கள் அனுபவிக்க முடியும். 1 இந்திய ரூபாயின் மதிப்பு 295.6944 வியட்நாமிய டாங்கிற்கு சமம்.

கம்போடியா

கம்போடியா அதன் வரலாற்று மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கு பிரபலமானது. இங்குள்ள அங்கோர் வாட் கோயில் உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இங்கு 1 இந்திய ரூபாயின் மதிப்பு 49.798883 கம்போடிய ரியலுக்கு சமம். இங்கே நீங்கள் அரண்மனை, தேசிய அருங்காட்சியகம் மற்றும் பல தொல்பொருள் இடிபாடுகளை பார்வையிடலாம்.

பராகுவே

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள பராகுவே, இந்திய நாணயத்தின் அடிப்படையில் மலிவான மற்றும் அழகான நாடு. இங்குள்ள இகுவாசு நீர்வீழ்ச்சி மற்றும் உலகின் மிகப்பெரிய நீர்மின் அணை ஆகியவை பார்க்கத் தகுந்தவை. இங்கு 1 இந்திய ரூபாயின் மதிப்பு 89.315412 பராகுவே குரானிக்கு சமம்.

மேலும் படிக்க | Jio உடன் இணைந்த Disney + Hotstar... குறைந்த கட்டணத்தில் JioHotstar OTT தளம் அறிமுகம்

ஹங்கேரி

உங்களுக்கு ஐரோப்பாவிற்குச் செல்ல வேண்டும் என்று கனவு கண்டால், ஹங்கேரி ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். பிரமாண்டமான கட்டிடங்கள், ரோமன் மற்றும் துருக்கிய கட்டிடக்கலை, தெர்மல் ஸ்பாக்கள் மற்றும் உலக பாரம்பரிய தளங்களுக்கு இந்த நாடு அறியப்படுகிறது. இங்கு 1 இந்திய ரூபாயின் மதிப்பு 4.391055 ஹங்கேரிய ஃபோரிண்டிற்கு சமம்.

மேலும் படிக்க | இனி ஸ்பேம் கால்கள் தொல்லை இருக்காது... விதிகளை கடுமையாக்கிய TRAI

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News