Virat Kohli Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் விராட் கோலி 5 மகத்தான சாதனைகளை தகர்க்க முடியும்.
சமீபத்திய போட்டிகளில் மோசமான பார்மில் இருந்து வரும் விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அரை சதம் அடித்து மீண்டும் பார்மிற்கு வந்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபியில் ரன்கள் அடித்தால் பல சாதனைகளை அவர் சமன் செய்ய முடியும்.
ஒருநாள் போட்டிகளில் 14,000 ரன்கள் இந்திய அணிக்காக 297 ஒருநாள் போட்டிகளில் 13,963 ரன்கள் குவித்துள்ளார் விராட் கோலி. சாம்பியன்ஸ் டிராபியில் 37 ரன்கள் எடுத்தால், ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 14,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற பெருமையை பெறுவார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 3வது அதிக ரன் எடுத்தவர் விராட் கோலி இந்தியாவிற்காக 545 போட்டிகளில் விளையாடி 27,381 ரன்கள் எடுத்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபியில் 103 ரன்கள் எடுத்தால் மூன்றாவது முன்னணி ரன் எடுத்தவர் என்ற சாதனையை படைக்கலாம்.
சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்கள் சாம்பியன்ஸ் டிராபியில் இதுவரை 13 போட்டிகளில் 529 ரன்கள் எடுத்துள்ளார் விராட் கோலி. இந்த தொடரில் 263 ரன்கள் அடித்தால், கிறிஸ் கெய்லின் 791 ரன்களின் சாதனையை முறியடிக்க முடியும்.
சாம்பியன்ஸ் டிராபியில் அதிக அரை சதம் இதுவரை 13 சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 5 அரைசதங்கள் அடித்துள்ளார். இந்த தொடரில் 2 அரைசதங்களை அடித்தால் ராகுல் டிராவிட்டின் சாதனையை (6) முறியடிப்பார்.
அதிக ஐசிசி கோப்பைகளை பெற்ற வீரர் 2025 சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வென்றால், அதிக வெற்றிகரமான ஐசிசி கோப்பைகளை வென்ற வீரராக விராட் கோலி ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடிப்பார். விராட் இதுவரை ஒருநாள் உலகக் கோப்பை (2011), சாம்பியன்ஸ் டிராபி (2013), டி20 உலகக் கோப்பை (2024) மற்றும் U19 உலகக் கோப்பை (2008) வென்ற அணியில் இருந்துள்ளார்.