Bank Locker Key: வீட்டில் விலை மதிப்பு மிக்க பொருள்கள் இருந்தால் வங்கிகளில் உள்ள லாக்கரில் வைப்பதில்தான் அனைவருக்கும் பழக்கம் எனலாம். அதாவது வீட்டில் அந்த பொருள்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்பதால் வங்கி லாக்கர்களில் மக்கள் வைக்கின்றனர். குறிப்பாக, பூர்வீகமாக இருக்கும் தங்க நகைகள், மதிப்புமிக்க பத்திரங்கள், வைரங்கள், தங்க நகைகள் ஆகியவற்றை மக்கள் லாக்கரில் வைப்பார்கள்.
ஒருவேளை நீங்கள் வைத்த பொருள்களுக்கு ஏதும் சேதாரம் ஏற்பட்டாலோ, லாக்கரில் திருட்டு நடந்தாலோ வங்கிகள் உங்களுக்கு தக்க இழப்பீடு வழங்கப்படும். இதனால்தான் பலரும் கவலையில்லாமல் மதிப்புமிக்க பொருள்களை லாக்கரில் வைக்கிறார்கள். இந்த லாக்கரின் சாவி உங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும். எனவே, உங்களுக்கு தேவையான போது அதில் உள்ள பொருள்களை வங்கியிடம் தெரிவித்துக்கொண்டு எடுத்துக்கொள்ளலாம்.
லாக்கருக்கு கட்டணம்
வங்கி லாக்கர் வாடகைக்கு எடுக்க வங்கிகள் உங்களிடம் கட்டணம் வசூலிக்கும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். லாக்கரின் அளவு, வங்கி அமைந்துள்ள பகுதி ஆகியவற்றின் அடிப்படையில் கட்டணம் மாறுபடும். உதாரணத்திற்கு பஞ்சாப் நேஷனல் வங்கி வருடாந்திர அளவில் கட்டணங்களை இங்கு பார்க்கலாம்.
மேலும் படிக்க | வலது கையில் ஏன் நகம் வளர்க்க கூடாது? ‘இந்த’ 7 பிரச்சனைகள் வரும்..
கிராமப்புற பகுதிகளில் Medium Size லாக்கருக்கு 2200 ரூபாயும், Larger Size லாக்கருக்கு 3000 ரூபாயும், Very Large லாக்கருக்கு 6000 ரூபாயும், Extra Large லாக்கருக்கு 10 ஆயிரம் ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. அதே நகர்புர பகுதிகளில் Medium Size லாக்கருக்கு 3500 ரூபாய்ம், Larger Size லாக்கருக்கு 5500 ரூபாய்க்கும், Very Large லாக்கருக்கு 8000 ரூபாய் வரைக்கும், Extra Large லாக்கருக்கு 10 ஆயிரம் ரூபாயும் சுழிக்கப்படுகிறது.
சாவி தொலைந்தால் என்ன செய்ய வேண்டும்?
ஒருவேளை உங்கள் வங்கி லாக்கரின் சாவியே தொலைந்துவிட்டால் என்ன ஆகும் என்பது உங்களுக்கு தெரியுமா?.... அதுகுறித்துதான் இங்கு தெரிந்துகொள்ளப்போகிறோம். லாக்கரின் சாவி தொலைந்தால் முதலில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
முதலில் உங்கள் வங்கி லாக்கரின் சாவி தொலைந்துவிட்டால் சம்பந்தப்பட்ட வங்கிக்கு நேரில் சென்றோ அல்லது தொலைப்பேசி மூலமோ தகவல் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் லாக்கர் சாவி தவறாக பயன்படுத்தப்படாமல் தடுக்க முடியும்.
காவல்நிலையத்தில் புகார்
வங்கி லாக்கர் சாவியை தொலைத்த உடன் பதற்றம் அடையாமல் முதலில் வங்கிக்கு செல்லுங்கள். போனில் தகவல் சொன்னாலும் வங்கிக்கு நேரில் வந்து எழுத்துப்பூர்வமாக தகவல் தெரிவித்து புகார் அளிக்க வேண்டும். மேலும், அந்த புகாரில் லாக்கரின் நம்பர், கிளை பெயர் மற்றும் தேவைப்படும் தகவல்களை முறையாக எழுத வைக்க வேண்டும். மேலும், வங்கி லாக்கர் சாவி தொலைந்துவிட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். அதன்பின் அந்த புகார் நகலை வங்கியில் ஒப்படைக்க வேண்டும்.
செலவு யார் செய்ய வேண்டும்?
இந்த செயல்பாடுகள் முடிந்த உடன் லாக்கர் பூட்டை திறக்கும் வல்லுநர்களை வங்கி வரவழைக்கும். அதன்பின் லாக்கர் பூட்டு உடைக்கப்பட்டு, அதற்கு புதிய பூட்டு வைக்கப்படும். இந்த செயல்முறைகள் நடக்கும்போது லாக்கர் உரிமையாளர் அருகில் இருக்க வேண்டும். அப்போதுதான் வெளிப்படைத்தன்மை இருக்கும்.
முக்கியமான ஒன்று லாக்கர் பூட்டு உடைக்கப்பட்டு, புதிய சாவி போடும் செலவு அனைத்தும் வாடிக்கையாளர்களிடமே வசூலிக்கப்படும். இதற்கு வங்கிகள் பொறுப்பேற்காது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | ஈகோ பிடித்தவர்களை சமாளிக்க 7 ஈசியான வழிகள்! இனி வாலாட்டவே மாட்டார்கள்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ