Actress Zeenat Aman Diet Tips To Stay Healthy : கேமரா முன்பு இருப்பவர்கள் அனைவருமே, தங்கள் உடலை சரியாக பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக நடிகைகள் தங்களது சருமத்தையும் முகத்தையும் ஒழுங்காக பார்த்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அப்படி ஒரு நடிகை தான் பெரும்பாலும் படங்களில் நடிப்பதில்லை என்றாலும் தனது உடலை இளமையாக வைத்துக்கொள்ள தினந்தோறும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த நடிகை குறித்த தகவல்களையும் அவர் பின்பற்றும் டயட் குறித்தும் இங்கு பார்ப்போம்.
யார் அந்த நடிகை?
அந்த நடிகையின் பெயர் ஜீனத் அமான். 1970கள் மற்றும் 80களில் இந்திய அளவில் டாப் நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர் இவர். இந்த 73 வயதிலும் அனைவரும் உடலை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதிலும், உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதிலும் இவர் உறுதியுடன் இருக்கிறார். இதற்காக அவர் பின்பற்றும் விஷயங்கள் குறித்து, இங்கு பார்ப்போம்.
இன்ஸ்டா பதிவு:
ஜீனத், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 73 வயதிலும் தன்னை இளமையாக வைத்திருக்கும் விஷயம் குறித்து கூறியிருக்கிறார். அதில், தான் தினம் தோறும் பின்பற்றும் ஒரே மந்திரம் புரதம் நிறைந்த உணவுதான் என்றும், அதுதான் தனது உடல் மற்றும் மனதை தெளிவாக வைத்துக்கொள்ள உதவுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
காலையில் சாப்பிடுவது:
ஜீனத்தை பொறுத்தவை நாம் சாப்பிடும் உணவுதான், நமது உடலுக்கான பெட்ரோல் போன்றது என கருதுகிறார். அவரது தாய் எப்போதும் அவரிடம் ஹெல்தியாஅக சாப்பிடு, ஃபிட்டாக இரு, குறைவாக சாப்பிடு, இயற்கை உணவுகளை சாப்பிடு என கூறுவாராம். இதையே இப்போது வரை தன் வாழ்நாள் முழுவதும் அவர் பின்பற்றி வருகிறார்.
தினமும் தனது காலையை பிளாக் டீயுடன் ஆரம்பிக்கும் இவர், அதனுடன் ஊரவைத்த-தோலுரித்த பாதாமையும் சாப்பிடுவாராம். இது, அவரது மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவுமாம். கடந்த சில ஆண்டுகளாக அவர் ஸ்மாஷ் செய்த அவகேடோ டோஸ்டையும் சாப்பிடுகிறார். அதனுடன் செடார் சீஸையும் சேர்த்துக்கொள்கிறார். ஏதாவது இந்திய உணவாக சாப்பிட வேண்டும் என தோன்றினால் அவர் போஹாவை (உப்புமா போன்றது) சாப்பிடுவாராம்.
மதிய உணவு:
ஜீனத், மதிய உணவை மன நிறைவுடன் சாப்பிட விரும்புவாராம். ஆனால், அந்த உணவு மிகவும் சிம்பிளாக இருக்குமாறு பார்த்துக்கொள்வாராம். தால், காய்கறி சப்ஜி, ரொட்டி ஆகியவை அதில் அடங்கும். ஒரு சில சமயங்களில் உருளைக்கிழங்கு, பனீர் டிக்கா மற்றும் பச்சை பட்டானி கிரேவி ஆகியவற்றையும் எடுத்துகொள்கிறார். வீட்டில் அரைத்த தக்காளி சட்னியும் இவரது ஃபேவரட் ஆம்.
வறுத்த உணவு:
டயட் இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி பலர் மாலை வேளைகளில் ஸ்னாக்ஸ் சாப்பிட விரும்புவர். அப்படி, ஒரு ஹெல்தி ஸ்னாக்ஸ் விரும்பியாக இருக்கிறார் ஜீனத். சர்க்கரை அல்லது இனிப்பான உணவுகள் அனைத்தையும் சாப்பிட தவிர்க்க அவர், பெரும்பாலும் உப்பு போட்டு வறுத்த மக்கானாவை எடுத்துக்கொள்வாராம். அதில் சிறிது காரமும் சேர்த்துக்கொள்வாராம். டயட்டில் இல்லையென்றாலும், சரியான உணவுகளை சாப்பிட்டால் 73 வயதிலும் உடலை நன்றாக பார்த்துக்கொள்ளலாம் என்பதற்கு ஜீனத் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. நீங்களும் ஜீனத் பாேல இந்த வயதிலும் ஹெல்தியாக இருக்க இதனை பின்பற்றுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இளமையாக இருக்க விரும்புபவர்கள் நிபுணர்களை சந்தித்து உரிய ஆலோசனை பெற வேண்டும். மேலே கூறப்பட்ட அனைத்தும் நடிகை ஜீனத்தின் கருத்தாகும், இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது)
மேலும் படிக்க | 2 வருடத்தில் 30 கிலோ குறைத்த நடிகை சோனாக்ஷி! வெறும் வயிற்றில் ‘இதை’ செய்வாராம்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ