ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக பீட்டர் முகர்ஜிக்கு 5 நாள் சிபிஐ காவல் விதிக்கப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அந்நிய முதலீடுக்கான அனுமதியை முறைகேடாக பெற்றுத்தர உதவியதாக கூறி முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு நடைபெற்று வந்த நிலையில், கடந்த பிப்., 28-ம் தேதி காலை சென்னை விமான நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
பின்னர் டெல்லி அழைத்து செல்லப்பட்ட கார்த்தி சிதம்பரத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார். கிட்டத்தட்ட 15 நாட்கள் அவரிடம் விசாரணை நடத்தியது சிபிஐ. நேற்று டெல்லியில் உள்ள பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், வரும் 24-ம் தேதி வரை டெல்லி திகார் சிறையில் கார்த்தி சிதம்பரத்தை அடைக்க உத்தரவிட்டது.
முன்னதாக, விசாரணையில் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறையின் வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கவும். பிணைத்தொகையாக ரூ.15 லட்சம் செலுத்தவும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
Peter Mukerjea brought to Delhi's Patiala House Court in connection with #INXMediaCase pic.twitter.com/7HWngUICCw
— ANI (@ANI) March 26, 2018
இந்நிலையில், ஷீனா போரா கொலை வழக்கில் ஏற்கனவே, தண்டனை பெற்று பைகுலா சிறையில் இருக்கும் இந்திராணி மற்றும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜியை 5 நாள் காவலில் எடுத்து சிபிஐ விசாரிக்கவுள்ளது.