சபரிமலை விவகாரத்தில் காங்., இரட்டை நிலையை கடைபிடிக்கிறது: மோடி

சபரிமலை விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை நிலையை கடைபிடிக்கிறது; சபரிமலை விவகாரத்தில் கேரள இடதுசாரி அரசின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளது என பிரதமர் மோடி குற்றசாட்டு.....

Last Updated : Jan 15, 2019, 06:59 PM IST
சபரிமலை விவகாரத்தில் காங்., இரட்டை நிலையை கடைபிடிக்கிறது: மோடி title=

சபரிமலை விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை நிலையை கடைபிடிக்கிறது; சபரிமலை விவகாரத்தில் கேரள இடதுசாரி அரசின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளது என பிரதமர் மோடி குற்றசாட்டு.....

நாட்டின் கலாச்சாரத்தை காக்கும் அக்கறை கூட இல்லாமல் காங்கிரஸ் நாட்டை ஆண்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆனால் பாரதிய ஜனதா ஆட்சியில் நாட்டின் பாரம்பரியம் காக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். 

ஒடிசா மாநிலத்தின் பாலாங்கிர் நகரில் நடைபெற்ற விழாவில் ஜார்சுகுடா-விஜியநகரம் மற்றும் சம்பல்பூர்-அங்குல் பாதையில் 1085 கோடி ரூபாய் செலவில் 813 கிலோமீட்டர் தூரத்துக்கு மின்சாரமயமாக்கப்பட்ட ரெயில்வே வழித்தட தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, அந்த திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

15 கிலோமீட்டர் நீளத்தில் 115 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பாலாங்கிர்-பிச்சுப்பலி ரெயில் பாதையையும் அவர் திறந்து வைத்தார். இந்த வழித்தடத்தில் செல்லும் புதிய ரெயில் சேவையயும் கொடியசைத்து மோடி தொடங்கி வைத்தார்.

ஒடிசா மாநிலத்தின் சித்தேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சில கோவில்கள் மற்றும் நினைவகங்களை புதுப்பித்து புனரமைக்கும் பணிகளையும் தொடங்கி வைத்த மோடி, அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையில், நாட்டின் கலாச்சாரத்தை காப்பதில் மத்திய அரசு அக்கறை காட்டுகிறது என்றார். முந்தைய காங்கிரஸ் அரசு, நாட்டின் கலாச்சாரத்தை கூட காக்கவில்லை என்ற அவர், சர்வதேச யோகா தினம் கொண்டாடுவதை கூட காங்கிரஸ் கிண்டலடிக்கிறது என்றார். 

நாட்டின் பழமையை காப்பதிலும், புதுமையை கொண்டு வருவதிலும் மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளதாக மோடி கூறினார். முந்தைய காங்கிரஸ் அரசு, மக்களாட்சியை மன்னராட்சி போல நடத்தியது என்ற அவர், நாட்டின் கலையை, பாரம்பரியத்தை காக்கவும் காங்கிரஸ் தவறியது என்றார். பா.ஜ.க. அரசு தான், வெளிநாடுகளில் இருந்த இந்திய சாமி சிலைகளை மீட்டு கொண்டு வந்ததாக மோடி தெரிவித்தார்.

இதே போன்று கேரளாவின் கொல்லத்தில் 352 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட 13 கி.மீ. தூர புறவழிச்சாலையையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். கொல்லத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய பிரதமர் மோடி, அரசின் திட்டங்களுக்காக ஒதுக்குப்படும் வரிப்பணம் வீணாவதை மத்திய அரசு அனுமதிக்காது என்றார். திட்டங்கள் நீண்ட காலம் நடைபெறுவதை தடுக்கவும், வரிப்பணம் வீணாகாமல் இருக்கவும் உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

முன்னதாக ஒடிசாவில் பேசிய அவர், இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரின் இடஒதுக்கீடு தொடர்பான அரசமைப்பு சட்ட உரிமைகளுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி, பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு எட்டப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி கூறியது குறிப்பிடத்தக்கது! 

 

Trending News