Bad Habits Will Never Let You To Be Rich : பணத்தால் மகிழ்ச்சியை விலைக்கு வாங்க முடியாது என பிறர் கூறக்கேட்டிருப்போம். ஆனால், உண்மையில் பணம் கையில் இருந்தால்தான் மன உளைச்சல் இல்லாமல் இருக்க முடியும். ஆனால், நம்மில் பல பேரின் கையில் பணம் தங்குவதே இல்லை. இது குறித்து இங்கு பார்ப்போம்.
Bad Habits Will Never Let You To Be Rich : நம்மை சுற்றி இருப்பவர்கள், ஏன் நாமே கூட பல சமயங்களில் சம்பளம் வந்த 2 நாட்களில் பர்ஸை காலி செய்து விட்டு, அடுத்து என்ன செய்வதென்று யோசித்துக்கொண்டிருப்போம். அடுத்த மாதம் வந்தால் திருந்தி விடலாம், என ஒவ்வொரு மாதமும் நமக்கு நாமே ஒரு கதை சொல்லிக்கொண்டிருப்போம். ஆனால் உண்மையில் பலர் அப்படி திருந்துவதில்லை. நம் கையில் பணம் தங்காமல் இருப்பதற்கான காரணங்கள் குறித்தும் அதனை எப்படி களைவது என்பது குறித்தும் இங்கு பார்ப்போம்.
நம்மில் பலர், ஒரு நாளை தொடங்கும் போது அந்த நாள் எப்படி செல்ல வேண்டுமென்று ஒரு திட்டமிடல் இல்லாமலேயே படுக்கையில் இருந்து எழுந்துக்கொள்வோம். ஆனால், இப்படி செய்வது நம் நாளையும் நம்மையும் மேன்மை படுத்தாது. எனவே, ஒவ்வொரு நாளையும் தொடங்குவதற்கு முன்னரும், அந்த நாள் எப்படி செல்ல வேண்டுமென திட்டமிட்டுக்கொள்வது நல்லது.
கையில் இருக்கும் பணத்தை வைத்து பார்க்கும் பொருளை எல்லாம் வாங்கும் பழக்கம், உங்களை நடு ரோட்டில் நிறுத்தி விடும். அது சிறிய செலவாக இருந்தாலும் பெறிய செலவாக இருந்தாலும், உங்களுக்கு அது உபயோகரமான செலவாக இருக்குமா இல்லையா என்பதை பார்த்துக்கொண்டு பின்னர் முடிவெடுப்பது நல்லது.
பல சமயங்களில் நாம் சில்லறையாக செலவாகுவதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், இதையும் பார்த்து செலவு செய்ய வேண்டியது அவசியம்.
நாம் யாருடன் இருக்கிறோம் என்பதும் நம் செலவு பழக்கங்களை நிர்ணயிக்கும். உங்களின் கனவுகளை, பட்ஜெட் வாழ்க்கை முறையை அவமதிக்கும் நபர்களுடன் எப்போதும் நட்புறவை வைத்துக்கொள்வாதீர்கள். அவர்கள் கெட்டுப்போவதோடு, உங்களையும் சேர்த்து கெடுப்பர்.
உங்களுக்கு இருக்கும் நிதி பொறுப்புகளை தள்ளிப்போடக்கூடாது. எதிலாவது முதலீடு செய்ய வேண்டுமென நினைக்கிறீர்கள், ஆனால் அதை தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கிறீர்கள் என்றால் அப்படி செய்யாம் உடனே அதற்கான முயற்சிகளை எடுங்கள்.
உங்களின் வளர்ச்சியை நீங்களே தடுக்க கூடாது. தினமும் ஒரே வேலையை செய்து கொண்டு, ஒரே வட்டத்திற்குள் ஓடிக்கொண்டிருந்தால் கண்டிப்பாக வளர முடியாது.
நாம் ஆபத்துகளை மட்டும் பெரிதாக பார்த்துவிட்டு, எந்த முயற்சியையும் எடுக்க தயங்குவதால் நமக்கு முன்னேற்றமே இருக்காது. நிதி நிலையும் இதனால் முன்னேற்றம் காணாமல் இருக்கும். எனவே, கணக்கு போட்டு, சில ஆபத்துகளை நீங்கள் சந்திக்க வேண்டியது கட்டாயம்.