ஆண்கள் அழுதால் தப்பா? அழுவதற்கு பயப்படுவது ஏன்? 7 காரணங்கள்!

Reasons Why Men Are Afraid To Cry : ஆண்கள் பலர் பிறர் முன்னிலையில் அழுவதற்கு மிகவும் தயங்குவர், அல்லது பயப்படுவர். இதற்கு காரணம் என்ன தெரியுமா?

Reasons Why Men Are Afraid To Cry :  “ஆம்பள புள்ளைங்க அழக்கூடாது டா..” என்ற டைலாக்கை, பெரும்பாலான ஆண்கள், அவர்களின் இல்லத்தில் அல்லது சினிமா படங்களில் கேட்டிருப்போம். ஆண்கள் பிறர் முன்னிலையில் அழுதால் அப்படி என்னதான் ஆகிவிடும்? என யாருமே யோசிப்பதில்லை. சமூக கட்டமைப்பை தாண்டி, ஆண்கள் பிறர் முன்னிலையில் அல்லது தனியாக இருக்கும் போது கூட அழுவதற்கு பயப்படுகின்றனர். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவை என்ன தெரியுமா?

1 /7

சிறு வயதில் இருந்தே ஆண் பிள்ளைகளை “ஆண்கள் அழக்கூடாது” எனக்கூறி வளர்ப்பர். இதனால், தான் அழுதாலே தவறோ என்ற எண்ணம், குழந்தை பருவத்தில் இருந்தே ஆண்களுக்கு வளர ஆரம்பித்து விடும். இதனால்தான், வரும் அழுகையையும் அவர்கள் சிறு வயதில் இருந்தே அடக்கிகொள்கின்றனர்.

2 /7

தன்னுடன் இருக்கும் நண்பர்கள், குடும்பம் உள்ளிட்ட பலர் தன்னை பற்றி தவறாக நினைத்து விடுவார்களோ என்ற பயத்தால் பலர் அழாமல் இருப்பர். இதனால், அவர்களுடனான உறவு பாழாகி விடுமோ என்ற பயத்தால் ஆண்கள் அழாமல் இருக்கின்றனர்.

3 /7

சமூகம், ஆண்கள் மீது ஒரு சில அழுத்தங்களை வைக்கின்றது. வலுவான ஆண் என்றால் அவன் உணர்ச்சிகளை அடக்கியவனாக, பலமுள்ளவனாக இருக்க வேண்டும் என்ற தவறான எதிர்பார்ப்புகளை அனைத்து ஆண்களிடமும் வைக்கிறது. இதனால், “நான் அழுதால் என்னை பலவீனமானவன் என நினைப்பார்களோ?” என்று பயந்து ஆண்கள் அழுவதே இல்லை. 

4 /7

ஆண்கள் பலருக்கு உணர்ச்சிகள் குறித்த அறிவே இல்லை. யாரேனும் ஒருவர், உணர்ச்சிகள் குறித்து பேசினாலும், “யார்ரா இவன் லூசு மாறி பேசுறான்?” என்று கூறி அவனை மட்டப்படுத்துவர். உண்மையில், பல சமயங்களில் இவர்களுக்கு தான் என்ன உணர்கிறோம் என்பதே தெரியாது. இதனால், அழ வேண்டிய சமயத்தில் கூட அதை வைத்து கேலி செய்து பிறரை சிரிக்க வைத்து கொண்டிருப்பர்.

5 /7

அழுவது என்பது, இந்த சமூகத்தை பொறுத்தவரை கட்டுப்படுத்த முடியாத செயலாக கருதப்படுகிறது. ஆண்கள், சவாலான தருணங்களில் கூட கட்டுப்பாடோடு இருக்க வேண்டும் என இந்த சமூகம் கருதுகிறது. இந்த சமயத்தில் ஒருவர் பலர் முன்னிலையில் அழுகிறார் என்றால், அதனை ஏளனமாக பேசுகிறது. இதனாலேயே பல ஆண்கள் அழுவதில்லை.

6 /7

அழுகை என்பது, உணர்ச்சி மிகையாகும் போது வரும் ஒரு விஷயம் ஆகும். மனது ஆழமாக ஏதேனும் ஒரு உணர்வால் பாதிக்கப்பட்டால் மட்டுமே அழுகை வரும். இப்படிப்பட்ட உணர்வை ஒருவர் முன்னிலையில் நாம் காண்பித்து விட்டால் அவர்கள் அதனை பயன்படுத்தி நமக்கு எதிராக செயல்படுவார்களோ என்ற பயத்தில் ஆண்கள் யார் எதிரிலும் அழுவதே இல்லை. 

7 /7

உலகில், புகழ் பெற்ற ஆண்களாக இருப்பவர்கள், ஹீரோக்களாகவும், கடினமான மனிதர்களாகவும், உணர்ச்சி அற்றவர்களாகவும் காண்பிக்கிறது. இதனை உதாரணமாக எடுத்துக்கொள்ளூம் ஆண்கள் பலர் அழுதால் நாம் ஹீரோ கிடையாது என்ற எண்ணத்தை ஏற்படுத்திக்கொண்டு அதனால் அழாமல் இருக்கின்றனர்.