ஏமாற்றி வெற்றி பெற வேண்டிய அவசியம் இல்லை.. சுனில் கவாஸ்கர் சாடல்.. தொடரும் கன்கஷன் சர்ச்சை!

ஏமாற்று வேலை செய்து இந்திய அணியின் வெற்றிக்கு களங்கம் ஏற்படுத்தாதீர்கள் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்து உள்ளார்.   

Written by - R Balaji | Last Updated : Feb 3, 2025, 04:44 PM IST
  • தொடரும் கன்கஷன் சர்ச்சை
  • ஏமாற்றி வெற்றி பெற வேண்டிய அவசியம் இல்லை
  • இந்திய அணியை சாடிய சுனில் கவாஸ்கர்
ஏமாற்றி வெற்றி பெற வேண்டிய அவசியம் இல்லை.. சுனில் கவாஸ்கர் சாடல்.. தொடரும் கன்கஷன் சர்ச்சை!  title=

இந்தியா - இங்கிலாந்து இடையே நடைபெற்ற டி20 தொடர் நேற்று முடிவடைந்தது. இதில் இந்திய அணி 4 - 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி உள்ளது. முன்னதாக இத்தொடரின் நான்காவது போட்டியில் ஒரு சர்ச்சை வெடித்தது. அந்த போட்டியில் சிவம் துபேவுக்கு தலையில் பந்து தாக்கியதால் போட்டியின் பாதியிலேயே வெளியேறினார். அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா விளையாடினார். இது தற்போது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. 

ஒரு வீரருக்கு தலையில் பந்து தாக்கி அவரால் விளையாட முடியவில்லை என்றால் அவருக்கு இணையான மாற்று வீரரை பாதி போட்டியில் இருந்து விளையாட வைக்கலாம். அதாவது இணையான மாற்று வீரர் என்றால், ஒரு பேட்ஸ்மேனுக்கு பதிலாக பேட்ஸ்மேன், பவுலருக்கு பதிலாக பவுலர், ஆல் ரவுண்டருக்கு பதிலாக ஆல் ரவுண்டர் இவ்வாறுதான் மாற்று வீரரை தேர்வு செய்ய வேண்டும். 

அப்படி மாற்று வீரராக வரும் வீரர் ஃபில்டிங் மட்டுமல்லாமல் அந்த பாதி விளையாட்டில் பவுலிங் அல்லது பேட்டிங் செய்யலாம். இந்த நிலையில், சிவம் துபேவுக்கு இணையான வீரர் ராணா இல்லை எனவும் இந்தியா ஏமாற்றி வெற்றி பெற்றது எனவும் விமர்சித்து வருகின்றனர். 

மேலும் படிங்க: JOHN CENA | கடைசி ராயல் ரம்பல் மேட்சில் ஜான் சீனா அதிர்ச்சி தோல்வி... WWE ரசிகர்கள் ஷாக்

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இந்திய அணியை தாக்கி பேசி இருக்கிறார். இந்திய அணி இது போன்ற ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவதால் அந்த வெற்றிக்கு தான் களங்கம் என கடுமையாக விமர்சித்து உள்ளார். 

இது ஏமாற்று வேலை

இது குறித்து அவர் பேசுகையில், அந்த போட்டியில் சிவம் துபே தலையில் பந்து தாக்கியதற்கு பிறகும் அவர் பேட்டிங் செய்தார். எனவே அவருக்கு மூளை அதிர்ச்சி ஏதும் ஏற்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. அப்படி இருக்கையில் அவருக்கு பதிலாக மாற்று வீரரை விளையாட வைத்தது சரியான விஷயம் இல்லை. 

ஒருவேளை பேட்டிங் செய்த போது அவருக்கு காயம் ஏற்பட்டு இருந்தால் மாற்று வீரரை ஆட வைக்கலாம். ஆனால் அந்த வீரர் ஃபீல்டிங் மட்டுமே செய்வார். புவுலிங் செய்ய முடியாது. இணையான மாற்று வீரரை தேர்வு செய்ய வேண்டும் என்று மட்டும் வைத்துக் கொண்டாலும் கூட சிவம் துபேவுக்கு ஹர்ஷித் ராணா இணையானவர் இல்லை. அவர்கள் இருவருக்கும் இணையான விஷயம் என சொல்வதற்கு ஒன்று கூட இல்லை கூட இல்லை. 

இந்திய அணி அற்புதமான் அணி. ஆனால் இது போன்ற மோசமான செயல்களை செய்து அதன் வெற்றிகளை களங்கம் அடைய வைக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறி உள்ளார்.  

மேலும் படிங்க: பும்ரா சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவாரா? அஜித் அகர்கர் சொல்வது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News