கட்டாய மதமாற்றத்தை தடுப்பது பற்றி மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கட்டாய மத மாற்றத்தை "மிகவும் தீவிரமான" பிரச்சினையாகக் கருதிய உச்ச நீதிமன்றம், திங்களன்று மத்திய அரசை தலையிட்டு, இந்த நடைமுறையை கட்டுப்படுத்த நேர்மையான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது. கட்டாய மத மாற்றங்களை நிறுத்தாவிட்டால் "மிகவும் கடினமான சூழ்நிலை" உருவாகும் என்றும் அது எச்சரித்துள்ளது.
நீதிபதிகள் எம் ஆர் ஷா மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய நீதிமன்ற பிரிவு, கட்டாய மத மாற்ற நடைமுறையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விவரிக்குமாறு, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவை கேட்டுக் கொண்டது. மேலும், “இது மிகவும் தீவிரமான விஷயம். கட்டாய மதமாற்றங்களைத் தடுக்க, மத்திய அரசு நேர்மையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் மிகவும் கடினமான சூழ்நிலையை எதிர் கொள்ள வேண்டி வரும். நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கிறீர்கள் என்று விவரிக்க வேண்டும், நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது” என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
"கட்டாய மத மாற்றம் என்பது தேசத்தின் பாதுகாப்பு மற்றும் மதம் மற்றும் மனசாட்சியின் சுதந்திரத்தைப் பாதிக்கும் ஒரு மிகத் தீவிரமான பிரச்சினை. எனவே, மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதுடன், இதுபோன்ற கட்டாய மத மாற்றத்தைத் தடுக்க, மேலும் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்பது குறித்து பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்வது நல்லது" என உச்ச நீதிமன்ற பிரிவு கூறியது.
"மிரட்டல்கள், அச்சுறுத்தல், பரிசுகள் மற்றும் பணப் பலன்கள் மூலம் ஏமாற்றுதல்" போன்ற மோசடியான வகைகளில், மேற்கொள்ளப்படும் மத மாற்றங்களைக் கட்டுப்படுத்த, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | கருக்கலைப்பு செய்ய அனைத்து பெண்களும் உரிமை உண்டு: உச்ச நீதிமன்றம்
மேலும் படிக்க | சிறை வாசம் முடிந்தது... 30 ஆண்டுகளுக்கு பிறகு நளினி உள்ளிட்ட 6 பேரும் விடுதலை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ