உடல் எடையை சட்டுன்னு குறைக்கும் மேஜிக்கல் பானங்கள்! சிம்பிள் வெயிட் லாஸ் டிப்ஸ்

Weight Loss Drinks: உடல் எடை அதிகரிப்பதால் பலரும் சிரமப்படுகின்றனர். அலுவலகம் அல்லது பணியிடத்தில் மணிக்கணக்கில் அமர்ந்திருப்பதால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 20, 2023, 03:48 PM IST
  • உடல் எடை அதிகரிப்பதால் பலரும் சிரமப்படுகின்றனர்
  • மணிக்கணக்கில் அமர்ந்தே வேலை பார்ப்பதன் எதிரொலி
  • உடல்நல பிரச்சனைகள் ஏற்படக் காரணம் எடை அதிகரிப்பு
உடல் எடையை சட்டுன்னு குறைக்கும் மேஜிக்கல் பானங்கள்! சிம்பிள் வெயிட் லாஸ் டிப்ஸ் title=

உடல் பருமன் என்பது இன்று பலரையும் தொந்தரவு செய்யும் பிரச்சனைகளில் ஒன்றாகும். எடையை கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம். ஆனால் அதிகரித்து வரும் வேலை அழுத்தம் காரணமாக, உடல் பருமன் அதிகமாவதால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. எடை குறைய வேண்டும் என்பதே பலரின் நோக்கமாக இருக்கிறது. இந்த லட்சியத்தை அடைய காலையில் குடிக்கும் சில பானங்கள் உதவும்.
 
எடை இழப்புக்கு பானங்கள்
இன்றைய காலகட்டத்தில் உடல் எடை அதிகரிப்பதால் பலரும் சிரமப்படுகின்றனர். அலுவலகம் அல்லது பணியிடத்தில் மணிக்கணக்கில் அமர்ந்திருப்பதால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதில் முக்கியமான ஒன்று உடல் எடை அதிகரிப்பு என்றால், அதைத் தவிர பல உடல்நலப் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.

உடல் பருமன் ஒரு தீவிர பிரச்சனை, இது பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். எதிர்காலத்தில் எந்த விதமான பிரச்சனையும் வராமல் இருக்க, எடை அதிகரிப்பதை சரியான நேரத்தில் கட்டுப்படுத்துவது அவசியம்.

எடையைக் குறைக்க பெரும்பாலானவர்கள் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். சிலர் உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றினால், பலர் ஜிம்மில் மணிக்கணக்கில் வியர்வையை சிந்துகிறார்கள். நீங்களும் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், இந்த பானங்களை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | கறிவேப்பிலை: தலை முதல் கால் வரை.... ஒரே இலை ஓராயிரம் நன்மைகள்

சோம்பு தேநீர்: பெருஞ்சீரகம் என்றும் அழைக்கப்படும் சோம்பு செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க சிறந்தவை. உங்கள் எடை இழப்பு பயணத்தில் சோம்பு தேநீர் உங்களுக்கு நல்ல தோழனாக இருக்கும்.  

ஓம இலை தேநீர்: வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு செலரி எனப்படும் ஓம இலை மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், நீங்கள் செலரி தண்ணீரை குடிக்கலாம். ஓம விதைகள் அதன் பண்புகள் காரணமாக பல பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது. அதேபோல, ஓல இலையும் பசியைக் கட்டுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும், எடையைக் குறைக்கவும் உதவுகிறது.

இஞ்சி எலுமிச்சை பானம்: உடல் எடையை குறைக்க, நீங்கள் இஞ்சி எலுமிச்சை பானத்தையும் முயற்சி செய்யலாம். எடை இழப்பு தவிர, இரைப்பை குடல் பிரச்சனைகளுக்கு இந்த பானம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது வீக்கம் மற்றும் பிடிப்புகள் தடுக்க உதவுகிறது.

Weight Loss Drinks

பிளாக் டீ
பிளாக் டீயில் உடல் எடையை குறைக்க உதவும்  (Weight Loss Tips) கலவைகள்  சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளாகும், இது உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதில் அதிக அளவு பாலிபினால்கள் உள்ள பிளாக் டீ உங்கள் உடலை கச்சிதமாக அழகாக மாற்றும்.

காய்கறி ஜூஸ்: எடை இழப்புக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படும் காய்கறிகளின் ஜூஸ் உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு மிகவும் நல்லது. உணவில் குறைந்த கலோரியுள்ள காய்கறிகளை சேர்த்துக் கொள்கிறோம். ஆனால், அதை ஜூஸாக செய்து குடிக்கும்போது, ஊட்டச்சத்துக்கள் குறையாமல் அப்படியே உடலுக்கு வந்து சேரும். இது உடல் எடையை குறைப்பதோடு, உடல் நலனுக்கும் நல்லது.

மேலும் படிக்க | சிறுநீரகத்தில் சேரும் நச்சுக்களை அகற்றும் ‘சூப்பர்’ பானங்கள்... தயாரிக்கும் முறை..!

ஆப்பிள் வினிகர்: சாப்பிடுவதற்கு முன், ஒரு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை தண்ணீரில் கலந்து குடிக்கவும். இதைச் செய்வதன் மூலம், உங்கள் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கிறது மற்றும் பசி குறைகிறது, இது அதிகப்படியான உணவைத் தவிர்க்க உதவும்.

க்ரீன் டீ
எடை இழப்புக்கு க்ரீன் டீ மிகவும் பிரபலமானது. உடல் எடையை குறைக்க பலர் இதை உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். இதில் கேடசின் எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது, இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் என்று அறியப்படுகிறது.

மேலே குறிப்பிட்ட பானங்களின் செயல்திறன் நபருக்கு நபர் வித்தியாசமாக இருக்கலாம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இவற்றைத் தவிர, சமநிலையான உணவைப் பராமரித்தல், நிறைய தண்ணீர் குடிப்பது மற்றும் வழக்கமான உடற்பயிற்சியை இணைத்தல் ஆகியவை உடல் எடையை நிர்வகிப்பதில் அவசியமானது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.  

(பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | ஈஸியா உடல் எடை குறைக்கணுமா? அப்போ இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News