எச்சரிக்கை... தைராய்டு முதல் சிறுநீரக கல் வரை... அளவிற்கு மிஞ்சிய கீரை நல்லதல்ல

கீரை மிகச்சிறந்த பச்சை இலைக் காய்கறிகளில் ஒன்று. இதில் இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி, கே மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஆனால், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதையும் மறக்கக் கூடாது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 14, 2025, 03:50 PM IST
  • ரத்த சோகையை போக்க, ஹீமோகிளோபினை உருவாக்கும் கீரை அவசியம்
  • அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதையும் மறக்கக் கூடாது.
  • சில உடல் நலப் பிரச்சனைகள் இருப்பவர்கள் கீரை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
எச்சரிக்கை... தைராய்டு முதல் சிறுநீரக கல் வரை... அளவிற்கு மிஞ்சிய கீரை நல்லதல்ல title=

கீரை மிகச்சிறந்த பச்சை இலைக் காய்கறிகளில் ஒன்று. இதில் இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி, கே மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ரத்த சோகையை போக்க, ஹீமோகிளோபினை உருவாக்கும் கீரை அவசியம் நமது டயட்டில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதையும் மறக்கக் கூடாது. 

கீரையை சாப்பிடுவதால், உடலுக்கு வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ஆகியவை கிடைக்கின்றன. இது தவிர, சர்க்கரை நோயாளிகளுக்கு கீரை ஒரு வரப்பிரசாதம். இதை உட்கொண்டால், உங்கள் இரத்த சர்க்கரையும் கட்டுக்குள் இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தமட்டில் கீரையை சாப்பிடுவது அவசியம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதை அதிகமாக உட்கொள்ள ஆரம்பித்தால் பாதிப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதிலும் குறிப்பிட்ட சில உடல் நலப் பிரச்சனைகள் இருப்பவர்கள் கீரை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் அல்லது எச்சரிக்கையுடன் சாப்பிட வேண்டும். அதைப் பற்றி  விரிவாக இந்த கட்டுரையில் அறிந்து கொள்ளலாம்.

சிறுநீரக நோய்

கீரையில் ஆக்சலேட்டுகள் அதிகம் உள்ளது.இது சிறுநீரக கற்களை உருவாக்க காரணமாக இருக்கும். எனவே சிறுநீரக பிரச்சனை அல்லது சிறுநீரக கல் பிரச்சனை இருந்தால், கீரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

தைராய்டு நோயாளி

கீரையில் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை பாதிக்கும் கோயிட்ரோஜெனிக் கூறுகள் உள்ளன. இந்த கூறுகள் தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தி பாதிக்கும் என்பதால், குறிப்பாக ஏற்கனவே தைராய்டு பிரச்சினைகள் இருந்தால், பிரச்சனை தீவிரமடைவதை  தவிர்க்க, தைராய்டு நோயாளிகள் குறைந்த அளவு கீரை உட்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க | ஒரே வாரத்தில் தொப்பை கொழுப்பை குறைக்க உதவும் மசாலா நீர்: குடிச்சு பாருங்க

இரத்தத்தை மெலிக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள்

நீங்கள் இரத்தத்தை மெலிக்கும் மருந்துகளை (டிஸ்ப்ரின் வார்ஃபரின் போன்றவை) எடுத்துக் கொண்டால், கீரையை எச்சரிக்கையுடன் உட்கொள்ளவும். கீரையில் வைட்டமின் கே அதிகம் உள்ளது. இது இரத்தம் உறைவதற்கு உதவுகிறது. அதனால் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம்.

வயிறு தொடர்பான பிரச்சனைகள்

கீரையை உட்கொள்வதால் சிலருக்கு வயிற்றுக் கோளாறு அல்லது அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது.  நார்சத்து அளவிற்கு அதிகமானால், வாயு, அஜீரணம் அல்லது வயிற்றில் வீக்கம் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும்.

ஒவ்வாமை கொண்ட மக்கள்

கீரை எல்லோருக்கும் ஒத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிலருக்கு கீரை ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடும். இதனால் சருமத்தில் வெடிப்பு, அரிப்பு அல்லது செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம். கீரை ஒவ்வாமை இருக்கும் நபர்கள், அதை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | சிக்கன் vs மட்டன் எது உடலுக்குச் சிறந்தது? அதிகமாகச் சாப்பிட வேண்டியது எது..குறைவாகச் சாப்பிட வேண்டியது எது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News