கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துவது கர்ப்பம் ஆவதை தடுக்க பெண்களுக்கு மிகவும் உதவும் எளிதான வழிமுறையாக உள்ளது என்ராலும், அது பாதுகாப்பானது தானா, அதற்கான பகக் விளைவுகள் என்ன என்ற கேள்வியும் எழாமல் இல்லை. பல்வேறு காரணங்களுக்காவும், நோய்க்கான சிகிச்சைக்காகவும் எடுத்துக் கொள்ளும் பிற மாத்திரைகளை போலவே, கருத்தடை மாத்திரைகளுக்கும் பக்க விளைவுகள் உண்டு என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
கருத்தடை மாத்திரைகள் பெரும்பாலான பெண்களுக்கு பாதுகாப்பானது என்றாலும், சில பெண்களுக்கு இதனால் தீவிர பக்க விளைவுகள் ஏற்படலாம் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஹார்மோன் கருத்தடை மாத்திரைகளின் பக்க விளைவுகள்
ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்களால் செய்யப்பட்ட மாத்திரைகள் பெண்களுக்கு இதய நோய்களின் அபாயத்தை இரட்டிப்பாக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரத்தில், யோனியில் வைத்து பயன்படுத்தும் மாத்திரைகள், பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 2.5 மடங்கு மற்றும் மாரடைப்பு அபாயத்தை 3.8 மடங்கு அதிகரிக்கும். இது தவிர, பக்கவாதம் ஏற்படும் ஆபத்து மூன்று மடங்கு அதிகரிக்கிறது.
இதய ஆரோக்கியத்திற்கு ஏற்படும் நேரடி பாதிப்பு
பெண்கள் தேவையற்ற கர்ப்பத்தைத் தவிர்க்க பயன்படுத்தும் கருத்தடை மாத்திரைகள் இதய ஆரோக்கியத்தில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும். சில கருத்தடை முறைகள் பெண்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை நான்கு மடங்கு அதிகரிக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. குறிப்பாக ஏற்கனவே இரத்த அழுத்தம், உடல் பருமன் அல்லது நீரிழிவு போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு, இந்த ஆபத்து இன்னும் பல மடங்கு அதிகரிக்கும்.
இரத்த உறைவு பிரச்சனை
மருத்துவர் ஆலோசனை இல்லாமல் கருத்தடை மாத்திரைகளை நீண்ட காலத்திற்கு எடுத்துக் கொள்வது, இரத்த உறைவு அபாயத்தை அதிகரிக்கலாம் எனவும், குறிப்பாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ள பெண்கள் அல்லது 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இந்த ஆபத்து அதிகம் இருக்கும்.
மார்பகப் புற்று நோய்
கருத்தடை மாத்திரைகளை நீண்ட காலத்திற்கு பயன்படுத்துவது மார்பகப் புற்றுநோய் தாக்கும் அபாயத்தை அதிகரிக்கலாம் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கல்லீரலில் கட்டிகள் ஏற்படும் அபாயம்
கருத்தடை மாத்திரைகளை நீண்ட காலத்திற்கு பயன்படுத்துவது, சில பெண்களுக்கு கல்லீரலில் கட்டிகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
மனச்சோர்வு
கருத்தடை மாத்திரைகள் ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியது என்பதால், சில பெண்களுக்கு இதனால், மனச்சோர்வு மற்றும் மனநிலை மாற்றங்கள் போன்ற பாதிப்புகள் உண்டாகலாம்.
செரிமான பிரச்சனைகள்
கருத்தடை மாத்திரைகளை நீண்ட காலம் தொடர்ந்து பயன்படுத்துவது குமட்டல் மற்றும் இரைப்பை குடல் பிரச்சனைகளை ஏற்படுத்தும். மாத்திரை சாப்பிடும் போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால், பல வித செரிமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
உடல் பருமன்
கருத்தடை மாத்திரைகளை நீண்ட காலம் தொடர்ந்து பயன்படுத்துவது உடலில் நீர் தேக்கத்தை ஏற்படுத்தக் கூடும். இதனால், சில பெண்கள் உடல் பருமன பிரச்சனையை சந்திக்கக் கூடும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | வெயிட் லாஸ் ஆக கொரியர்கள் குடிக்கும் மேஜிக் பானங்கள்! வீட்டிலேயே செய்யலாம்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ