CCTV Footage Of A Man Stuck Between Train And Platform : நம்மில் ரயில் ஏற வேண்டும் என்றால், அந்த ரயிலின் நேரத்திற்கு முன்பே ரயில் நிலையத்திற்கு சென்று அதற்காக காத்துக்கொண்டிருப்போம். ரயில் எடுக்க அரை மணி நேரம் இருந்தாலும் பெட்டி படுக்கையை எல்லாம் அதற்குறிய இடத்தில் வைத்து விட்டு பின்பு ரயில் ஒலி எழுப்பியவுடன், அடுத்து இருக்கும் சில மணி நேர பயணத்திற்கு தயாராகி விடுவோம். ஆனால், அனைவரும் இப்படி இருந்து விடுவதில்லை. ரயில் சரியான நேரத்தில் எடுக்கப்பட்டு விடும் என தெரிந்தும் கூட, ஒரு சிலர் அந்த நேரத்தை தாண்டி வருவதுண்டு. இவர்கள், வேண்டுமென்றே தாமதமாக வருகின்றனரா, அல்லது சூழ்நிலைகள் அவர்களை அப்படி தாமதமாக வர வைக்கிறதா என்பதே தெரியாது. அப்படி ஒரு நபர், அவசரமாக ரயில் பிடிக்க வந்து, கரணம் தப்பினால் மரணம் என்ற தருவாயில் தன் உயிரை காப்பாற்றிக்கொண்டார். அது குறித்த வீடியோதான் இது.
வைரல் சிசிடிவி காட்சிகள்:
இந்த சிசிடிவி காட்சிகள் மும்பையில் உள்ள அந்தேரி ரயில் நிலையத்தில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு தான் ஏற இருந்த ரயிலை பிடிக்க வந்த இளைஞர் ஒருவர் வண்டியில் ஏற முயன்ற போது ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் இருக்கும் பகுதியில் மாட்டிக்கொண்டார்.
Viral video Andheri station Mumbai#ViralVideo #AndheriStation pic.twitter.com/pdScmvgajo
— Yazdani Razvi (@YazdaniRazvi07) February 17, 2025
நல்ல வேளையாக அந்த இளைஞருக்கு அருகில் ரயில்வே அதிகாரி ரயில்வே காவல்துறை அதிகாரி ஒருவர் நின்று கொண்டிருந்தார். ரயிலில் இருந்து நிலை தடுமாறி விழுந்த அந்த இளைஞரை, ரயில் வேகமாக நகர்வதற்கு முன்பு அந்த அதிகாரி துரிதமாக செயல்பட்டு அவரை சட்டென மேலே எழுப்பி விட்டார். சூழலை புரிந்து கொண்டு அந்த அதிகாரி சட்டென செயல்பட்டதால் அந்த இளைஞர் சில சிறு சிராய்ப்புகளுடன் தப்பியிருக்கிறார்.
அந்த வைரலாகும் சிசிடிவி காட்சியில், இளைஞர் கையில் பையுடன் ரயில் ஏற முயற்சி செய்வதும், அதன் பிறகு நிலை தடுமாறி ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் மாட்டிக்கொள்வதும் தெளிவாக பதிவாகி இருக்கிறது. மேலும், அந்த இளைஞரை ரயில்வே காவல் துறை அதிகாரி காப்பாற்றுவதும், அவர் காப்பாற்றிய பிறகு அந்த இளைஞர் நடைமேடையில் இருந்து எழுந்து நிற்பதும் பதிவாகியிருக்கிறது. அதன் பின்னர் அந்த இளைஞருக்கு என்ன ஆச்சோ, ஏதாச்சோ என்று பார்ப்பதற்காக இன்னொரு ரயில் நிலைய காவல் அதிகாரி உள்பட பலர் ஓடோடி வருகின்றனர்.
அதிகாரிக்கு பாராட்டுகள்:
இப்படி ஒருவர் ரயிலுக்கு இடையில் மாட்டிக்கொள்வதும், அவரை ரயில்வே காவல் அதிகாரிகள் காப்பாற்றுவதும் இது முதன்முறையல்ல. தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இது போல பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கின்றன. இந்த சம்பத்திலும் அந்த நபரின் உயிரை காப்பாற்றிய ரயில்வே காவலருக்கு அதிகாரிகள், பொது மக்கள் என பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
ரயில் சென்று விட்டால் என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் ரயில் நிலையத்திற்கு சென்று விட்ட பிறகு ரயிலை தவற விட்டுவிட்டால் அடுத்து எந்த ரயில் நிலையம் இருக்கிறது என்பதை பார்த்து அங்கு செல்ல ஆயத்தமாக வேண்டும். அப்படி இல்லையென்றால், ரயிலை விட்டது விட்டதுதான் என்று நினைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்று விடுங்கள். ரயில் கிளம்புவதற்கு 3 மணி நேரம் இருக்கும் முன்பு டிக்கெட்டை கேன்சல் செய்து விட்டால் பணமும் பாதி வர வாய்ப்பிருக்கிறது. எப்போதும் ஓடும் ரயிலில் மட்டும் ஏற எத்தணிக்காதீர்கள்.
மேலும் படிக்க | பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி, தூக்கி வீசப்பட்ட முதியவர்கள்!
மேலும் படிக்க | மாரடைப்பால் உயரிழந்த 8 வயது சிறுமி!! அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ