Central Government Employees Latest News: மத்திய அரசு ஊழியரா நீங்கள்? இந்த செய்தி உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். அரசாங்கம் சில முக்கிய விதிகளில் மாற்றங்களை செய்துள்ளது.
Central Government pensioners Latest News: 7வது ஊதியக்குழுவின் கீழ் சம்பளம் பெறும் மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களும் இந்த விதிகளை கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும். இல்லையெனில், சில சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை நிறுத்தப்படும் ஆபத்தும் நேரிடலாம். அரசு சமீபத்தில் செய்துள்ள மாற்றங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. இது சில ஊழியர்களுக்கு அதிர்ச்சியையும் அளிக்கலாம். இந்த செய்தி ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை பற்றியது. பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் தொடர்பான விதிகளை அரசாங்கம் மாற்றியுள்ளது. அந்த விதி மாற்றங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தங்களுக்கான கடமைகளை செய்யாமல், விதிகளைப் புறக்கணிக்கும் ஊழியர்கள் மிகப்பெரிய இழப்புகளை சந்திக்க நேரிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
7வது ஊதியக்குழுவின் கீழ் சம்பளம் பெறும் மத்திய அரசு ஊழியர்கள் இந்த விதிகளை கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும். இல்லையெனில், 7வது சம்பளக் குழுவின் கீழ் ஊழியர்கள் பெறும் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பெறும் ஓய்வூதியத்தை இழக்க நேரிடும். மத்திய அரசு ஊழியர்கள் எந்த வித பிரச்சனைகளையும் எதிர்கொள்ளாமல் இருக்க, அவர்கள் புதிய விதிகளை அறிந்திருக்க வேண்டும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டி தொடர்பான விதிகள் குறித்து கடுமையான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இது கோடிக்கணக்கான ஊழியர்களையும் ஓய்வூதியதாரர்களையும் பாதிக்கும். சமீபத்தில் இது தொடர்பான அறிவுறுத்தல்கள் அரசாங்கத்தால் பிறப்பிக்கப்பட்டன. இதன்படி, ஊழியர்கள் பணியிடத்தில் தவறாக நடந்துகொள்வது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அத்தகைய ஊழியரின் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை நிறுத்தப்படும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு இதற்கான ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, அரசு ஊழியர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, ஊழியர்கள் தங்கள் பணியில் அலட்சியமாக இருப்பது கண்டறியப்பட்டால், ஓய்வு பெற்ற பிறகு அவர்களது ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதி அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும். இந்த விதிகளை மாநில அரசுகளும் வரும் காலங்களில் அமல்படுத்தக்கூடும் என கூறப்படுகின்றது.
மத்திய குடிமைப் பணிகள் ஓய்வூதிய விதிகள் 2021 இன் கீழ் அரசாங்கம் சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விதிகளில் 8 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனுடன், புதிய விதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. மத்திய அரசு ஊழியர்கள் தங்க்ள் பணியின் போது ஏதேனும் கடுமையான குற்றத்தில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டால், ஓய்வு பெற்ற பிறகு அவர்களது பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அனைத்து துறைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை நிறுத்தும் உரிமை யாருக்கெல்லாம் வழங்கப்பட்டுள்ளது? ஓய்வுபெற்ற பணியாளரை நியமிக்கும் நியமன அதிகாரத்தின் ஒரு பகுதியாக இருக்கும் அதிகாரிக்கும், பணிக்கொடை மற்றும் ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்கும் அதிகாரம் உள்ளது.
அதேபோல், ஊழியர் எந்த அமைச்சகத்தின் கீழ் நியமிக்கப்படுகிறாரோ அந்த அமைச்சகத்தின் செயலாளருக்கு ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை நிறுத்த உரிமை உண்டு. தணிக்கை மற்றும் கணக்குத் துறையிலிருந்து ஓய்வு பெற்ற ஊழியர்களின் பணிக்கொடை மற்றும் ஓய்வூதியத்தை நிறுத்த CAG-க்கு உரிமை உண்டு.
மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய விதிகளின்படி, பணியின் போது ஊழியர்கள் மீது ஏதேனும் துறை அல்லது நீதித்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அது குறித்த தகவல்களையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற பிறகு ஒப்பந்தத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் இந்த விதி பொருந்தும்.
ஒரு ஊழியர் பணி ஓய்வு பெற்று, ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை பெற்ற பின்னர் அவர் பணிக்காலத்தில் செய்த தவறு நிரூபிக்கப்பட்டால், அரசு அவரிடமிருந்து பணத்தை மீட்டெடுக்க முடியும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், UPSC-யிடமிருந்து பரிந்துரைகளைப் பெற வேண்டும். அதே நேரத்தில், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9000 ஆக இருக்கும்போது மட்டுமே ஓய்வூதியத்தை நிறுத்த முடியும்.
7வது ஊதியக் குழுவின் கீழ் அரசின் இந்தப் புதிய விதியின்படி, ஒரு ஊழியரின் ஓய்வூதியம் அல்லது கிராஜுவிட்டி நிறுத்தப்பட்டாலோ அல்லது குறைக்கப்பட்டாலோ, அந்த ஊழியருக்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட விதி 44ன் படி மாதம் ரூ.9000 குறைந்தபட்ச நிலையான தொகை வழங்கப்படும்.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இந்த விதிகளை பற்றி முழுமையாக அறிந்திருக்க வேண்டியது மிக அவசியமாகும். இதன் மூலம் அவர்கள் பணியில் முழு கவனம் செலுத்தி, ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையில் எந்த வித சிக்கலும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம்,
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.