Director Vetrimaran: விடுதலை படத்திற்காக இயக்குனர் வெற்றிமாறனுக்கு CAIB விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது எனக்கு ஊக்கம் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
வருடா வருடம் தமிழ் திரையுலகை சேர்ந்த சிறந்த படம், சிறந்த இயக்குனர்கள், கலைஞர்கள, தொழில்நுட்ப கலைஞர்களுக்கு CHENNAI INSTITUTE OF EDUCATIONAL TECHNOLOGY & RESEARCH சார்பாக CINEMA AT ITS BEST (CAIB) விருதுகள் வழங்கி கௌரவிப்பது வழக்கம்.
தற்போது இதன் தொடர்ச்சியாக 7ம் ஆண்டாக 2024 ம் ஆண்டிற்கான CAIB விருதுகள் விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் வினோத் ஜெயராமன் CINEMA AT ITS BEST-யின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் CAIB விருதுகளின் தலைமை நடுவர் கலைச்செல்வன் ஆகியோர் தலைமையில் விருதுகள் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் இயக்குனர் வெற்றிமாறன், சித்தார்த் விஷ்வநாத், CH சாய், கானா காதர் மற்றும் பல தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டு விருதுகளை வென்றனர்.
இந்த விருது விழாவில் வெற்றிமாறன் பேசுகையில், விடுதலை திரைப்படம் எனக்கு மிகவும் முக்கியமான ஒரு திரைப்படம். என்னை இன்னும் மென்மேலும் மெருகேற்றிக்கொள்ள வேண்டும் என நினைக்க வைக்கும் ஒரு திரைப்படம். இந்தப் படத்திற்காக விருதளித்த ஜூரிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருது எனக்கு ஊக்கத்தை தருகிறது என்று தெரிவித்தார்.